எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!

யமஹா எஃப்இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிள் பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் எஃப்இசட் வரிசையில் இணைக்கவுள்ள புதிய மோட்டார்சைக்கிளின் பெயரை பதிவு செய்தது.

எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!

இதன் பெயர் எஃப்இசட்-எக்ஸ் என இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. எஃப்இசட் வரிசையில் அட்வென்ச்சர் வெர்சனாக வெளிவரவுள்ள இந்த புதிய பைக் இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!

தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள விபரங்களின்படி பார்த்தோமேயானால், இந்த அட்வென்ச்சர் யமஹா பைக்கை 2020மிமீ நீளத்தில், 785மிமீ அகலத்தில், 1115மிமீ உயரத்தில், 1330மிமீ நீள வீல்பேஸ் உடன் எதிர்பார்க்கலாம்.

எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!

எஃப்இசட்-எக்ஸ் மட்டுமின்றி எஃப்இசட்-150 என்றொரு பைக்கும் வெளிவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 149சிசி எஸ்.ஒ.எச்.சி என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!

5-ஸ்பீடு, கான்ஸ்டாண்ட் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 12.2 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 13.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

எஃப்இசட்-எக்ஸ் அட்வென்ச்சர் பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு எல்சிடி திரை மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!

அதேபோல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ளூடூத் இணைப்பு தொழிற்நுட்பமும் இந்த பைக்கில் கொடுக்கப்படலாம். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் பொருத்தப்படலாம்.

எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!

ப்ரேக்கிற்கு 282மிமீ மற்றும் 220மிமீ-இல் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படும். அதேநேரம் இந்த பைக் தற்போதைய யமஹா எஃப்இசட் பைக்குகளின் ஸ்பெஷல் எடிசனாகவும் இருக்க வாய்ப்புண்டு.

எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!

ஸ்பெஷல் எடிசன் என்றால், வெறும் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமே பைக்கில் கொண்டுவரப்படும். ஆனால் எஃப்இசட் ஸ்டாண்டர்ட் மாடலின் புதிய வேரியண்ட்டாக எஃப்இசட்-எக்ஸ் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

ஏனெனில் தற்சமயம் அட்வென்ச்சர் பைக்குகளுக்கே தேவை உருவாகி வருகிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Upcoming Yamaha FZ-X Specs Leaked: Here Is Everything You Need To Know About The Motorcycle!
Story first published: Friday, April 16, 2021, 20:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X