யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...

சமீபத்தில் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...

இளைஞர்களின் மத்தியில் மிக பிரபலமான யமஹா ஸ்போர்ட்ஸ் ரக பைக்கான ஆர்15-இன் விலை மிக சமீபத்தில் தான் ரூ.1,200 அதிகரிக்கப்பட்டிருந்தது. இது வாடிக்கையாளர்களின் மத்தியில் சிறிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.1,500 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...

இந்த புதிய விலை அதிகரிப்பினால் யமஹா ஆர்15 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்துள்ளது. இந்த யமஹா பைக் க்ரே, நீலம் மற்றும் டார்க் நைட் என்ற மூன்று விதமான நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...

இதில் ஆரம்ப நிலை நிறத்தேர்வான க்ரேவில் ஆர்15 பைக் முன்பு ரூ.1,49,100 என்ற எக்ஸ்ஷோரூம் விலையை கொண்டிருந்தது. ஆனால் இனி இந்த நிறத்தில் ஆர்15-இன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,50,600 ஆகும். நீல நிறத்தில் இந்த பைக்கை ரூ.1,51,700 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம்.

யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...

அதேநேரம் டார்க் நைட் நிறத்தில் ஆர்15 பைக்கின் விலை ரூ.1,52,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்புகளுக்கு ஏற்ப பைக்கில் எந்தவொரு மாற்றத்தையோ, அப்கிரேடையோ கொண்டுவந்துள்ளதாக யமஹா நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.

யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...

இருப்பினும் யமஹா ஆர்15 பைக்கின் முக்கிய போட்டி பைக் மாடலான கேடிஎம் ஆர்சி125-இன் விலை மேற்கூறப்பட்ட விலைகளை காட்டிலும் ரூ.12,000 அளவில் அதிகமாக உள்ளது. விலை குறைவு என்பதால யமஹா ஆர்15-ஐ குறைவாக எடை போட வேண்டும்.

யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...

ஏனெனில் ஆர்சி125 பைக்கை காட்டிலும் ஆர்15-இல் பெரிய என்ஜின் மற்றும் கூடுதல் தொழிற்நுட்ப அம்சங்களை யமஹா நிறுவனம் வழங்குகிறது. யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 வி3.0 பைக்கில் 155சிசி லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...

அதிகப்பட்சமாக 18.6 எச்பி மற்றும் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச் மூலம் இணைக்கப்படுகிறது. ட்யூல்-சேனல் ஏபிஎஸ்-ஐ பெற்றுவரும் ஆர்15 பைக்கில் ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன் மற்றும் பின் சக்கரத்தில் முறையே 282 மிமீ மற்றும் 220 மிமீ-ல் டிஸ்க்குகள் பொருத்தப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha increased once again the price of YZF R15 V3 in India.
Story first published: Friday, March 5, 2021, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X