Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடனான போட்டியைச் சமாளிக்க டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் மாடல் ஸ்கூட்டரில் புதிய குறைந்த விலை வேரியண்டை அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் அதன் ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலில் குறைந்த விலை வேரியண்டை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரான ஆக்டிவா உடனான போட்டியைச் சமாளிக்கும் நோக்கில் இந்த குறைந்த விலை வேரியண்டை டிவிஎஸ் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஜூபிடர் இருக்கின்றது.

இந்த மாடலிலேயே எஸ்எம்டபிள்யூ (ஷீட் மெட்டல் ஒயிட் - Sheet Metal White) எனும் புதிய தேர்வினை டிவிஎஸ் அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் அறிமுக விலை ரூ. 63,497 ஆகும். ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த பரீமியம் வசதிக் கொண்ட ஸ்கூட்டர் இக்குறைந்த விலையை டிவிஎஸ் நிர்ணயித்துள்ளது.

இந்த மிகக் குறைந்த விலையை எஸ்எம்டபிள்யூ வேரியண்ட் பெற்றிருக்கின்ற காரணத்தினாலயே ஜூபிடர் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டாக இது மாறியிருக்கின்றது. முன்னதாக 65,497 ரூபாய் என்ற விலையிலேயே இந்த ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு வேரியண்ட் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. ஆகையால், அப்போது இதுவே ஆரம்ப விலை வேரியண்டாக காட்சியளித்து வந்தது.

ஆனால், இந்த நிலையை மாற்றியமைக்கும் விதமாக எஸ்எம்டபிள்யூ எனும் குறைந்த விலை தேர்வை டிவிஎஸ் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த புதுமுக தேர்வின் வரவுடன் சேர்த்து தற்போது ஐந்து விதமான தேர்வுகளில் டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதாவது, ஸ்டாண்டர்டு, இசட்எக்ஸ், இசட்எக்ஸ் டிஸ்க் மற்றும் கிளாசிக் ஆகிய தேர்வுகளில் மட்டுமே ஜூபிடர் கிடைத்து வந்தது. இந்த வரிசையிலேயே எஸ்எம்டபிள்யூ புதிய வேரியண்டாக சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த வேரியண்ட் 110 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7.4 எச்பி மற்றும் 8.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இத்துடன், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், யுஎஸ்பி சார்ஜர் பாயிண்ட், எஸ்பிடி (Synchronised Braking System), ஆகிய பிரீமியம் வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், சிறப்பான வழங்கும் விதமாக 90/90- 12 54 J ட்யூப் லெஸ் டயர்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இந்த சிறப்பு வசதிகளை இது பெற்றிருக்கின்ற காரணத்தினாலயே ஜூபிடர் ஓர் பிரீமியம் வசதிக் கொண்ட ஸ்கூட்டராக பார்க்கப்படுகின்றது. இது ஹோண்டா ஆக்டிவா 6ஜி 110சிசி ஸ்கூட்டருக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.