ஆச்சரியம்... இருசக்கர வாகன விற்பனையில் கெத்து காட்டும் தமிழக நிறுவனம்... அடேங்கப்பா இப்படி வளர்ச்சியா!!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் நிறுவனம், விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆச்சரியம்... இருசக்கர வாகன விற்பனையில் கெத்து காட்டும் தமிழக நிறுவனம்... அடேங்கப்பா இப்படி வளர்ச்சியா!!

பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் விற்பனையில் புதிய விற்பனை வளர்ச்சியை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனம், திங்கள்கிழமை வெளியிட்ட தகவலின்படி, 31 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

ஆச்சரியம்... இருசக்கர வாகன விற்பனையில் கெத்து காட்டும் தமிழக நிறுவனம்... அடேங்கப்பா இப்படி வளர்ச்சியா!!

அதாவது, ஒட்டுமொத்தமாக தான் 3,07,149 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாத விற்பனையுடன் ஒப்பிடுகையிலேயே 31 சதவீத அதிக விற்பனை வளர்ச்சியாக இருக்கின்றது.

ஆச்சரியம்... இருசக்கர வாகன விற்பனையில் கெத்து காட்டும் தமிழக நிறுவனம்... அடேங்கப்பா இப்படி வளர்ச்சியா!!

2020 ஜனவரியில் இந்நிறுவனம் 2,34,439 யூனிட்டு இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. ஆனால், இந்த ஆண்டோ இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே 2,94,596 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2020 ஆண்டில் 2,20,439 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆச்சரியம்... இருசக்கர வாகன விற்பனையில் கெத்து காட்டும் தமிழக நிறுவனம்... அடேங்கப்பா இப்படி வளர்ச்சியா!!

இவ்வாறு, கடந்த ஆண்டு விற்பனைகளையுடன் நடப்பாண்டின் ஜனவரி மாத இருசக்கர வாகன விற்பனையை ஒப்பிட்டு பார்த்தால் கணிசமான விற்பனை வளர்ச்சியை டிவிஎஸ் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இது கொரோனா காலத்தில் பெரும் விற்பனை பின்னடைவைச் சந்தித்து வந்த டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஓர் ஊக்கமளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

ஆச்சரியம்... இருசக்கர வாகன விற்பனையில் கெத்து காட்டும் தமிழக நிறுவனம்... அடேங்கப்பா இப்படி வளர்ச்சியா!!

உள்நாட்டு சந்தை விற்பனை நிலவரப்படி 2,05,216 யூனிட்டுகள் வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஆமாங்க, தற்போதைய 2,94,596 யூனிட் விற்பனையில் 2,05,216 யூனிட்டு இரு சக்கர வாகனங்களை உள் நாட்டு சந்தையில் மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது.

ஆச்சரியம்... இருசக்கர வாகன விற்பனையில் கெத்து காட்டும் தமிழக நிறுவனம்... அடேங்கப்பா இப்படி வளர்ச்சியா!!

இதுவே 2020 ஆண்டில் பார்த்தோமேயானால் ஒட்டுமொத்தமாக 1,63,007 யூனிட் வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் உள்நாட்டு இருசக்கர வாகன சந்தையில் விற்பனைச் செய்திருந்தது. புதுமுக வரவு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய வாகனங்களைக் களமிறக்கியதன் காரணத்தினால் டிவிஎஸ் நிறுவனம் நல்ல விற்பனை வளர்ச்சியை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெற்றிருக்கின்றது.

ஆச்சரியம்... இருசக்கர வாகன விற்பனையில் கெத்து காட்டும் தமிழக நிறுவனம்... அடேங்கப்பா இப்படி வளர்ச்சியா!!

நாட்டின் மூன்றாம் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக டிவிஎஸ் நிறுவனம் இருக்கின்றது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான உற்பத்தி ஆலைகள் நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தாலும், பிரதான மற்றும் முதன்மையான தயாரிப்பு ஆலையாக தமிழகத்தின் ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலையே இருக்கின்றது. இதன் பிற முக்கிய செயல்பாடுகளும் தமிழகத்தை மையமாகக் கொண்டே செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motor Reveals YoY Sale Report: The Company Gets 31 Percent Sale Growth In 2021 January. Here More Details. Read In Tamil.
Story first published: Tuesday, February 2, 2021, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X