ஒரு முழுமையான சார்ஜில் 90 கிமீ போகும்... Vmotoவின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு!

முற்றிலும் வித்தியாசமான தோற்றத்திலான ஓர் மின்சார ஸ்கூட்டரை கான்செப்ட் மாடலாக விமோட்டோ சோகோ குழுமம் வெளியீடு செய்திருக்கின்றது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தொடங்கியிருக்கும் இந்த மின் வாகனம் பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

விமோட்டோ சோகோ குழுமம் முற்றிலும் வித்தியாசமான தோற்றம் மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட மின்சார ஸ்கூட்டர் ஒன்றை கான்செப்ட் மாடலாக வெளியீடு செய்திருக்கின்றது. இந்த இருசக்கர வாகனம் தற்போது உலக மின் வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

ஆஸ்திரேலியாவின் பெர்த்தை மையமாகக் கொண்டு இயங்கும் விமோட்டோ மற்றும் சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் சூப்பர் சோகோ ஆகிய நிறுவனங்களும் இணைந்தே இந்த கான்செப்ட் மாடலை உருவாக்கியிருக்கின்றன. புதிய கான்செப்ட் மாடல் இ-ஸ்கூட்டருக்கு நிறுவனங்கள் ஃப்ளீட் கான்செப்ட் எஃப் 01 (Fleet Concept F01) எனும் பெயரை வைத்திருக்கின்றன.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

இந்நிறுவனங்கள் அதன் மின்சார இருசக்கர வாகனங்களை உலகளவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே 2021 இஐசிஎம்ஏ-வில் புதிய ஃப்ளீட் கான்செப்ட் எஃப் 01 மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது காட்சிப்படுத்தியது. இந்த இருசக்கர வாகனம் தனி நபர் பயன்பாட்டிற்கானது அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

ஆம், வர்த்தக பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் கேரியர் அமைப்பே சான்றாக இருக்கின்றது. சரக்கு மற்றும் லக்கேஜ்களை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த கேரியர் இருசக்கர வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இருசக்கர வாகனத்தில் இருவர் அமர்ந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

இதற்கேற்ப இருக்கையே இவ்வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. உலகம் முழுவதிலும் இயங்கிக் கொண்டிருக்கும் டெலிவரி சேவை நிறுவனங்கள் தங்களின் பெட்ரோல் இருசக்கர வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு மின்சார இருசக்கர வாகனங்களைக் களமிறக்க முயற்சித்து வருகின்றன. இதற்கான அறிவிப்புகளையும் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் வர்த்தக பிரிவைக் கருத்தில் கொண்டு விமோட்டோ சோகோ குழுமம் புதிய ஃப்ளீட் கான்செப்ட் எஃப் 01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதனை மிக விரைவில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

பின்பக்கத்தில் மட்டுமின்றி முன் பக்கத்திலும் கணிசமான லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் வகையில் இட வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கிமி தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வாகனத்தில் 2000 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

இதன் அதிகபட்ச வேகமே மணிக்கு 45 கிமீ மட்டுமே ஆகும். மேலும், எலெக்ட்ரிக் வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரங்கள் தேவைப்படும். இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. சஸ்பென்ஷனை பொருத்தவரை வாகனத்தின் முன் பக்கத்தில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஸ்விங்கர்ம் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக சிபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற கவர்ச்சியான அம்சங்களே தற்போது வெளியீட்டைப் பெற்றிருக்கும் ஃப்ளீட் கான்செப்ட் எஃப் 01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது. இதன் தோற்றமும் மிகவும் கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

இதற்காக இருசக்கர வாகனத்தில் மெல்லிய ரக ஹெட்லேம்ப், தனித்துவமான யு-வடிவ டிஆர்எல்கள் மற்றும் சிறப்பு தோற்றம் கொண்ட ஹேண்டில் பார் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் இந்த இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

ஃப்ளீட் கான்செப்ட் எஃப் 01 இ-ஸ்கூட்டரில் மிக சிறந்த இயக்க அனுபவத்திற்காக 16 இன்ச் வீல் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் 14 இன்ச் வீலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், நகர்ப்புற சாலைகளைச் சமாளிக்கும் திறன் கொம்ட டயர்களும் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஒரு சார்ஜில் 90 கிமீ போகும்... Vmoto-வின் புதிய இ-ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் வெளியீடு... ஸ்கூட்டர்ல லக்கேஜையும் ஏற்றி போக முடியும்!

விமோட்டோ சோகோ குழுமம் இன்னும் இந்திய சந்தையில் அதன் வர்த்தகத்தைத் தொடங்கவில்லை. பேர்டு எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Bird Electric Mobility) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து அதன் தயாரிப்புகளை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் அடிப்படையில், நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் பேர்டு நிறுவனத்தின் பிராண்டில் மிக விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Vmoto reveald e scooter fleet concept f01 here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X