தமிழகத்தில் ரூ.1200 கோடி முதலீடு செய்யும் டிவிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் தமிழகத்தில் புதிய தொழிலுக்காக 1,200 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

உலகின் மிகப் பெரிய இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் இருக்கின்றது. இந்நிறுவனம், மிக விரைவில் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகனமாக மாறும் முயற்சியில் தற்போது களமிறங்கியிருக்கின்றது.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

நிறுவனம், தற்போது டிவிஎஸ் ஐக்யூப் பிரீமியம் தர மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையில், தனது இருசக்கர வாகன உற்பத்தியை மிகப் பெரிய அளவில் விரிவுப்படுத்த இருப்பதாக நிறுவனம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

இதற்காக டிவிஎஸ் நிறுவனம் ரூ. 1,200 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் மின்சார வாகனங்களில் முதலீடு செய்யும் பொருட்டு இந்த பெரும் தொகையை நிறுவனம் ஒதுக்கியிருக்கின்றது. இந்த முதலீடும் தமிழகத்திலேயே செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (நவம்பர் 23) கையெழுத்திடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2021இல் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

இந்த புரிந்துணவர்வு ஒப்பந்தம் மாநிலத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளில் எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும். ஏற்கனவே தமிழகத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் மின் வாகன உற்பத்தியைத் தொடங்கியிருக்கின்றது. இத்துடன், இன்னும் சில ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பணிகளைத் தொடங்கி வருகின்றன.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் மாநிலத்தை மையமாகக் கொண்டு மின்சார வாகன உற்பத்தியை தொடங்க இருக்கின்றது. இந்த நிலை மின் வாகன உற்பத்தியின் மையப் புள்ளியாக தமிழகத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

தொடர்ந்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கான

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தொடர் அர்ப்பணிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த முதலீடு அமைந்திருக்கின்றது. மேலும், நிறுவனம் மின் வாகன உற்பத்தியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதையும் இந்த முதலீடு உறுதி செய்கின்றது.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதை உணர்ந்து முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தொடங்கி ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரை இந்தியாவில் புதுமுக மின்சார வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றன.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போகூட இந்தியாவில் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்க இருப்பதாக மிக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையை மிக வேகமாக வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த மாதிரியான செயல்களில் வாகன உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் மின் வாகன தாகத்தை தீர்த்து வைக்கும் வகையில் பிரீமியம் தர எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஐக்யூப்-ஐ விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதன் விலை ரூ. 1,15,218 ஆகும். அட்வான்ஸ்ட் எலெக்ட்ரிக் டிரைவ்ட்ரெயின் சிஸ்டத்துடன் இந்த ஸ்கூட்டர் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டிவிஎஸ்... முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தம்!

4.4 கிலோவாட்ஸ் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது உச்சபட்சமாக மணிக்கு 78 கிமீ எனம் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இத்துடன் ஒரு முழுமையான சார்ஜில் 75 கிமீ ரேஞ்ஜை தரக்கூடிய பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரங்கள் தேவைப்படும். வழக்கமான பிளக் பாயிண்டு வைத்து சார்ஜ் செய்யும்போதே இந்த அதிகபட்ச நேரத்து அது எடுத்துக் கொள்கின்றது. மிக வேகமாக சார்ஜாக அதிவேக சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs motor to invest rs 1200 crore in tamil nadu for electric vehicle
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X