நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது!! புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ!

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய ஹீரோ கிளாமர் பைக்கின் டீசர் படம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது!! புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் அதன் மோட்டார்சைக்கிள்களை அப்டேட் செய்வதில் தீவிரமாக உள்ளது.

நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது!! புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ!

ஏனெனில் சமீபத்தில் தனது 125சிசி ஸ்கூட்டர் மாடலான மேஸ்ட்ரோ எட்ஜை அப்டேட் செய்திருந்த ஹீரோ நிறுவனம் அதனை தொடர்ந்து கிளாமர் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு களமிறக்கியது.

இந்த நிலையில் தற்போது அப்டேட் செய்யப்பட்ட கிளாமர் மோட்டார்சைக்கிளின் டீசர் வீடியோக்களை சமூக வலைத்தள பக்கங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பதிவிட்டுள்ளது. விற்பனையில் இருக்கும் தற்போதைய மாடலுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் புதிய ஹீரோ கிளாமர் காஸ்மெட்டிக் மாற்றங்களை அதிகளவில் பெற்றுள்ளது.

அதேநேரம் இயந்திர பாகங்களிலும் சிறிய அளவிலான அப்டேட்களை ஏற்றுவரலாம். இந்த டீசர் வீடியோக்களில் புதிய கிளாமரின் H-வடிவ டிஆர்எல் உடன் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்பையும், பளபளப்பான கருப்பு நிற பெயிண்ட்டையும், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் பார்க்க முடிகிறது.

நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது!! புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ!

இதில் H-வடிவ எல்இடி ஹெட்லேம்பை ஏற்கனவே முந்தைய டீசர் படத்தின் மூலமாகவே ஹீரோ நிறுவனம் வெளிக்காட்டி இருந்தது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் ப்ளூடூத் வசதி மூலமாக ஒவ்வொரு திருப்பலுக்கும் நாவிகேஷன் மற்றும் அழைப்பு எச்சரிக்கைகளை பெறலாம்.

நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது!! புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ!

இவற்றுடன் இந்த திரையின் மூலமாக கியர் பொசிஷன் இண்டிகேட்டர், நேரம் மற்றும் மோட்டார்சைக்கிள் சேவை எச்சரிப்பையும் ஓட்டுனர் பெற முடியும். மற்றப்படி கிளாமரின் வழக்கமான 124.7சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜினில் மாற்றம் இருக்காது.

நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது!! புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ!

அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 10.7 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 10.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்த ஹீரோ பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹைட்ராலிக் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்படுகின்றன.

நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது!! புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ!

புதிய அப்கிரேட்களினால் புதிய கிளாமர் பைக்கின் விலையினை சற்று அதிகமாக எதிர்பார்க்கிறோம். ஹீரோ கிளாமரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.74,500-ஆக உள்ளது. புதிய தலைமுறை கிளாமரை பற்றிய கூடுதல் விபரங்களுக்கு அதன் அறிமுகம் வரையில் காத்திருக்க வேண்டும்.

Most Read Articles

English summary
Updated Hero Glamour 125 will launch soon teaser out.
Story first published: Wednesday, July 28, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X