ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய இருசக்கர வாகனத்தை கான்செப்ட் மாடலாக பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஸியோமி வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

ஸியோமிக்கு சொந்தமான செக்வே-நைன்பாட் (Segway-Ninebot) அதன் முதல் ஹைட்ரஜன்-எலெக்ட்ரிக் வசதிக் கொண்ட ஹைபிரிட் மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்துள்ளது. முன்மாதிரி (concept) மாடலாகவே நிறுவனம் இதனை காட்சிப்படுத்தியுள்ளது. செக்வே அபெக்ஸ் எச்2 எனும் பெயரை நிறுவனம் இப்பைக்கிற்கு வைத்திருக்கின்றது.

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

தனது தாய் நாடான சீனாவிலேயே இப்பைக்கை ஸியோமி காட்சிப்படுத்தியிருக்கின்றது. காட்சிப்படுத்தப்பட்ட முதல் நாளே 99 பேர் இப்பைக்கிற்கு முன் பதிவை வழங்கியிருக்கின்றனர். இன்னும் இப்பைக்கின் உற்பத்த பணிகள்கூட தொடங்கப்படாதநிலையில் முன் பதிவு கொடுக்கப்பட்டிருப்பது, வரலாற்று சிறப்பு நிகழ்வாகும்.

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

இந்த ஹைபிரிட் இருசக்கர வாகனம் சீனாவின் யுவான் மதிப்பில் 69,999 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய ரூபாய் மதிப்பில் 7.84 லட்சம் ஆகும். அதிக தொழில்நுட்ப வசதியுடன் இப்பைக் உருவாக இருப்பதாலேயே இத்தகைய அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட இருக்கின்றது.

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

எப்போது எதிர்பார்க்கலாம்?

செக்வே-நைன்பாட் நிறுவனம், இப்பைக்கை 2023ம் ஆண்டில் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கின்றது. மிக விரைவில் இதன் உற்பத்தி பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றன. ஹைட்ரஜன் மற்றும் மின்சார சக்தியால் இப்பைக் இயங்கும் என்பது இதுவரை சந்தையில் இல்லாத ஓர் வசதியாகும். இந்த வசதியில் இதுவரை எந்தவொரு இருசக்கர வாகனமும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

இதன் எஞ்ஜின் அதிகபட்சமாக 81.5 பிஎஸ் பவரை வெளியேற்றும் என நிறுவனம் கூறியிருக்கின்றது. தொடர்ந்து, 0த்தில் இருந்து மணிக்கு 100கிமீ என்ற வேகத்தை வெறும் 4 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீ ஆகும்.

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

ஹைட்ரஜன் மிகவும் ஆபத்தானது ஆகும். இதன் சேமிப்புக் கொள்கலனில் சிறிது சேதம் ஏற்பட்டாலும்கூட வெடிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், தண்ணீர் பாட்டில் போன்ற பெரிய இரும்பு சிலிண்டர்கள் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஹைட்ரஜனைப் பாதுகாப்பாக சேமிக்கவும், பயன்படுத்தவும் இவை உதவும்.

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1 கிமீ ரேஞ்ஜை இது வழங்கும். ஹைட்ரஜன் எரிபொருளை நிரப்புவதும் மிக சுலபம். இப்பைக்கில், ஸ்லிக்ஸ்களால் மூடப்பட்ட சாலிட் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையே வாகனத்தின் ஸ்மூத்தான இயக்கத்திற்கு உதவ இருக்கின்றன.

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

இதேபோன்று, இதன் உடல் பேனல்களும் நம்ப முடியாத உருவ அமைப்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றை லேசான மாற்றம் செய்தே உற்பத்தி மாடலில் செக்வே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இப்பைக்கின் முன்பக்கத்தில் இன்வெர்டட் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

இவை சிறந்த சஸ்பென்ஷனுக்கு உதவும். இத்துடன், 7இன்சிலான திரை, முழுக்க முழுக்க எல்இடி மின் விளக்குகள் என பல்வேறு பிரீமியம் அம்சங்களையும் இப்பைக்கில் செக்வே வழங்க இருக்கின்றது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் மிக அதிக பிரமாண்ட வசதிகளுடன் இப்பைக் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு கிராம் ஹைட்ரஜனுக்கு 1கிமீ பயணிக்கலாம்! ஸியோமியின் அசத்தல் திறனுடைய ஹைபிரிட் பைக்... முழு விபரம்!!

செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஸியோமி மின்சார வாகன தயாரிப்பில் முழுமையாக இறங்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதற்காக கிரேட் வால் மோட்டார்ஸின் வாகன உற்பத்தி ஆலையை நிறுவனம் பயன்படுத்த இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. ஸியோமி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மின்வாகன தயாரிப்பில் ஈடுபட்டு நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Xiaomi Unveiled Hydrogen-Electric Hybrid Bike Concept In China. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X