தயவுசெய்து இத பாத்தாவது திருந்துங்க! செல்போனை பார்த்தபடி சைக்கிள் ஓட்டிய இளைஞர்.. என்ன ஆச்சுனு நீங்களே பாருங்க

செல்போனை பார்த்தபடி வாகனத்தை ஓட்டினால் என்ன நடக்கும் என்பதை விளக்கும் வகையில் ஓர் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பெட்ரூம்ல, பாத்ரூம்ல ஓகே - சைக்கிள் ஓட்டும்போது கூடவா! செல்போனை பார்த்தபடி வந்த இளைஞர்... என்ன ஆச்சுனு பாருங்க!

உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் தங்க இடம் இந்த அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் புதிதாக செல்போனும் இணைந்துள்ளது. ஆச்சரியப்படாதீங்க, இது தற்கால இளைஞர்களுக்கான அத்தியாவசியங்களின் பட்டியல் ஆகும். இப்போதைய இளைஞர்கள் பலர் மேலே கூறிய மூன்று முக்கியமான அத்தியாவசியங்கள்கூட இல்லாமல் இருந்துவிடுவார்கள், ஆனால், செல்போன் இல்லாமல் அவர்களால் ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது.

பெட்ரூம்ல, பாத்ரூம்ல ஓகே - சைக்கிள் ஓட்டும்போது கூடவா! செல்போனை பார்த்தபடி வந்த இளைஞர்... என்ன ஆச்சுனு பாருங்க!

தங்களின் மூன்றாம் கையாகவே அதனை பாவித்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் விளைவாக நடக்கும்போது, சாப்பிடும்போது, ஏன் குளியலறையில்கூட சேட்டிங் செய்யும் பழக்கம் அவர்களிடத்தில் உருவாகியிருக்கின்றது. இதுமாதிரியான அபரீதமான செல்போன் பயன்பாட்டை மேலே கூறிய இடங்களில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.

பெட்ரூம்ல, பாத்ரூம்ல ஓகே - சைக்கிள் ஓட்டும்போது கூடவா! செல்போனை பார்த்தபடி வந்த இளைஞர்... என்ன ஆச்சுனு பாருங்க!

ஆனால் டிரைவிங்கின்போது, ஒரு காலமும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏன்?, என்பதை விளக்கக்கூடிய சம்பவம் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். செல்போனில் முழுமையாக மூழ்கிய இளைஞர் ஒருவர் தனக்கு முன்னாள் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக்கூட கண்டுக்கொள்ளாமல் சைக்கிளுடன் வந்து மோதிக் கொள்கின்றனர்.

பெட்ரூம்ல, பாத்ரூம்ல ஓகே - சைக்கிள் ஓட்டும்போது கூடவா! செல்போனை பார்த்தபடி வந்த இளைஞர்... என்ன ஆச்சுனு பாருங்க!

இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்கும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்த வீடியோவை, அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் ரெக் சேப்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பெட்ரூம்ல, பாத்ரூம்ல ஓகே - சைக்கிள் ஓட்டும்போது கூடவா! செல்போனை பார்த்தபடி வந்த இளைஞர்... என்ன ஆச்சுனு பாருங்க!

"வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்பாடு வேண்டாம்" என்ற வாசகத்துடன் இவ்வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இணையத்தில்மிக வேகமாக வைரலாகி வரும் இவ்வீடியோவை இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். மேலும், பலர் இளைஞரின் செயலுக்கு கடுமையான எதிர்ப்புகளையும் கமெண்ட் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

பெட்ரூம்ல, பாத்ரூம்ல ஓகே - சைக்கிள் ஓட்டும்போது கூடவா! செல்போனை பார்த்தபடி வந்த இளைஞர்... என்ன ஆச்சுனு பாருங்க!

மது, அதி வேகம் ஆகியவற்றைப் போலவே அதிகம் விபத்துகள் அரங்கேறுவதற்கான காரணங்களில் ஒன்றான செல்போன் பயன்பாடு மாறியிருக்கின்றது. வாகனத்தை ஓட்டிக் கொண்டே ஓட்டுநர்கள் செல்போனுக்குள் மூழ்கிவிடுவதால் எதிரில் இருக்கும் அல்லது வரும் வாகனங்களை அவர்களை கவனிக்க தவறிவிடுகின்றனர்.

பெட்ரூம்ல, பாத்ரூம்ல ஓகே - சைக்கிள் ஓட்டும்போது கூடவா! செல்போனை பார்த்தபடி வந்த இளைஞர்... என்ன ஆச்சுனு பாருங்க!

இதன்விளைவாக விபத்து அல்லது வேறு விதமான கசப்பான அனுபவங்களை அவர்கள் சந்திக்க நேரிடுகின்றது. இதனை வெளிக்காட்டும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் இந்த சம்பவம் அமைந்துள்ளது. சற்று அதிக வேகமாக வந்து மோதியதன் காரணத்தினால் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு கண்ணத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தொடர்ந்து, அவர் ஓட்டி வந்த சைக்கிளும் கடுமையான சேதங்களைச் சந்தித்திருக்கின்றது. குறிப்பாக, முன் வீல் நேரடியாக மினி வேனின் பின் பகுதியில் மோதியதில் பெண்டாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தே பலர் அவருக்கு பாவ பட்டு வருகின்றனர். அதேசமயம், பலர் இளைஞருக்கு இது தேவைதான் நக்கலடித்தும் வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Using Phone While Driving Is Not A Good; Here is Good Example. Read In Tamil.
Story first published: Saturday, April 10, 2021, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X