250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

மணிக்கு 105 கிமீ வேகம் மற்றும் ஒற்றை முழுமையான சார்ஜில் 250 கிமீ பயணம் எனும் வியக்க வைக்கும் திறன்களுடன் ஓர் மின்சார பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இஐசிஎம்ஏ (EICMA) 2021இல் வெளியீட்டைப் பெற்றிருக்கும் இந்த மின்சார பைக் பற்றிய முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிப் போடப்பட்டு வந்த வாகன கண்காட்சிகள் தற்போது அதிக கட்டுப்பாடுகளுடன் ஆங்காங்கே நடை பெற தொடங்கியுள்ளன. அந்தவகையில், உலக புகழ் பெற்ற சர்வதேச மோட்டார் சைக்கிள் மற்றும் பாகங்கள் கண்காட்சி (International Motorcycle and Accessories Exhibition - EICMA 2021) தற்போது தொடங்கியுள்ளது.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

இந்த கண்காட்சி கடந்த 25ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. வரும் 28 அன்றுடன் இது முடிவடைய இருக்கின்றது. இதில் எண்ணற்ற புதிய வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சீன-ஆஸ்திரேலியா நிறுவனமான விமோட்டோ சோகோ குழுமம் (Vmoto Soco Group), அதன் புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடலான ஸ்டேஷ் (Stash) இ-பைக்கை முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

இந்நிறுவனம், இன்னும் பல எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருக்கின்றது. சூப்பர் சோகோ டிஎஸ் (Super Soco TS), சூப்பர் சோகோ டிசி (Super Soco TC), சூப்பர் சோகோ டிஎஸ்எக்ஸ் (Super Soco TSX) மற்றும் சூப்பர் சோகோ டிசி மேக்ஸ் (Super Soco TC Max) ஆகிய இருசக்கர வாகனங்களையே நிறுவனம் ஸ்டேஷ் உடன் சேர்த்து காட்சிப்படுத்தியிருக்கின்றன.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

இவையனைத்திலும் ஸ்டேஷ் பலரை கவரும் வகையில் அமைந்துள்ளது. இதன் அதிக கவர்ச்சியமான மற்றும் முரட்டுத் தனமான தோற்றம், சூப்பர் ஃபாஸ்ட் வேகம் மற்றும் அதிக ரேஞ்ஜ் உள்ளிட்ட திறன்கள் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

விமோட்டோ ஸ்டேஷ் மின்சார பைக் அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த சூப்பர் ஃபாஸ்ட் திறனுக்காக நிறுவனம் 6-kW திறன் கொண்ட மின் மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இத்துடன், மிக அதிக ரேஞ்ஜை வழங்குவதற்காக 72V-100Ah - 7.2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 250 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். ஆனால், அதிகபட்ச வேகமான 105 கிமீ வேகத்தில் பயணித்தால் இந்த பெற முடியாது. மணிக்கு 45 கிமீ எனும் குறைந்த வேகத்தில் பயணித்தால் மட்டுமே 250 கிமீ எனும் உச்ச ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும்.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

இருசக்கர வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 6 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமான சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் இந்த அதிகபட்ச நேரத்தை அது எடுத்துக் கொள்ளும். அதுவே, ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் மிக விரைவில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆனால், இதன் துள்ளியமான நேரம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

இந்த அசத்தலான திறன் உலக மின்சார வாகன பிரியர்களை வெகுவாக கவரும் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி பைக் உருவாக்கப்பட்டிருக்கும் விதமும் பலரைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தை விமோட்டோ ஸ்டேஷ் பெற்றிருக்கின்றது.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக பைக்கின் முன் பக்கம் மிகவும் முரட்டுத் தனமானதாக காட்சியளிக்கின்றது. இதற்காக அதிக கட்டுமஸ்தான பாடி பேனல்கள் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, கவர்ச்சியான தோற்றத்திற்காக இரட்டை நிறம், பெரிய பெட்ரோல் டேங்க் போன்ற அமைப்பு, டிஆர்எல்கள் உடன் கூடிய மெல்லிய ஹெட்லேம்ப், கருப்பு நிற விண்ட் ஸ்கிரீன், ஸ்பியர் வடிவிலான இன்டிகேட்டர்கள், ஃபிளாட்டான ஹேண்டில் பார், சைனிவி டேங்க், ஸ்பிளிட் இருக்கைகள், அலாய் வீல்கள், ஸ்லீக் கிராப் ரெயில், எட்ஜி (மிகவும் ஓரத்திலான) டெயில் லேம்ப் மற்றும் டயர் ஹக்கர் உள்ளிட்டவை பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

இத்துடன், செவ்வக வடிவ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் களஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டது. இருசக்கர வாகனம் தற்போது காட்சிப் பொருளாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மிக விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தை செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், இதன் விலை விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில் 4,690 யூரோக்களுக்கு இது விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. இந்திய மதிப்பில் ரூ. 3.92 லட்சம் ஆகும். இது தோராயமான மதிப்பு மட்டுமே ஆகும்.

250கிமீ ரேஞ்ஜ்! மணிக்கு 105கிமீ வேகம்! Vmoto Stash இ-பைக் வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?

இப்பைக் இந்தியா வருவது சற்று சந்தேகமே. அதேநேரத்தில் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து காணப்படுவதால் மிக விரைவில் இப்பைக் அறிமுகவாதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம், இந்த மின்சார பைக்கை உலக சந்தையில் கருப்பு, வெள்ளி மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் விற்க திட்டமிட்டுள்ளது. பைக்கின் ஃப்யூவல் டேங்க் ஸ்டோரேஜ் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஓர் முழு முக ஹெல்மெட்டையே வைத்துக் கொள்ள முடியுமாம். தொடர்ந்து பெரிய இருக்கை, அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட டயர்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Vmoto reveals stash electric motorcycle at eicma 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X