அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

டிவிஎஸ் நிறுவனம் வரும் அக்டோபர் 7ம் தேதி தரமான சம்பவம் ஒன்றை செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

டிவிஎஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் ரைடர் 125 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புத்தம் புதிய பைக்கிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு புதிய தயாரிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டிவிஎஸ் நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

இந்த புதிய தயாரிப்பு வரும் அக்டோபர் 7ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆனால் இந்த புதிய இரு சக்கர வாகனம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் டிவிஎஸ் நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது. எனினும் இந்த புதிய தயாரிப்பு 125 சிசி ஸ்கூட்டராக இருக்கலாம் என உறுதியாக நம்பப்படுகிறது.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

அதிலும் குறிப்பாக இந்த புதிய தயாரிப்பு, ஜூபிடர் 125 ஸ்கூட்டராக இருக்கலாம் என ஆட்டோமொபைல் துறையினர் அடித்து கூறுகின்றனர். இதற்கு காரணங்கள் உள்ளது. டிவிஎஸ் நிறுவனம் 125 சிசி கம்யூட்டர் செக்மெண்ட்டில் 2 புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் உலா வந்து கொண்டிருந்தன.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

அதற்கு ஏற்றபடி ரைடர் 125 பைக்கை டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் இரண்டாவது தயாரிப்பு டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டராகதான் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தது. எனவே வரும் அக்டோபர் 7ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய தயாரிப்பு, டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால், புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர், இந்த செக்மெண்ட்டில் ஹோண்டா ஆக்டிவா 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் சுஸுகி ஆக்ஸெஸ் 125 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுடன் நேரடியாக போட்டியிடும். டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஜூபிடர் 125 ஸ்கூட்டராக இருக்கலாம் என்பதற்கு மேலும் ஒரு சில காரணங்களும் இருக்கிறது.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய இரு சக்கர வாகன அறிமுகத்திற்கான அழைப்பிதழில், Come Experience The More' என்ற டேக்லைனை பயன்படுத்தியுள்ளது. அனேகமாக ஜூபிடர் 125 வாடிக்கையாளர்கள், பவர், டார்க், வசதிகள் என அனைத்திலும் இன்னும் அதிகமாக (More) பெறுவார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்த டேக்லைன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

அத்துடன் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இரு சக்கர வாகனத்தின் எல்இடி டிஆர்எல்-களையும் டிவிஎஸ் நிறுவனம் தனது டீசர் புகைப்படத்தில் பகிர்ந்துள்ளது. இந்த எல்இடி டிஆர்எல்கள் ஒருவேளை ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் முன் பக்க அப்ரானின் மீது பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

இது டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டராக இருக்கும்பட்சத்தில், 124.8 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூயல்-இன்ஜெக்டட் இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,000 ஆர்பிஎம்மில் 9.1 பிஹெச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 10.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

வரும் காலங்களில் இந்தியாவின் 125 சிசி டூவீலர் செக்மெண்ட் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் அதிக டூவீலர்களை வைத்துள்ள நிறுவனங்கள் நிறைய லாபம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக இந்த செக்மெண்ட்டில் டிவிஎஸ் நிறுவனம் வலுவாக காலூன்றி கொள்ள திட்டமிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

அதற்கேற்ற வகையில், டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள ரைடர் 125 பைக்கிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். இதன் டிசைன் இளைஞர்களை அதிகமாக கவரும் வகையில் உள்ளது. அத்துடன் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் செயல்திறனும் கூட அமர்க்களப்படுத்துகிறது.

அக்டோபர் 7ம் தேதி எப்ப வருமோ? அடுத்த சம்பவத்தை செய்ய போகும் டிவிஎஸ்... கதிகலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

இந்த பைக்கை ஏற்கனவே நாங்கள் டெஸ்ட் ரைடு செய்து விட்டோம் என்பதால் இதனை கூறுகிறோம். வரும் காலங்களில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு புத்தம் புதிய ரைடர் 125 பைக் ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs motor company to launch a new two wheeler on october 7th here are all the details
Story first published: Friday, September 24, 2021, 23:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X