இது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் என்றால் நம்ப முடிகிறதா!! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே தோற்றுவிடும்...

ஹார்லி-டேவிட்சன் 48 பைக்கிற்கு இணையான தோற்றத்திற்கு, கமர்ஷியல் பயன்பாட்டிற்கு பிரபலமான டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிடைத்துள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் என்றால் நம்ப முடிகிறதா!! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே தோற்றுவிடும்...

சுடுஸ் கஸ்டம்ஸ், சிறிய அளவிலான ஜீப் மற்றும் ஃபோக்ஸ்வேகன் பெட்லீ கார்களை உருவாக்கி இவ்வாறான மாடிஃபிகேஷன் பணிகளுக்கு பிரபலமான கஸ்டமைஸ்ட் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

இது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் என்றால் நம்ப முடிகிறதா!! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே தோற்றுவிடும்...

இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் தான் தற்போது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கை ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு இணையான தோற்றத்திற்கு மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பாக சுடுஸ் கஸ்டம்ஸ் நிறுவனத்தின் யுடியுப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

Image Courtesy: sudus custom

பார்ப்பதற்கு ஹார்லி-டேவிட்சன் 48 பைக்கை போன்று காட்சித்தந்தாலும், இந்த மாடிஃபை பைக் அளவில் சிறியதாக உள்ளது. இந்த மாடிஃபை எக்ஸ்எல் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பான்மையான பாகங்கள் கையாலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

இது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் என்றால் நம்ப முடிகிறதா!! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே தோற்றுவிடும்...

இந்த வகையில் எந்தவொரு மெஷினின் உதவியுமின்றி வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ள மஞ்சள் நிற பெட்ரோல் டேங்க் நமக்கு ஹார்லி-டேவிட்சன் 48 பைக்கை நினைவுப்படுத்துகிறது. இந்த பெட்ரோல் டேங்கை கழற்றுவதும், மீண்டும் பொருத்துவதும் எளிது என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் என்றால் நம்ப முடிகிறதா!! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே தோற்றுவிடும்...

இதனுடன் பைக்கின் இரு பக்கத்திலும் சைடு பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. இவையும் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டதுதான். இவை மட்டுமின்றி கஸ்டம் பின்பக்க ஃபெண்டர் மற்றும் முன்பக்க மட்கார்ட் உள்ளிட்டவற்றையும் இந்த மாடிஃபை பைக் பெற்றுள்ளது.

இது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் என்றால் நம்ப முடிகிறதா!! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே தோற்றுவிடும்...

இந்த மாடிஃபை பைக்கில் ஒருவர் மட்டுமே அமர முடியும். இதற்காக டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கின் பின் இருக்கை நீக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட பைக்கின் என்ஜின் பகுதி சுவராஸ்யமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

இது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் என்றால் நம்ப முடிகிறதா!! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே தோற்றுவிடும்...

டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கில் பொருத்தப்படும் என்ஜின், ஃபைபர் கவரை பெற்றுள்ளது. ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை போன்று இந்த மாடிஃபை பைக்கின் என்ஜின் பகுதி வி-இரட்டை வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இது பைக்கிற்கு பருமனான தோற்றத்தை வழங்குகிறது.

இது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் என்றால் நம்ப முடிகிறதா!! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே தோற்றுவிடும்...

இந்த மாடிஃபை எக்ஸ்எல் பைக்கிற்கு இரு எக்ஸாஸ்ட் குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன. இதிலும் ஹார்லி-டேவிட்சன் பிராண்டின் தொடுதல் உள்ளது. இருப்பினும் இந்த இரு எக்ஸாஸ்ட் குழாய்களில் ஒன்று மட்டுமே செயல்படக்கூடியது. மற்றொன்று போலியானது.

இது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் என்றால் நம்ப முடிகிறதா!! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே தோற்றுவிடும்...

டிவிஎஸ்100 பைக்குகளில் வழங்கப்படும் சிங்கிள் பேட் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ரெட்ரோ தோற்றத்திற்காக இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பின்பக்கத்தில் நிறுத்து விளக்கு எதுவும் இல்லை, ஆனால் விரைவில் பொருத்தப்படவுள்ளதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் என்றால் நம்ப முடிகிறதா!! ஹார்லி-டேவிட்சன் பைக்குகளே தோற்றுவிடும்...

டிவிஎஸ் எக்ஸ்எல் மொபெட் ஒன்றை இவ்வாறான தோற்றத்திற்கு மாற்றுவது என்பது உண்மையில் கடினமான வேலையாகும். இதற்கு செலவு செய்யப்பட்ட தொகை எதையும் உரிமையாளர் தெரிவிக்கவில்லை.

Most Read Articles

English summary
Humble TVS XL moped transformed into a Harley Davidson 48 at home.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X