ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்

ராயல் என்பீல்டின் பிரபலமான ஹிமாலயன் பைக்கிற்கு 3 புதிய நிறங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்

இந்தியாவில் உள்ள மலிவான அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்றான ராயல் என்பீல்டு ஹிமாலயன் விரைவில் அப்டேட் வெர்சனில் அறிமுகமாகவுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கும் பைக்குகளுள் ஒன்று ஹிமாலயன்.

ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்

தோற்றத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஹிமாலயன் அதன் முந்தைய தலைமுறையை தான் பெரிய அளவில் ஒத்து காணப்படும். தற்போதைய ஹிமாலயனில் உயரமான ரைடங்களுக்கு பெட்ரோல் டேங்கில் பொருத்தப்படும் ஃப்ரேம் சற்று அசவுகரியமாக விளங்குவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வெளிவருகின்றன.

ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்

இதனால் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் பெட்ரோல் டேங்கின் டிசைன் சற்று திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பது மோட்டார்பீம் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது. இந்த அப்டேட் வேரியண்ட்டில் இந்த ஃப்ரேம் சற்று சிறியதாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சற்று முன்னோக்கி பொருத்தப்பட்டுள்ளது.

ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்

இயக்கத்தின்போது இந்த மாற்றம் பெரிய அளவில் சவுகரியமானதாக இருக்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர் மேம்படுத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கை புதிய நிறங்களில் வாங்கும் வகையிலும் ராயல் என்பீல்டு வழங்கவுள்ளது.

ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்

புதிய நிறங்களில் சில்வர், மேட் ப்ளாக் மற்றும் பைன் க்ரீன் என்ற மூன்று நிறங்கள் அடங்குகின்றன. தற்சமயம் க்ராவல் க்ரே, ஸ்லீட் க்ரே, ஸ்னோ வொய்ட், க்ரானைட் ப்ளாக், ராக் ரெட் மற்றும் ஏரியின் நீலம் என்ற நிறங்களில் ஹிமாலயன் பைக் கிடைக்கிறது.

ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்

இவற்றில் சில நிறங்கள் புதிய நிறங்களின் வருகையினால் நிறுத்தப்படலாம். ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ட்ரிப்பர் நாவிகேஷன் வசதியை மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தி இருந்தது. இது ராயல் என்பீல்டின் எதிர்கால தயாரிப்புகளுக்கும் தொடரப்படவுள்ளது.

ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்

மொபைல் போன் வழியாக டர்ன்-பை-டர்ன் நாவிகேஷனை வழங்கும் இந்த வசதி 2021 ஹிமாலயன் பைக்கிலும் வழங்கப்படவுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட ஹிமாலயனில் மிக முக்கியமான அப்கிரேடாக இது வழங்கப்படவுள்ளது. இருப்பினும் புதிய ட்ரிப்பர் நாவிகேஷன் வசதியினால் மொபைல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை கண்ட்ரோல் செய்ய முடியாது.

ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்

மற்றப்படி தற்போதைய 411சிசி பிஎஸ்6, ஏர் கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் அதிகரிக்கபடலாம். அதேபோல் அப்டேட் செய்யப்பட்ட ஹிமாலயனின் விலையும் உயர்த்தப்படலாம். ஹிமாலயனின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.91 லட்சம் மற்றும் ரூ.1.96 லட்சமாக உள்ளது.

Most Read Articles
English summary
2021 Royal Enfield Himalayan Details Revealed, Gets 3 New Colours
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X