125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

இந்திய சந்தையில் பெரும்பான்மையாக அன்றாடம் பயன்படுத்தும் மோட்டார்சைக்கிள்களே விற்பனையாகுகின்றன. அதாவது சூப்பர் பைக்குகளை விரும்புவோரின் எண்ணிக்கையை காட்டிலும் நன்கு மைலேஜ் தரக்கூடிய தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மோட்டார்சைக்கிள்களே அதிகம் விற்பனையாகுகின்றன.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

இதனாலேயே குறைந்த சிசி கொண்ட மலிவான, அதேநேரம் தரமான மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தவே பெரும்பாலான இருசக்கர வாகனங்களும் விரும்புகின்றனர். இந்த வகையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் தான் டிவிஎஸ் ரைடர் ஆகும்.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

பலத்தரப்பட்ட மக்கள் வாங்கக்கூடிய விலையில் வந்துள்ளதினால் இந்த புதிய டிவிஎஸ் பைக்கின் தொழிற்நுட்பங்களை பற்றி குறைவாக எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் பல புதிய வசதிகளை பிரிவிலேயே முதல்முறையாக பெற்றுவந்துள்ளது. இனி இந்த செய்தியில் டிவிஎஸ் ரைடருக்கும், விற்பனையில் இதற்கு போட்டியாக விளங்கும் பஜாஜ் பல்சர் 125 பைக்கிற்கும் இடையே உள்ள ஒப்பிடுகையை பார்ப்போம்.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

சேசிஸ்

மலிவான விலையில் தயாரிப்பை கொண்டுவர வேண்டும் மற்றும் பழுதாகும் பாகங்களை குறைந்த செலவில் மாற்றி கொள்ளும் வகையில் இருத்தல் வேண்டும் என்பதை மனதில் வைத்து இந்த 125சிசி பைக்குகளின் சேசிஸை எளிமையானதாக இவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் வடிவமைத்துள்ளன. ஹேண்ட்லிங்கை பொறுத்தவரையில் சமீபத்திய டிவிஎஸ் ரைடர் சிறப்பானதாக உள்ளது.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

ஏனெனில் இந்த பைக்கின் பின்பக்கத்தில் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ரைடர் & பல்சர் 125 பைக்குகளில் ஒரே அளவில் 17 இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் வீல்பேஸ் எனப்படும் சக்கரங்களுக்கு இடையே தூரமும் (முறையே 1326மிமீ & 1320மிமீ) இவை இரண்டிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளன.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

என்ஜின்

என்ஜின் அமைப்பிலும் டிவிஎஸ் தயாரிப்பின் கையே ஓங்கியுள்ளது. ஏனெனில் ரைடரில் 3-வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதுவே பல்சர் 125 மாடலில் 2-வால்வு என்ஜினே வழங்கப்படுகிறது. ரைடரின் 125சிசி 3-வால்வு என்ஜின் அதிகப்பட்சமாக 11.2 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

பல்சர் 125 பைக்கின் என்ஜினும் கிட்டத்தட்ட இதே அளவிலான (11.6 பிஎச்பி) ஆற்றலையே அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகிறது. ஆனால் ஹோண்டா ஷைன், ஹீரோ க்ளாமர் போன்ற இவற்றின் மற்ற போட்டி மாடல்களில் 10.7 & 10.5 பிஎச்பி வரையில் தான் கிடைக்கிறது. மைலேஜை மற்ற போட்டிகள் அனைத்தை காட்டிலும் புதிய டிவிஎஸ் ரைடர் அதிகமாக வழங்குவதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

வசதிகள்

அன்றாடம் பயன்படுத்துவதற்கு ஏற்ற இத்தகைய மலிவான மோட்டார்சைக்கிள்களில் ஒரு காலத்தில் பெரிய அளவில் எந்த வசதியையும் எதிர்பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் பஜாஜ் பல்சர் 125 பைக்கில் பழமையான செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் தான் வழங்கப்படுகிறது.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

ஆனால் டிவிஎஸ் மோட்டாரின் புதிய அறிமுகமான ரைடர் ஏற்கனவே கூறியதுபோல், பல புதிய வசதிகளை பெற்று வந்துள்ளது. இதில் மிக முக்கிய அம்சமாக ஈக்கோ & பவர் என்ற இரு ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஈக்கோ மோட் அன்றாட நகர்புற பயன்பாட்டிற்கும், பவர் மோட் விரைவாக செல்ல வேண்டி இருக்கும் நெடுஞ்சாலை பயணங்களின்போதும் ஏற்றதாக இருக்கும்.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

இதன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் திரையானது ரியல்-டைம், பைக்கின் எரிபொருள் திறன், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் போன்ற வழக்கமான தகவல்களுடன் அதிகப்பட்சமாக பதிவாகிய வேகத்தை காட்டுவது மற்றும் ஓட்டுனர் ஹெல்மெட் அணியாததை எச்சரிப்பது போன்ற செயல்பாடுகளையும் செய்யக்கூடியதாக உள்ளது.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

விலை

இவ்வாறான கூடுதல் அம்சங்களினாலும், புத்துணர்ச்சியான தோற்றத்தினாலும் டிவிஎஸ் ரைடரின் விலை (ரூ.77,500- ரூ.84,469, எக்ஸ்-ஷோரூம்) சற்று அதிகம் தான். அதற்காக மிகவும் அதிகம் என நினைத்துவிட வேண்டாம், சில ஆயிரங்கள் மட்டுமே. இன்னும் சொல்லப்போனால், பல்சர் 125 கிட்டத்தட்ட இதே விலைகளில் (ரூ.77,843- ரூ.80,698) தான் விற்பனை செய்யப்படுகிறது.

125சிசி பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம்? புதிய டிவிஎஸ் ரைடர் vs பஜாஜ் பல்சர் 125!!

இதனை காட்டிலும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் பைக்கை எதிர்பார்ப்பவர்கள் ஹோண்டா ஷைனை தேர்வு செய்யலாம். ஏனெனில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72,787-இல் இருந்தே ஆரம்பிக்கிறது. ஆனால் உண்மையில், மற்றவைகளை காட்டிலும் 10கிமீ கூடுதலான மைலேஜ் தருவதாக வாடிக்கையாளர்களால் கூறப்படும் புதிய டிவிஎஸ் ரைடருக்கு இவ்வளவு தொகையினை தாராளமாக செலவு செய்யலாம்.

Most Read Articles

English summary
Tvs raider 125 vs bajaj pulsar 125 price features engine specs comparison details
Story first published: Thursday, October 21, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X