ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

டிவிஎஸ் ரைடர் 125 சிசி பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

புத்தம் புதிய டிவிஎஸ் ரைடர் 125 சிசி பைக் இந்தியாவில் இன்று (செப்டம்பர் 16) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டிவிஎஸ் ரைடர் பைக்கின் டாப் வேரியண்ட்டில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் (SmartXConnect) கனெக்டட் தொழில்நுட்ப வசதி இடம்பெற்றிருப்பது மிக சிறப்பான விஷயமாகும்.

ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

வண்ண தேர்வுகள்:

  • ஸ்ட்ரைக்கிங் ரெட்
  • ப்ளாசிங் ப்ளூ
  • விக்கெட் ப்ளாக்
  • ஃபயரி யெல்லோ
  • ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

    டிசைன்:

    இது 125 சிசி கம்யூட்டர் ரக பைக்தானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், டிவிஎஸ் நிறுவனம் ரைடர் பைக்கை அட்டகாசமாக டிசைன் செய்துள்ளது. இதன் டிசைன் இளைஞர்களை கவரும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை. ஏனெனில் 160-180 சிசி பைக்குகளை போன்று, டிவிஎஸ் ரைடர் பைக்கின் டிசைன் அமர்க்களமாக இருக்கிறது.

    ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

    ரைடர் பைக்கிற்கு டிவிஎஸ் நிறுவனம் மாடர்ன் டிசைனை வழங்கியுள்ளது. இந்த பைக்கின் முன் பகுதியில் தனித்துவமான எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ஸ்பிளிட் எல்இடி பகல் நேர விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் பின் பகுதியில் ஸ்பிளிட் எல்இடி டெயில்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் டிவிஎஸ் ரைடர் பைக்கின் டிசைன் இளைஞர்களை கவரும் வகையில், ஸ்போர்ட்டியாக உள்ளது.

    ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

    டிவிஎஸ் ரைடர் பைக்கில், 10 லிட்டர் ட்யூயல்-டோன் எரிபொருள் டேங்க், சிங்கிள்-பீஸ் ஹேண்டில்பார், முன் பகுதியில் ட்யூயல்-டோன் மட்கார்டு, இன்ஜின் சம்ப் கார்டு, ஸ்பிளிட் இருக்கைகள், மேல் நோக்கிய வகையிலான சைலென்சர், சாரி கார்டு (Saree guard), 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஹாலோஜன் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

    வசதிகள் மற்றும் தொழில்நுட்பம்:

    இது 125 சிசி கம்யூட்டர் பைக் என்றபோதிலும் டிவிஎஸ் நிறுவனம் நிறைய வசதிகளை வழங்கியுள்ளது. எனவே வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிட்டத்தட்ட இருக்கின்றன. இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டில், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு 5 இன்ச் டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது. இது டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் கனெக்டட் தொழில்நுட்ப வசதியையும் பெற்றுள்ளது. அதே சமயம் விலை குறைவான வேரியண்ட்களில், நெகடிவ் எல்சிடி யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

    எனினும் இந்த இரண்டு யூனிட்களுமே போதுமான அளவிற்கு தகவல்களை வழங்குகின்றன. அவை பின்வருமாறு:

    • ட்ரிப் மீட்டர்கள்
    • கியர் பொஷிஷன் இன்டிகேட்டர்
    • நேரம்
    • டேக்கோமீட்டர்
    • சராசரி எரிபொருள் சிக்கனம்
    • எரிபொருள் ரேஞ்ச்
    • ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

      இதுதவிர டிவிஎஸ் நிறுவனத்தின் செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் டிஎஃப்டி டிஸ்ப்ளேவை இணைத்து கொண்டு இன்னும் நிறைய வசதிகளை பெற முடியும். அவை பின்வருமாறு:

      • டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன்
      • வாய்ஸ் அஸிஸ்டன்ஸ்
      • கால் மேனேஜ்மெண்ட்
      • மெசேஜ் நோட்டிஃபிகேஷன் அலர்ட்
      • ஹை-ஸ்பீடு அலர்ட்
      • லோ ஃப்யூயல் அஸிஸ்டன்ஸ்
      • டிஜிட்டல் டாக்குமெண்ட் ஸ்டோரேஜ்
      • இதுதவிர பின்னால் அமர்பவரின் இருக்கைக்கு அடியில் டிவிஎஸ் நிறுவனம் போதுமான அளவிற்கு இடவசதியையும் வழங்கியுள்ளது. இங்கு முக்கியமான பொருட்களை வைத்து கொள்ள முடியும்.

        ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

        இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்:

        டிவிஎஸ் ரைடர் பைக்கில், 124.8 சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகளையும் டிவிஎஸ் ரைடர் பைக் பெற்றுள்ளது.

        ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

        டிவிஎஸ் ரைடர் பைக்கின் இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 11.2 பிஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 11.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் இந்த பைக் ஒரு லிட்டருக்கு 67 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டி விடும். இந்த பைக்கின் டாப் ஸ்பீடு (பவர் மோடு) மணிக்கு 99 கிலோ மீட்டர்கள் ஆகும்.

        ஈக்கோ மோடு உடன் ஒப்பிடுகையில் பவர் மோடில் இந்த பைக்கின் டாப் ஸ்பீடு 10 சதவீதம் அதிகரிக்கும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இது 0.4 வினாடி விரைவானது. எனினும் ஈக்கோ மோடு அதிக மைலேஜ் பெறுவதற்கு உதவி செய்யும்.

        ஸ்போர்ட்ஸ் பைக் மாதிரி இருக்கு... சூப்பரான விலையில் TVS Raider 125 விற்பனைக்கு அறிமுகம்... எவ்ளோ தெரியுமா?

        சஸ்பென்ஸன், பிரேக்குகள், டயர்கள் மற்றும் பரிமாணங்கள்:

        சஸ்பென்ஸன்:

        • முன் பகுதி: 30 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்
        • பின் பகுதி: 5 ஸ்டெப் ப்ரீ-லோடு அட்ஜெஸ்ட் உடன் மோனோஷாக்
        • பிரேக்குகள்:

          • முன் பகுதி (டிஸ்க் வேரியண்ட்): 240 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்
          • முன் பகுதி (ட்ரம் வேரியண்ட்): 130 மிமீ ட்ரம் பிரேக்
          • பின் பகுதி: 130 மிமீ ட்ரம் பிரேக்
          • இந்த பைக்கில் Synchronized Braking ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

            வீல்கள் மற்றும் டயர்கள்:

            • முன் பகுதி: 80/100 செக்ஸன் டயர் உடன் 17 இன்ச் அலாய் வீல்கள்
            • பின் பகுதி: 100/90 செக்ஸன் டயர் உடன் 17 இன்ச் அலாய் வீல்கள்
            • ரைடர் பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் யூரோகிரிப் ரிமோரா ட்யூப்லெஸ் டயர்களை வழங்குகிறது.

              பரிமாணங்கள்:

              • வீல்பேஸ்: 1,326 மிமீ
              • இருக்கை உயரம்: 780 மிமீ
              • எடை: 123 கிலோ
              • க்ரவுண்ட் க்ளியரன்ஸ்: 180 மிமீ
              • போட்டியாளர்கள்:

                இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் 125, பஜாஜ் என்எஸ் 125, ஹோண்டா எஸ்பி125, ஹோண்டா ஷைன் மற்றும் ஹீரோ க்ளாமர் உள்ளிட்ட பைக்குகள் உடன் டிவிஎஸ் ரைடர் 125 போட்டியிடும்.

                டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

                இந்திய சந்தையில் கிடைக்கும் அதிநவீன 125 சிசி பைக்குகளில் ஒன்றாக டிவிஎஸ் ரைடர் பைக்கை குறிப்பிடலாம். டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கிற்கு கவர்ச்சிகரமான டிசைன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. ஓரளவிற்கு குறைவான விலையில் பிரீமியமான பைக்கை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு டிவிஎஸ் ரைடர் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

                வேரியண்ட்கள் மற்றும் விலை:

                டிவிஎஸ் ரைடர் 125 சிசி பைக்கின் ட்ரம் பிரேக் வேரியண்ட்டின் விலை 77,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் விலை 85,469 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

                இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs raider 125cc premium commuter motorcycle launched in india here are all the details
Story first published: Thursday, September 16, 2021, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X