விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்! ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!

யமஹா (Yamaha) நிறுவனம் அதன் புதுமுக ஏரோக்ஸ் 155 (Aerox 155) மேக்ஸி ரக ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலை மற்றும் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் ஆகியவை குறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா (Yamaha), புதுமுக ஸ்கூட்டர் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஏரோக்ஸ் 155 (Aerox 155) எனும் பெயரில் அந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது ஓர் 155 சிசி திறன் கொண்ட மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆகும்.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஆகையால், இப்பிரிவில் தனக்கான இடத்தைப் பிடிக்கும் நோக்கில் ஏரோக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டரை யமஹா இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

இன்று (செப்டம்பர் 21) நடைபெற்ற விர்ச்சுவல் வெளியீட்டு நிகழ்வின் வாயிலாக ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. அறிமுக விலையாக ரூ. 1.29 லட்சம் என்ற விலை ஏரோக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

இந்த ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் அதன் ப்ளூ ஸ்கொயர் (Blue Square) விற்பனையகங்கள் வாயிலாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இம்மாத இறுதிக்குள் இந்த ஷோரூம்களில் யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் காட்சியளிக்க இருக்கின்றன. யமஹா நிறுவனம், இந்த ஸ்கூட்டரை, அதன் பிரபல ஸ்போர்ட்ஸ் தர பைக்குகளில் ஒன்றான ஆர்15 (R15) மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கி இருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

யமஹா ஆர்15 (YZF-R15) பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 155சிசி விவிஏ எஞ்ஜினே ஏரோக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், பைக்கிற்கான இணையான திறன்களை வெளியேற்றும் ஸ்கூட்டராக இது காட்சியளிக்கின்றது. இந்த விவிஏ எஞ்ஜினானது 15.36 பிஎச்பி திறனை 8,000 ஆர்பிஎம்மிலும், 13.9 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

இது தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் குறைந்த விலை ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான திறன் வெளிப்பாடு ஆகும். ஏரோக்ஸ் 155 தனது போட்டியாளர்களைக் காட்டிலும் அதிக திறன் வெளிப்பாட்டை பெற்றிருக்கின்றது. உதாரணமாக அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் அதிகபட்சமாக 10.9 பிஎஸ் பவரையும், 11.6 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

இதைக் காட்டிலும் பல மடங்கு அதிக திறன் வெளிப்பாட்டைக் கொண்டிருக்கின்றது புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் ஏரோக்ஸ் 155. திறன் வெளிப்பாட்டில் மட்டுமல்ல சிறப்பு வசதிகளைத் தாங்கியிருப்பதிலும் செம்ம டஃப் கொடுக்கும் மேக்ஸி ரக ஸ்கூட்டராக ஏரோக்ஸ் 155 காட்சியளிக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணம் மேக்ஸி ஸ்கூட்டரின் ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கு இணையான தோற்றம் இருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

மேலும், இந்த ஸ்கூட்டரில் பாதுகாப்பான பிரேக்கிங் வசதிக்காக சிங்கிள் சேனல் ஏபிஎஸ், 14 இந்சிலான வீல்கள், 140 மிமீ அகலம் கொண்ட டயர்கள், ப்ளூடூத் இணைப்பு வசதி (பிரத்யேக செயலியுடன்), 5.8 இன்சிலான எல்சிடி க்ளஸ்டர், எல்இடி மின் விளக்குகள், 24.5 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி (இருக்கைக்கு அடியில்), வெளிப்புறம் வாயிலாக எரிபொருளை நிரப்பும் வசதி என உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் ஏரோக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

யமஹா நிறுவனம் ஏரோக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டரை இரு விதமான நிற தேர்வில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அந்தவகையில், ரேசிங் நீலம் மற்றும் கிரே வெர்மில்லியன் ஆகிய இரு தேர்வுகளிலேயே ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருக்கிறது. இத்துடன், மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி எடிசன் (Monster Energy Yamaha MotoGP Edition) எனும் சிறப்பு பதிப்பிலும் ஏரோக்ஸ் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

யமஹா நிறுவனம் அண்மைக் காலங்களாக இந்தியர்களைப் புதிய தயாரிப்பின் வாயிலாக கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், அதன் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட ஃபஸ்ஸினோ எஃப்ஐ 125 மற்றும் ரே-இசட்ஆர் எஃப்ஐ 125 ஸ்கூட்டர்களை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

இதைத் தொடர்ந்து தற்போது ஏரோக்ஸ் 155, ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான திறன் வெளிப்பாடுக் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் மோட்டோஜிபி வெர்ஷனுக்கு நிறுவனம் ரூ. 1.30 லட்சம் என்ற விலையை நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. அணிகலன் மற்றும் நிறத்தில் மட்டுமே இது வழக்கமான வேரியண்டுடன் மாறுபட்டு காட்சியளிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது Yamaha Aerox மேக்ஸி ஸ்கூட்டர்... ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில்!!

புதிய யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும ப்ளூடூத் மற்றும் ஒய்-கன்னெக்ட் செயலி வாயிலாக பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்தவகையில், ஸ்மார்ட்போனுடன் இருசக்கர வாகனத்தை இணைக்கையில் பார்கிங் செய்யப்பட்ட இடம், சர்வீஸ் விடும் காலம், மைலேஜ், பிற நோடிஃபிகேஷன்களை நம்மால் விரல் நுனியில் பெற்றுக் கொள்ள முடியும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha aerox 155 maxi sports scooter launched in india here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X