2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை

அப்டேட்டான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உடன் 2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை

பஜாஜ் பல்சர் 220 மோட்டார்சைக்கிள் முதன்முதலாக 2007ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து கடந்த ஒரு தசாப்தமாக இளைஞர்களின் மனதில் நீக்கா இடம் பிடித்திருக்கும் இந்த பல்சர் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையை சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் உயர்த்திருந்தது.

2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை

இந்த நிலையில் இந்த விலை அதிகரிப்புக்கு ஏற்றவாறு சில அப்டேட்கள் பல்சர் 220எஃப் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட பல்சர் 220எஃப் பைக்கின் தோற்றம் எம்ஆர்டி விலாக்ஸ் என்ற யூடியுப் சேனல் மூலமாக தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவில் பைக்கின் பின் சக்கரத்தில் வேகமானி வயர் இணைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. முந்தைய மாடலில் இது முன் சக்கரத்தில் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் மிக பெரிய மாற்றம் பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில்தான் கொண்டுவரப்பட்டுள்ளது.

2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை

அனலாக் டச்சோமீட்டர் மற்றும் டிஜிட்டல் படிப்பான் உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் செமி-டிஜிட்டல் தரத்தில்தான் தொடர்ந்துள்ளது. ஆனால் திரையின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. எரிபொருள் அளவை காட்டும் பகுதி திரையின் வலதுபக்க அடிபகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை

அதற்கு மேலே ட்ரிப் மற்றும் ஓடோமீட்டர் கொண்டுவரப்பட்டுள்ளது. திரையின் மையப்பகுதி முழுவதுமாக வேகமானிக்கு வழங்கப்பட்டுள்ளது. சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் எச்சரிக்கும் வசதி அதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை

இவ்வளவு இருந்து நேரம் மற்றும் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் உள்ளிட்டவற்றை மைய கன்சோல் காட்டவில்லை என்பது சற்று ஏமாற்றமாக உள்ளது. டச்சோமீட்டர் பகுதியில் சில விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. பெயிண்ட்டில் கூட எந்த அப்டேட்டும் இல்லை.

2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை

அதிகப்பட்சமாக 20.4 பிஎஸ் மற்றும் 18.55 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 220சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பெற்றுவரும் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.25 லட்சத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 Bajaj Pulsar 220F Launched With Updated Instrument Cluster
Story first published: Saturday, January 16, 2021, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X