2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

அப்டேட் செய்யப்பட்ட 2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் ரூ.1,33,840 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமானதாக விளங்கும் 200சிசி மோட்டார்சைக்கிள்களுள் டிவிஎஸ் அப்பாச்சி200 4வி மாடலும் ஒன்றாகும். நமது தமிழகத்தில் ஓசூரில் தயாரிக்கப்படும் இந்த அப்பாச்சி பைக் இந்தியா மட்டுமின்றி சில உலக நாடுகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் இரட்டை-சேனல் ஏபிஎஸ் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் இந்த டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,33,840 என்பது சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டின் விலையாகும். அதாவது 2022 அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கின் ஆரம்ப விலையாகும்.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

இரட்டை-சேனல் ஏபிஎஸ் வெர்சனின் விலை ரூ.1,38,890 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக புதிய அப்பாச்சி200 4வி பைக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள் (DRL)-உடன் புதிய டிசைனில் ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் முன்பக்கம் புதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

இத்தகைய முன்பக்கத்தை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் காணலாம். இந்த புத்துணர்ச்சியான ஹெட்லேம்ப் அமைப்பை தவிர்த்து 2022 அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கின் மற்ற அம்சங்கள் எதிலிலும் கை வைக்கப்படவில்லை. இதனால் பைக்கின் மற்ற ஸ்டைலிங் வளைவுகள் மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் அப்படியே தொடருகின்றன.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

இதன் காரணமாக 2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 பைக்கிலும் ஸ்போர்ட், நகர்புறம் மற்றும் மழை என்ற மூன்று ரைடிங் மோட்கள், ப்ரீலோடு-அட்ஜெஸ்ட் வசதி உடன் ஷோவா முன்பக்க சஸ்பென்ஷன், ஷோவா பின்பக்க மோனோ-ஷாக், டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ப்ரேக்குகள் மற்றும் க்ளட்ச் லிவர்கள் உள்ளிட்டவை தொடர்ந்துள்ளன.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கில் 197.75சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு, ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 20.82 பிஎஸ் மற்றும் 7,800 ஆர்பிஎம்-இல் 17.25 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

பளபளப்பான கருப்பு, முத்தின் வெள்ளை மற்றும் மேட் கருப்பு என்கிற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் 2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட உள்ளது. மற்றப்படி அப்டேட் செய்யப்பட்ட இந்த புதிய அப்பாச்சி பைக்கின் எப்போது துவங்கும் என்பது உள்ளிட்ட விபரங்கள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டிவிஎஸ் தமிழகத்தில் புதிய தொழிலுக்காக 1,200 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. எதிர்கால தொழிற்நுட்பங்கள் மற்றும் மின்சார வாகனங்களில் முதலீடு செய்யும் பொருட்டு இந்த பெரும் தொகையை டிவிஎஸ் நிறுவனம் ஒதுக்கி இருக்கின்றது.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த நவ.23ஆம் தேதி கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் தமிழக முதல்வர் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் மின் வாகன உற்பத்தியை தொடங்கி இருக்கின்றது.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

இத்துடன் இன்னும் சில இவி ஸ்டார்ட்-அப் வாகனங்களும் தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு பணிகளை துவங்கி வருகின்றன. இதற்கிடையில் டிவிஎஸ் மோட்டார் போன்ற ஜாம்பவான்களும் இவி தயாரிப்பில் இறங்கி வருகின்றன. இவ்வாறு பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க தமிழகத்தை நாடி வருவதால், இந்தியாவின் வருங்கால மின் வாகன உற்பத்தி மைய புள்ளியாக தமிழகம் மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

2022 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.1,33,840

நாட்டில் கடந்த சில வருடங்களாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நால் அதிகரித்து வருகின்றது. இதை உணர்ந்து முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தொடங்கி ஆரம்ப நிலை எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கல் வரையில் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருகின்றன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company launches the 2022 TVS Apache RTR 200 4V equipped with DRL headlamp.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X