TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

TVS Raider 125 சிசி பைக்கின் டெலிவரி பணிகள் இந்தியாவில் தொடங்கியுள்ளது. பைக்கை வாங்கிய சந்தோஷத்தில் இளைஞர் ஒருவர் அப்பைக்கின்மீது யோகா செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவல்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

டிவிஎஸ் (TVS Motor) நிறுவனம் இந்தியாவின் 125 சிசி இருசக்கர வாகன பிரிவை அதகளப்படுத்தும் வகையில் புதுமுக பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரைடர் (Raider) எனும் புதிய பைக்கையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

இந்த பைக்கின் டெலிவரி பணிகளே தற்போது இந்தியாவில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், ரைடர் 125 பைக்கின் முதல் யூனிட்டை டெலிவரி எடுத்தவர் ஓர் யோகா ஆசிரியர் என்ற தகவலும் வெளி வர தொடங்கியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ரைடர் 125 பைக்மீது ஒரு இளைஞர் யோகா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பஜாஜ் பல்சர் 125, ஹோண்டா சிபி ஷைன் 125, ஹீரோ கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியளிக்கும் வகையில் ரைடர் 125 பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்திய இளைஞர்களைக் குறி வைத்து இப்பைக்கை டிவிஎஸ் அறிமுகம் செய்திருக்கின்றது.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

இளைஞர்களைக் கவரும் வகையில் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான டிசைன் தாத்பரியங்கள் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், பன்முக ரைடிங் மோட்கள், ரிவர்ஸ் எல்சிடி க்ளஸ்டர், இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் வசதி மற்றும் நீளமான இரு துண்டு இருக்கை அமைப்பு ஆகியவை ரைடர் 125 பைக்கிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

இத்துடன், கூடுதல் தேர்வாக 5 இன்ச் டிஃப்டி க்ளஸ்டர் திரையையும் ரைடர் 125 பைக்கில் டிவிஎஸ் வழங்குகின்றது. குரல் கட்டளை மற்றும் டிவிஎஸ் இன் ஸ்மார்ட்எக்ஸ்கன்னெக்ட் (SmartXonnect) ஆகிய வசதிகளைக் கொண்ட திரையே இந்த டிஎஃப்டி திரை ஆகும். ப்ளூடூத் வாயிலாக இத்திரைடு உடன் செல்போனை இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Image Courtesy: Power On Wheel

இத்தகைய அதிக சிறப்பு வசதிகள் கொண்ட பைக்காகவே ரைடர் 125 இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஸ்ட்ரைக்கிங் சிவப்பு, பிளேசிங் நீலம், விக்கட் கருப்பு மற்றும் ஃபையரி மஞ்சள் ஆகிய நான்கு விதமான தேர்வுகளில் ரைடர் 125 விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் ரைடர் 125 மிகவும் அட்டகாசமான தேர்வாக இருக்கின்றது.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

மேலும், இப்பைக்கை டிவிஎஸ் நிறுவனம் டிஸ்க் மற்றும் ட்ரம் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதில், ட்ரம் பிரேக் வேரியண்டின் விலை ரூ. 77 ஆயிரம் ஆகும். டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலை ரூ. 85 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து விலையும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பிலானது.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

இன்னும் சில நாட்களில் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட மற்றுமொரு ரைடர் 125 வேரியண்டை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. அதன் விலை ரூ. 90 ஆயிரமாக நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

விற்பனைக்கு வந்திருக்கும் ரைடர் பைக்கில் ஈகோத்ரஸ்ட் ஃப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பத்தை டிவிஎஸ் பயன்படுத்தியுள்ளது. இது அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மைலேஜிற்கு வழி வகுக்க உதவும். இத்துடன், குறைந்த மாசு வெளிப்பாட்டிற்கும் இது உதவும்.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

மேலும், நீண்ட நேரம் வாகனம் ஓர் இடத்தில் நிற்குமானால் தானாக எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர் எஞ்ஜின் மொபிலிசர் வசதி உடன் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் கார்களில் இருக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர் போல ஹெல்மெட் ரிமைண்டர் வசதி கூடுதல் சிறப்பு அம்சமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

பைக்கின் கவர்ச்சியான தோற்றத்தைக் கூடுதலாக மெருகேற்றும் வகையில் 3டி தர எம்பளம், பின் பக்க பயணிக்கான முழு அளவிலான கைப் பிடிகள், எல்இடி ஹெட்லேம்ப், ஹெட்லேம்பை மூன்று பகுதிகளாக பிரிக்கின்ற வகையிலான எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி வால் பகுதி மின் விளக்குகள் உள்ளிட்டவை ரைடர் பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

அலாய் வீல், ட்யூப்லெஸ் டயர், 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 780 மிமீ உயரமான இருக்கை உள்ளிட்ட வசதிகளும் ரைடர் 125 பைக்கிற்கு டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது. இப்பைக்கில் 125 சிசி திறன் கொண்ட ஏர் மற்றும் ஆயில் கூல்டு 3வி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 11.3 எச்பி மற்றும் 11.2 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இல் இந்த எஞ்ஜின் இயங்குகின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 99 கிமீ வேகம் ஆகும்.

TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்!

மேலும், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை இப்பைக் வெறும் 5.9 செகண்டுகளிலேயே எட்டிவிடும் திறனை இந்த எஞ்ஜின் கொண்டிருக்கின்றது. சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் மற்றும் லோவ் ஃபிரிக்ஷன் ஃப்ரெண்ட் சஸ்பென்ஷன் உள்ளிட்டவையும் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 240 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 130 மிமீ டிரம் பிரேக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs starts raider 125 bike delivery in india
Story first published: Saturday, September 18, 2021, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X