பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பில் 1 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு ஓசூரில் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்பட்டு டிவிஎஸ் 2-வீலர்ஸ் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

டிவிஎஸ் இருசக்கர வாகனங்கள் மட்டுமல்ல, கூட்டணி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் சில மோட்டார்சைக்கிள்களும் இந்த ஓசூர் தொழிற்சாலையில் உருவாக்கப்படுகின்றன. இதன்படி தயாரிக்கப்பட்டு வந்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் 310 ஜிஎஸ் பைக்குகளின் தயாரிப்பு எண்ணிக்கையில் 1 லட்சத்தை டிவிஎஸ் நிறுவனம் கடந்துள்ளது.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

பிஎம்டபிள்யூ 310சிசி இரட்டை பைக்குகளின் இந்த 1 லட்ச யூனிட்கள் மொத்தமும் இந்திய சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டவை அல்ல. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். இந்தியாவில் மலிவான பிஎம்டபிள்யூ பைக்குகளாக விளங்கும் இவை இரண்டும் சுமார் 120 நாடுகளில் விற்பனையில் உள்ளன.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

டிவிஎஸ் உருவாக்கியிருக்கும் 1 லட்ச யூனிட்கள் என்பது இதுவரையில் உலகளவில் தயாரிக்கப்பட்டுள்ள ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகளின் மொத்த எண்ணிக்கையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே ஆகும். அப்படியென்றால் இந்த விலை குறைவான பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு உலகளவில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

1 லட்சமாவது 310சிசி பிஎம்டபிள்யூ பைக் வெளியேற்றப்படுவதை முன்னிட்டு டிவிஎஸ்-இன் ஓசூர் தொழிற்சாலையில் ஓர் சிறு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனரும் சிஇஓ-வுமான கேஎன் ராதா கிருஷ்ணன் பேசுகையில், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் உடனான எங்கள் பயணத்தில் இன்று ஒரு வரலாற்று மைல்கல்லை அடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

இந்த சாதனை எங்கள் எட்டு ஆண்டு கூட்டணியின் வெற்றிக்கு வலுவான சான்றாகும். இது இரு நிறுவனங்களுக்கும் பொதுவான கற்றல் தளத்தை உருவாக்கியுள்ளது என்றார். பிறகு பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மார்கஸ் ஷ்ராம் கூறுகையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடனான எங்கள் வலுவான ஒருங்கிணைப்பு துணை-500சிசி பிரிவில் ஈர்க்கக்கூடிய சலுகைகளை உருவாக்க வழிவகுத்துள்ளது என்றார்.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து டிவிஎஸ் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனங்கள் கூட்டணியில் உள்ளன. துணை-500சிசி (500சிசி வரையில்) மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் பொருட்டு இந்த கூட்டணி ஏற்படுத்தி கொள்ளப்பட்டது. இந்த கூட்டணியில் மூன்று தயாரிப்புகள் இதுவரையில் வெளிவந்துள்ளன.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

தற்போது தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்துள்ள பிஎம்டபிள்யூ ஜி310 ஆர், ஜி310 ஜிஎஸ் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 என்பவை தான் இவை மூன்றும் ஆகும். ஒரே ஓசூரில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவதால் இவை மூன்றிலும் ஒரே மாதிரியான 310சிசி என்ஜினே பொருத்தப்படுகிறது.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

இவற்றின் 312சிசி, சிங்கிள்-சிலிண்டர், நீர்-கூல்டு பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 9750 ஆர்பிஎம்-இல் 34 பிஎச்பி மற்றும் 7000 ஆர்பிஎம்-இல் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவற்றுடன் ரைடு-பை-வயர் தொழிற்நுட்பமும் என்ஜின் & டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

இதில் பிஎம்டபிள்யூ இரட்டை பைக்குகளில் க்ளட்ச் லிவர்கள் மற்றும் ஹேண்ட் ப்ரேக் லிவர்கள் நான்கு நிலைகளில் அட்ஜெஸ்ட்மெண்ட்டை கொண்டுள்ளன. இவை மூன்றும் ஒவ்வொரு விதமான மோட்டார்சைக்கிள்களாகும். அதாவது பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் ஆனது அதிகளவில் பேனல்கள் இல்லாத நாக்டு மோட்டார்சைக்கிளாகும். அதுவே ஜி310 ஜிஎஸ், அட்வென்ச்சர் பைக் மற்றும் டிவிஎஸ் ஆர்ஆர்310, ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள்.

பிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

இதில் பெரும்பாலான இந்திய இளைஞர்களின் கனவு பைக்காக விளங்கும் அப்பாச்சி ஆர்ஆர்310-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.54 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையும் கிட்டத்தட்ட இதே ரூ.2.50 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது. ஆனால் ஜி310 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்கின் விலை தான் சற்று அதிகமாக ரூ.2.90 லட்சமாக உள்ளது.

Most Read Articles
English summary
TVS Motor Company rolls out the 100,000 unit of the BMW 310cc series motorcycle from Hosur Facility.
Story first published: Thursday, October 14, 2021, 23:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X