இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

டிவிஎஸ் ரைடர் 125 பைக் விற்பனையில் தூள் கிளப்பி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ரைடர் 125 (TVS Raider 125) பைக்கை கடந்த செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனைக்கு வந்த உடனேயே வாடிக்கையாளர்களின் வரவேற்பை டிவிஎஸ் ரைடர் 125 பைக் பெற்று விட்டது. 125 சிசி பைக்தானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டிருந்தது இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முதல் மாதத்திலேயே அதாவது கடந்த செப்டம்பர் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 7,057 ரைடர் 125 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியது. இந்த சூழலில் கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது முறையாக 10 ஆயிரம் யூனிட்டிற்கும் அதிகமாக விற்பனை என்ற மைல்கல்லை டிவிஎஸ் ரைடர் 125 பைக் கடந்துள்ளது.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் முதல் முறையாக டிவிஎஸ் ரைடர் 125 பைக் 10 ஆயிரம் யூனிட்டிற்கும் அதிகமாக விற்பனை என்ற மைல்கல்லை கடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிவிஎஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 10,553 ரைடர் 125 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் டிவிஎஸ் நிறுவனம் 10,040 ரைடர் 125 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

இதன் மூலம் இந்தியாவின் 125 சிசி செக்மெண்ட்டில் டிவிஎஸ் ரைடர் 125 பைக் வலுவான ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் டிவிஎஸ் ரைடர் 125 பைக் 77,500 ரூபாய் மற்றும் 84,500 ரூபாய் என்ற விலைகளில் கிடைக்கிறது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். டிவிஎஸ் ரைடர் 125 பைக் தற்போதைய நிலையில் ட்ரம் மற்றும் டிஸ்க் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

இந்த பைக்கின் டிஎஃப்டி வேரியண்ட்டும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டின் ஏதாவது ஒரு மாதத்தில் டிஎஃப்டி வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வேரியண்ட்டின் வருகைக்கு பின்னர், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

இந்திய சந்தையில் ஹோண்டா எஸ்பி 125, ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் மற்றும் பஜாஜ் பல்சர் 125 உள்ளிட்ட பைக்குகள் உடன் டிவிஎஸ் ரைடர் 125 போட்டியிட்டு வருகிறது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில், 124.8 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்டு, மூன்று வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 11.38 ஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 11.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

டிவிஎஸ் ரைடர் 125 பைக் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாச்சி வரிசை பைக்குகளை மனதில் வைத்து ரைடர் 125 பைக்கை டிவிஎஸ் நிறுவனம் டிசைன் செய்துள்ளது. இதன் காரணமாக அனைவரையும் கவர்ந்து இழுக்க கூடிய தோற்றத்தை டிவிஎஸ் ரைடர் 125 பெற்றுள்ளது.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில், எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர், ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகள், சிங்கிள் பீஸ் க்ராப் ரெயில், நேர்த்தியான சைடு பேனல்கள், ரைடர் 3டி லோகோ, முரட்டுத்தனமான எரிபொருள் டேங்க் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது. அதே நேரத்தில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் இருக்கை உயரம் 780 மிமீ ஆகவும், வீல்பேஸ் நீளம் 1,326 மிமீ ஆகவும் உள்ளது.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் எடை 123 கிலோ ஆகும். இந்த பைக்கில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் நிறைய 125 சிசி தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 125 சிசி பைக்குகள் அதிகளவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

ஏனெனில் 125 சிசி செக்மெண்ட்டிற்கு அதிக வரவேற்பு உள்ளதால், இதில் கூடுதல் கவனம் செலுத்த டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகதான் டிவிஎஸ் நிறுவனம் ரைடர் 125 பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் 125 ஸ்கூட்டரையும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த விலைக்கு இப்டி ஒரு பைக்கா? 125 சிசி-ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க... பாக்கவே கெத்தா இருக்கு!

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசலின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே நல்ல மைலேஜ் கிடைக்க கூடிய இரு சக்கர வாகனங்களை வாங்க பலர் விரும்புகின்றனர். அவற்றின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த 2 எதிர்பார்ப்புகளையும் 125 சிசி மாடல்கள் பூர்த்தி செய்வதால்தான், அவற்றுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs raider 125 premium commuter november 2021 sales report
Story first published: Saturday, December 25, 2021, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X