அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

அதிக மைலேஜ் மற்றும் செயல் திறனை வழங்கக்கூடிய 11 புதிய டயர்களை டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம், இரண்டு, மூன்று மற்றும் பிற உயர் ரக வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்களை நிறுவனம் இந்தியாவில் இன்று ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

இவையனைத்தும், யூரோக்ரிப் எனம் பிராண்டின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவை வெவ்வேறு வித்தியாசமான அளவுகள் கொண்டவை ஆகும். ஆனால், இதனை இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்காக மட்டுமே அறிமுகம் செய்திருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், தற்போது புதிதாக அறிமுகமாகி இருக்கும் 11 புதிய டயர்களில் 8 உயர்-திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கானதாகும்.

அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

இதேபோன்று, இரு மாடல்கள் ஸ்கூட்டர்களுக்காகவும், ஒன்று இ-ரிக்ஷா (மின்சார ஆட்டோ)-வுக்காவும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. டயரையும், டயரின் அளவுகளையும் ஸ்போர்டார்க், ட்யூராப்ரோ, ஜம்போ ஜிடி, கான்டா 725 மற்றும் இ-ட்யூராப்ரோ ஆகிய பெயர் வரிசையின்கீழ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

எந்தெந்த பெயரின்கீழ் என்னென்ன அளவுகளில் டயர்கள் கிடைக்கும் என்பதைத் தெளிவாக படத்தின் வாயிலாக கீழே காணலாம். அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அனைத்து டயர்களும் மைலேஜை மையக் கருத்தாகக் கொண்டு நிறுவனம் வடிவமைத்திருக்கின்றன.

அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

இதுகுறித்து நிறுவனம் கூறியதாவது, "இந்த டயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் சிறந்த மைலேஜ், சமரசமற்ற செயல்திறன் மற்றும் ஆயுள் ஆகியவற்றை தங்கு தடையின்றி வழங்கும்" என தெரிவித்திருக்கின்றது. மேலும், மாறுபட்ட சாலை நிலைகளில்கூட சிறந்த பிரேக்கிங் மற்றும் அதிக பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் எனவும் நிறுவனம் கூறியிருக்கின்றது.

அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

ட்யூராப்ரோ; ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கின்றது. இந்த டயர் ட்யூப்லெஸ் மாடலாகும். இது தற்போது இரு விதமான அளவு தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.

அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

ஸ்போர்டார்க், இதுவும் இருசக்கர வாகனங்களுக்கான டயரே ஆகும். அதிக ஈரமான மற்றும் வரண்ட நிலப் பகுதிகளில்கூட மிக அதிக க்ரிப் திறனை இந்த டயர் என நிறுவனம் கூறுகின்றது. இதற்காக மூன்றடுக்கு பாலிமர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் தனித்துவமான பேட்டர்ன்கள் அதிக க்ரிப் மற்றும் சிறந்த கட்டுப்பாட்டை வழங்கும் என கூறப்படுகின்றது.

அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

ஜம்போ ஜிடி, இந்த டயர் இரு விதமான அளவுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அதிக பயன்பாட்டை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப இதனை வடிவமைத்திருக்கின்றது டிவிஎஸ். அதிக மைலேஜ், சிறந்த திறன் வெளிப்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ப வடிவமைப்பை இந்த டயர் பெற்றிருக்கின்றது.

அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

இ-ட்யூரோ ப்ரோ, இதன பிரத்யேகமாக இ-ரிக்ஷாக்களுக்காகவே நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. எதிர்காலத்தில் மின் வாகனங்களே இந்திய சாலையை ஆளுகை செய்ய இருக்கின்றன என்பதை உணர்ந்த டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம், பிரத்யேகமாக மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்காக இந்த டயரை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் மற்றும் சரக்கு என இருவிதமான ஆட்டோக்களிலும் பயன்படும் வகையில் இந்த டயர் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

அதிக மைலேஜ் வேணுமா! இதோ டிவிஎஸ் நிறுவனத்தின் புதுமுக டயர்கள்... ஒட்டுமொத்தமாக 11 புதிய டயர்கள் அறிமுகம்!

கான்டா 725, ஸ்கூட்டர்களுக்கான டயர் இதுவாகும். அதிக மைலேஜை வழங்கக்கூடியது. மேலும், அதிக க்ரிப் மற்றும் பாதுகாப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கக்கூடியது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
TVS Srichakra Launches 11 New Tyres For Two Wheelers And e-Rickshaw. Read In Tamil.
Story first published: Thursday, March 4, 2021, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X