சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

டிவிஎஸ் ரேடியான் பைக் புதிய அவதாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

டிவிஎஸ் நிறுவனத்தின் ரேடியான் (TVS Radeon) பைக் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த பைக்கில் தற்போது இரண்டு புதிய வண்ண தேர்வுகளை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை காலத்தையொட்டி, விற்பனையை அதிகரிப்பதற்காக டிவிஎஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

டிவிஎஸ் ரேடியான் பைக் தற்போது 2 புதிய ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகளில் கிடைக்கும். சிகப்பு/கருப்பு மற்றும் நீலம்/கருப்பு என 2 புதிய ட்யூயல் டோன் வண்ண தேர்வுகளுடன் டிவிஎஸ் ரேடியான் பைக் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய வண்ண தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை தவிர, டிவிஎஸ் ரேடியான் பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

புதிய வண்ண தேர்வுகளை தவிர்த்து விட்டு பார்த்தால், டிவிஎஸ் ரேடியான் பைக் அப்படியேதான் இருக்கிறது. டிவிஎஸ் ரேடியான் பைக்கில் எல்இடி பகல் நேர விளக்குகள், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. டிவிஎஸ் ரேடியான் பைக்கில், பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமான 109.7 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,350 ஆர்பிஎம்மில் 8.08 பிஎஸ் பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. டிவிஎஸ் ரேடியான் பைக் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 79.3 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சிறந்த மைலேஜை எதிர்பார்ப்பவர்களுக்கு டிவிஎஸ் ரேடியான் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். எரிபொருள் சிக்கனத்தில் தலைசிறந்த பைக்குகளில் ஒன்றாக டிவிஎஸ் ரேடியான் திகழ்வது மிகவும் சிறப்பான விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

அதே நேரத்தில் ஸ்டாண்டர்டு வேரியண்ட்கள் உடன் ஒப்பிடும்போது, டிவிஎஸ் ரேடியான் பைக்கின் இந்த புதிய ட்யூயல்-டோன் வேரியண்ட்களின் விலை சற்றே அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ட்ரம் பிரேக் வேரியண்ட்டின் (ட்யூயல் டோன் வண்ண தேர்வு) விலை 68,982 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

அதே நேரத்தில் இந்த பைக்கின் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் (ட்யூயல் டோன் வண்ண தேர்வு) விலை 71,982 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்டாண்டர்டு வேரியண்ட்கள் உடன் ஒப்பிடுகையில், இந்த புதிய வேரியண்ட்களின் விலை சுமார் 900 ரூபாய் அதிகம். இந்திய சந்தையில் டிவிஎஸ் ரேடியான் பைக்கிற்கு போட்டியாளர்கள் அதிகம்.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

ஹோண்டா சிடி 110 ட்ரீம் டிஎக்ஸ் (Honda CD 110 Dream DX), பஜாஜ் பிளாட்டினா இஎஸ் 100 (Bajaj Platina ES 100) மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus) ஆகிய பைக்குகளுக்கு, டிவிஎஸ் ரேடியான் நேரடியான போட்டியாளர் ஆகும். இந்த பைக்குகளின் போட்டியை சமாளித்து, விற்பனையை அதிகரிப்பதற்கு ரேடியானின் புதிய மாடல்கள் உதவி செய்யும் என டிவிஎஸ் நம்புகிறது.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பல்வேறு புதிய தயாரிப்புகளை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 பைக் இதற்கு ஒரு உதாரணம். வெகு சமீபத்தில்தான் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற தோற்றத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் ரைடர் பைக்கிற்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரைடர் 125 பைக்கை டெலிவரி செய்யும் பணிகளை டிவிஎஸ் நிறுவனம் சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறது.

சூப்பரான விலை... புதிய அவதாரத்தில் TVS Radeon பைக் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

இதுதவிர புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டரையும் டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு தயாரிப்பு ஆகும். இந்த நடவடிக்கைகள் மூலம் வரும் மாதங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs radeon launched in new colours here are all the details
Story first published: Saturday, October 23, 2021, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X