2020 தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் அணி அசத்தல்!

2020 தேசிய ராலி சாம்பியன்ஷிப் (INRC) போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர்கள் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளனர். கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

 2020 இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் அணி அசத்தல்!

தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்று கர்நாடக மாநிலம் ஹம்பியில் நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் டிவிஎஸ் அணி வீரர்கள் அசத்தினர்.

இறுதிச் சுற்றில் 500சிசி திறனுக்கும் கீழான குரூப் ஏ பிரிவில் டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர் ராஜேந்திரா ஆர்இ முதலிடம் பிடித்தார். 260சிசி வரையிலான திறன் கொண்ட பைக்குகளுக்கான குரூப் பி சூப்பர் ஸ்போர்ட் பிரிவில் சாமுவேல் ஜேக்கப் முதலிடம் பிடித்தார். குரூப் பி ஸ்கூட்டர் க்ளாஸ் பிரிவில் கார்த்திக் முதலிடம் பிடித்தார். குரூப் பி பெண்கள் பைக் பிரிவில் ஐஷ்வர்யா பிஸே முதலிடம் பிடித்து அசத்தினார்.

 2020 இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் அணி அசத்தல்!

தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை டிவிஎஸ் வீரர் ஆர்.நட்ராஜ் பெற்றார். அவரது சக அணி வீரர் சாமுவேல் ஜேக்கப் குரூப் பி சூப்பர் ஸ்போர்ட் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று அசத்தினார்.

 2020 இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் அணி அசத்தல்!

அதேபோன்று, குரூப் பி ஸ்கூட்டர் க்ளாஸ் பிரிவில் பிங்கேஷ் தக்கர் சாம்பியன் பட்டம் வென்றார். குரூப் பி பெண்கள் பைக் பிரிவில் ஐஷ்வர்யா பிஸ்ஸேவும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். மேலும், அனைத்து பிரிவுகளுக்கான ட்யூனர்ஸ் க்ளாஸுக்கான சாம்பியன் பட்டத்தை டிவிஎஸ் அணி பெற்றுள்ளது.

 2020 இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் அணி அசத்தல்!

இந்த தருணம் குறித்து டிவிஎஸ் ரேஸிங் அணி மேலாளர் செல்வராஜ் கூறுகையில்," 2020 தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் நட்ராஜ் மற்றும் சாமுவேல் தங்களது பிரிவுகளில் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் பட்டம் பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. பிங்கேஷ் தனது பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கிறேன்.

 2020 இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் அணி அசத்தல்!

ஐஷ்வர்யாவும் தொடர்ந்து முன்னிலை வகித்து போடியம் ஏறி இருக்கிறார். சாம்பியன் பெறுவதற்கு உறுதுணையாக பைக் மற்றும் ஸ்கூட்டர்களை சிறப்பானதாக பராமரிக்க அயராது உழைத்த டிவிஎஸ் ரேஸிங் அணியை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்," என்று கூறினார்.

Most Read Articles
English summary
TVS Racing crowned the champion at the 2020 Indian National Rally Championship.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X