யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ 350சிசி ஸ்கூட்டரின் டீசர் வீடியோ ஒன்று, அதன் இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

இந்தியாவில் மேக்ஸி-ஸ்கூட்டர்களுக்கான சந்தை மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது. தற்போது இந்த பிரிவில் விற்பனையில் உள்ள சில மாடல்களையும் முழு மேக்ஸி-ஸ்கூட்டர் என சொல்ல முடியாது. வழக்கமான ஸ்கூட்டரையும், மேக்ஸி-ஸ்கூட்டரையும் கலந்தாற் போன்றதான தோற்றத்திலேயே உள்ளன.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

பக்கா மேக்ஸி-ஸ்கூட்டராக யமஹா நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் அதன் ஏரோக்ஸ் 155 மாடலை அறிமுகப்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதுபோல், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அதன் சி400 ஜிடி மேக்ஸி-ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்க தயாராகி வருகிறது.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

இதனை உறுதி செய்யும் வகையிலேயே தற்போது இந்த வீடியோ பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த டுவிட்டர் பதிவிலும், வீடியோவிலும் ‘இணைப்பில் இருங்கள்' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர்த்து, ஸ்கூட்டரின் இந்திய அறிமுக தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

மேலும் இந்த வீடியோவில், நகர்புற பயன்பாட்டிற்கு பிஎம்டபிள்யூ சி400 ஜிடி மேக்ஸி-ஸ்கூட்டர் மிகவும் ஏற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 350சிசி ஸ்கூட்டர் மாடலான பிஎம்டபிள்யூ சி400 ஜிடி, அதன் செயல்படுதிறனிற்கு ஏற்ப பருத்த உடலமைப்பையும், செதுக்கப்பட்டது போன்றதான உடல் பேனல்களையும் கொண்டது.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

இந்த பிஎம்டபிள்யூ மேக்ஸி-ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், முழு-எல்இடி ஹெட்லைட்கள், பெரிய அளவிலான விண்ட்ஷீல்ட், சவுகரியமான இருக்கை அமைப்பு, மேல்நோக்கிய எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கான பெரிய அளவிலான கம்பிகள் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

வெளிநாட்டு சந்தைகளில் ஸ்டைல் ட்ரிபிள் ப்ளாக், அல்பைன் வெள்ளை மற்றும் காலிஸ்டோ க்ரே மெட்டாலிக் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் பிஎம்டபிள்யூவின் இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஸ்டைல் ட்ரிபிள் கருப்பு நிறத்திற்கு தான் ரசிகர்கள் அதிகம். இந்த பெயிண்ட் தேர்வில் ப்ரேக் காலிபர்கள் தங்க நிறத்தில் வழங்கப்படுகின்றன.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

மேக்ஸி-ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில், வழக்கமான ஸ்கூட்டர்களை காட்டிலும் கூடுதல் சவுகரியம் கிடைப்பது மட்டுமின்றி, இத்தகைய ஸ்கூட்டர்களில் தயாரிப்பு நிறுவனங்களால் அதிக தொழிற்நுட்ப வசதிகளையும் வழங்க முடிகிறது. அதாவது, அதற்கு ஏற்ற இடவசதி மேக்ஸி-ஸ்கூட்டர்களில் கிடைக்கிறது.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

இதன்படி, சாவியில்லா ரைட், ரைடு-பை-வயர் தொழிற்நுட்பம், யுஎஸ்பி சார்ஜிங் துளை, தன்னிச்சையாக அளவீடு செய்துக்கொள்ளக்கூடிய ஏஎஸ்சி உள்ளிட்டவற்றை சி400 ஜிடி ஸ்கூட்டரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது. மேக்ஸி-ஸ்கூட்டர் என்பதால் இருக்கை அடியில் வழங்கப்படும் பொருட்களை வைப்பதற்கான இடத்தை பற்றி பெரியதாக கவலை கொள்ள தேவையில்லை.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

இதன் டிஎஃப்டி திரை ஆனது பயணத்தின் போது எந்தெந்த திசையில் திரும்ப வேண்டும் என்பதையும் ஓட்டுனருக்கு காட்டுவதாக உள்ளது. இதனுடன் வாடிக்கையாளர்கள் பல்வேறு விதமான ஸ்மார்ட் வசதிகளுக்கு வழிவகுகின்ற பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இணைப்பையும் பெற முடியும்.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

இந்த பிஎம்டபிள்யூ மேக்ஸி-ஸ்கூட்டரில் இசை, செல்போன் எண்களை தேடுவது, மொபைல் போனிற்கு வரும் அழைப்புகளை ஏற்பது/ நிராகரிப்பது உள்ளிட்டவைகளை ஹேண்டில்பாரில் வழங்கப்படும் பொத்தான்கள் மூலம் கண்ட்ரோல் செய்யலாம். இவற்றுடன் ஹீட்டட் க்ரிப்கள், ஹீட்டட் இருக்கை மற்றும் வாகனம் திருடு போவதை எச்சரிக்கும் அலாரம் உள்ளிட்ட கூடுதல் தொழிற்நுட்ப தேர்வுகளையும் சி400 ஜிடி ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூவின் இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் 350சிசி, சிங்கிள்-சிலிண்டர், நீர்-குளிர்விப்பான் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 34 பிஎச்பி மற்றும் 5,750 ஆர்பிஎம்-இல் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பருத்த உடலமைப்பை கொண்ட இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 138கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

யமஹா மட்டுமல்ல, எங்களிடமும் மேக்ஸி-ஸ்கூட்டர் இருக்கு! சி400 ஜிடி-ஐ இந்தியாவில் களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ

சஸ்பென்ஷனுக்கு இந்த வாகனத்தின் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் அலுமினியம் ஸ்விங்கார்ம்-மும் பொருத்தப்படுகின்றன. ப்ரேக்கிங் பணிக்கு ஏபிஎஸ் உடன் முன் சக்கரத்தில் டபுள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ஒற்றை டிஸ்க்கும் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
BMW 350 cc - Scooter Launch Soon In India New Teaser Out.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X