50லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டிய பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்! எதுனு தெரிஞ்சா நீங்களே ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் பிரலமான இருசக்கர வாகன மாடல்களில் ஸ்கூட்டி (Scooty)-யும் ஒன்று. மிக நீண்ட ஆண்டுகளாக நாட்டில் விற்பனையில் இருக்கும் கியர் இல்லா இருசக்கர வாகனங்களில் இது மிகவும் முக்கியமான டூவிலராக இருக்கின்றது. இதுவே தற்போது விற்பனையில் ஓர் புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கின்றது.

50லட்சம் விற்பனை மைல் கல்லை எட்டிய பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்... எதுனு தெரிஞ்சா நீங்களே ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

50 லட்சம் (5 மில்லியன்) யூனிட் விற்பனை சாதனையை டிவிஎஸ் ஸ்கூட்டர் படைத்திருக்கின்றது. பெண்களைக் கவரும் நோக்கில் இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டதே டிவிஎஸ் ஸ்கூட்டி. இது பெண்கள் மத்தியில் மட்டுமின்றி வயதானவர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சிலர் இதனை குடும்ப இருசக்கர வாகனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

50லட்சம் விற்பனை மைல் கல்லை எட்டிய பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்... எதுனு தெரிஞ்சா நீங்களே ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

தினசரி பயன்பாடுகளான சந்தைக்கு செல்லுதல் மற்றும் உள்ளூர் பயணங்கள் ஆகியவற்றிற்கே டிவிஎஸ் ஸ்கூட்டியை பெரும்பாலானோர் இவ்வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிக மைலேஜை இது வழங்குவதனாலும் பலரின் பிரியமான இருசக்கர வாகனமாக ஸ்கூட்டி இருக்கின்றது.

50லட்சம் விற்பனை மைல் கல்லை எட்டிய பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்... எதுனு தெரிஞ்சா நீங்களே ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

டிவிஎஸ் ஸ்கூட்டி இடிஎஃப்ஐ ஈகோத்ரஸ்ட் (ETFi Ecothurst) தொழில்நுட்பம் கொண்ட எஞ்ஜினுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவே அதிக மைலேஜ் திறனிற்கு வழி வகுக்கின்றது. பிற இருசக்கர வாகன மாடல்களைக் காட்டிலும் ஸ்கூட்டி 15 சதவீதம் அதிக மைலேஜே வழங்க இந்த தொழில்நுட்பமே காரணம்.

50லட்சம் விற்பனை மைல் கல்லை எட்டிய பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்... எதுனு தெரிஞ்சா நீங்களே ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இத்துடன் ஈசி ஸ்டாண்ட் எனும் தொழில்நுட்ப வசதியும் ஸ்கூட்டியில் வழங்கப்பட்டு வருகின்றது. இது சென்டர் ஸ்டாண்டில் வைப்பதற்கான தேவையை 30 சதவீதம் வரை குறைக்க உதவுகின்றது. தற்போது ஸ்கூட்டியானது ஸ்கூட்டி பெப்-ப்ளஸ் மற்றும் ஸெஸ்ட்110 ஆகியதேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

50லட்சம் விற்பனை மைல் கல்லை எட்டிய பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்... எதுனு தெரிஞ்சா நீங்களே ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இதில் ஸ்கூட்டி பெப்-ப்ளஸ் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. குளாஸ் சீரிஸ், பிரின்சஸ் பிங்க் மற்றும் மேட் எடிசன் ஆகிய தேர்வுகளில் ஸ்கூட்டி விற்பனைக்குக் கிடைக்கும். ரூ. 57,959 தொடங்கி ரூ. 60,859 வரையிலான விலையில் ஸ்கூட்டி விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

50லட்சம் விற்பனை மைல் கல்லை எட்டிய பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்... எதுனு தெரிஞ்சா நீங்களே ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

ஸ்கூட்டி பெப்-ப்ளஸ் ஸ்கூட்டரில் சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் 87.8 சிசி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 5.4 பிஎஸ் மற்றும் 6.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், ஸ்கூட்டரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், அலாய் வீல்கள், எல்இட டிஆர்எல்கள், ஓபன் குளோவ் பாக்ஸ், யுஎஸ்பி சார்ஜர், சைடு ஸ்டாண்டு அலாரம் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

50லட்சம் விற்பனை மைல் கல்லை எட்டிய பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்... எதுனு தெரிஞ்சா நீங்களே ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

ஸ்கூட்டியின் அடுத்த வெர்ஷனான ஸெஸ்ட் 110 ரூ. 66,318 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த ஸ்கூட்டரில் 109.7 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

50லட்சம் விற்பனை மைல் கல்லை எட்டிய பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்... எதுனு தெரிஞ்சா நீங்களே ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இந்த எஞ்ஜின் 7.8 பிஎஸ் மற்றும் 8.8 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், எல்இடி டிஆர்எல், எல்இடி டெயில் லேம்ப், ட்யூவல் டோன் இருக்கை, குளோவ் பாக்ஸ், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் ட்யூப் இல்லா டயர்கள் ஆகியவை ஸெஸ்டில் வழங்கப்பட்டிருக்கின்றன.

50லட்சம் விற்பனை மைல் கல்லை எட்டிய பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்... எதுனு தெரிஞ்சா நீங்களே ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இதுமாதிரியான பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இந்தியாவில் நல்ல வரவேற்பை ஸ்கூட்டி பெற்று வருகின்றது. இதன் விளைவாகவே தற்போது 50 லட்சம் யூனிட் விற்பனை எனும் தனித்துவமான சாதனையை ஸ்கூட்டி படைத்திருக்கின்றது. இந்த நிகழ்வு இந்தியர்களின் நம்பகமான வாகனம் ஸ்கூட்டி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் அதன் தயாரிப்புகளை மேம்படுத்தி அறிமுகம் செய்வதில் அதிகம் தீவிரம் காட்டி வருகின்றது. அந்தவகையில், புதிய ஜூபிடர் 125 மற்றும் ரேடியான் பைக் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs scooty achieves new milestone in sales here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X