டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கிற்கு புதிய நிறத்தேர்வு பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

டிவிஎஸ் நிறுவனம் ஒவ்வொரு மாதத்திலும் அதிகளவில் விற்பனை செய்யும் மாடலாக எக்ஸ்.எல்100 உள்ளது. மிகுந்த நம்பகத்தன்மை, எரிபொருள் திறன் மற்றும் வேற லெவல் செயல்திறன்களுடன் கமர்ஷியல் பயன்பாட்டிற்கும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ள இது, டிவிஎஸ் நிறுவனத்தின் மலிவான தயாரிப்புகளுள் ஒன்றாக விளங்குகிறது.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

தற்சமயம் மிண்ட் நீலம், லஸ்டர் கோல்டு, சிவப்பு கருப்பு மற்றும் க்ரே கருப்பு என்கிற நிறத்தேர்வுகளில் டிவிஎஸ் எக்ஸ்.எல்100 விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் கம்ஃபர்ட், ஹெவி ட்யூட்டி, ஹெவி ட்யூட்டி ஐ-டச் ஸ்டார்ட் வின் எடிசன், ஹெவி ட்யூட்டி ஐ-டச் ஸ்டார்ட் மற்றும் கம்ஃபர்ட் ஐ-டச் ஸ்டார்ட் என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் எக்ஸ்.எல்100 விற்பனைக்கு கிடைக்கிறது.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!
Model Ex-Showroom Price
Comfort ₹41,015
Heavy Duty ₹43,535
Heavy Duty i-Touchstart Win Edition ₹49,224
Heavy Duty i-Touchstart ₹49,564
Comfort i-Touchstart ₹52,334

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.41,015இல் இருந்து ரூ.52,334 வரையில் உள்ளன. இதில் டாப் வேரியண்ட்டிற்கு தான் கோரல் சில்க் என்ற பெயரில் புதிய பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. குறைந்த எரிபொருள் செலவு & பராமரிப்பு செலவினால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ள டிவிஎஸ் எக்ஸ்.எல் மாடல் இந்தியாவின் முதுக்கெலும்புகளான கிராம புறங்களிலும், சிறு நகரங்களிலும் தான் அதிகளவில் வாங்கப்படுகின்றன.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

உயரமான ஹேண்டில்பார், ஒற்றை இருக்கை அமைப்பு மற்றும் மெல்லியதான டயர்கள் இவை தான் டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கின் அடையாளங்களாகும். 86 கிலோ எடை கொண்ட இந்த கமர்ஷியல் இருசக்கர வாகனத்தில் அதிகப்பட்சமாக 130 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல முடியும் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க் வெறும் 4 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்படுகிறது. இதன் டாப் வேரியண்ட்டான கம்ஃபர்ட் ஐ-டச் ஸ்டார்ட்-இல் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது. இது உடனடி என்ஜின் ஸ்டார்ட்டிற்கும், அமைதியான என்ஜின் ஸ்டார்ட்டிற்கும் வழிவகுக்கிறது.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

பைக்கின் முன்பக்கத்தில் எல்இடி ஸ்ட்ரிப் உடன் வட்ட வடிவிலான ஹலோஜன் ஹெட்லேம்ப், டர்ன் இண்டிகேட்டர்களுடன் வழங்கப்பட்டுள்ளன. பொருட்களை வைப்பதற்கு எக்ஸ்.எல்100-இல் நன்கு பெரிய ஃபுட்போர்டு மற்றும் இரு பக்கங்களிலும் பயணிகள் கால்களை வைப்பதற்கான இடவசதி உடன் இந்த டிவிஎஸ் தயாரிப்பில் சவுகரியத்தில் எந்தவொரு குறையும் இல்லை.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

அனலாக் வேகமானி மற்றும் ஓடோமீட்டர் உடன் எக்ஸ்.எல்100 பைக்கில் மிகவும் அடிப்படை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது. ரூ.41 ஆயிரம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இதன் கம்ஃபர்ட் வேரியண்ட்டில் கூட யுஎஸ்பி போன் சார்ஜிங் மற்றும் எக்ஸாஸ்ட் குழாயில் க்ரோம் பூச்சு வழங்கப்படுகின்றன.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் 99.7சிசி பிஎஸ்6, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட், 4-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 4.3 எச்பி மற்றும் 3,500 ஆர்பிஎம்-இல் 6.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிங்கிள்-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

ப்ரேக்கிங் பணியினை இருசக்கரங்களிலும் ட்ரம் ப்ரேக்குகள், இணைக்கப்பட்ட ப்ரேக்கிங் சிஸ்டத்துடன் கவனித்து கொள்கின்றன. சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் வழக்கமான டெலெஸ்கோபிக் அமைப்பும், பின்பக்கத்தில் இரட்டை ஹைட்ராலிக் சுருள்களும் வழங்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

பொத்தானை அழுத்தினால் என்ஜின் ஸ்டார்ட் ஆகும் வசதி எக்ஸ்.எல்100 மாடலின் கம்ஃபர்ட் & ஹெவி ட்யூட்டி என இரு விதமான வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில், கொரோனா ஊரடங்கு சூழலை கருத்தில் கொண்டு எக்ஸ்.எல்100 பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு மாதத்தவணை திட்டங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்கில் புதிய கோரல் சில்க் நிறம் அறிமுகம்!! தீபாவளிக்கு ஒண்ணு வாங்கி போடலாம்!!

இதன்படி, குறைந்த முன் தொகையாக வெறும் ரூ.7,999-ஐ செலுத்தி எக்ஸ்.எல்100 பைக்கை ஓட்டி செல்லலாம். குறைந்த மாதத்தவணை திட்டமாக, மாதத்திற்கு ரூ.1,470 என்பது தற்சமயம் உள்ளது. அதேநேரம் 6 மாத தவணை விடுமுறையையும் டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஊரடங்கினால் அதிகப்பட்சமாக 6 மாத காலத்திற்கு தகுதிப்பெற்ற வாடிக்கையாளர்கள் மாதத்தவணை தொகையை செலுத்தாமல் தாமதப்படுத்தி கொள்ள முடியும்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
New TVS XL100 Coral Silk Colour Option Launched.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X