560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

2022 யமஹா டிமேக்ஸ் என்ற பெயரில் 560சிசி ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் ஐரோப்பிய நாட்டு சந்தையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய யமஹா ஸ்கூட்டரை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

மேக்ஸி ஸ்கூட்டர்களெல்லாம் அரசியாக விளங்கும் டிமேக்ஸ் ஐரோப்பிய சந்தையில் இம்முறை ஏகப்பட்ட அப்டேட்களை பெற்று வந்துள்ளது. அடுத்த 2022ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் யமஹா டிமேக்ஸ் முதன்முதலாக ஐரோப்பாவில் 2001இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

அங்கு சிறப்பாக விற்பனையாகும் யமஹா ஸ்கூட்டர்களுள் ஒன்றாக கடந்த இருபது வருடங்களாக இது விளங்குகிறது. டிமேக்ஸ் ஸ்கூட்டரின் புதிய 2022 மாடலில் புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டிருப்பதுடன் ஸ்கூட்டரின் காற்று இயக்கவியல் பண்பும் மெருக்கேற்றப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்களுக்கு வழங்கப்படும் அப்டேட்களுக்கு இணையானதாக முன்பை காட்டிலும் முரட்டுத்தனமானதாக புதிய டிமேக்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

முன்பக்கத்தில் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்களின் ஸ்டைல் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பக்கத்தில் எதிர்காற்று தடுப்பு கண்ணாடி மற்றும் காற்று ஏற்பான் கூடுதல் நீளத்தில் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்களினால் ஸ்கூட்டரின் முன்பக்கம் கொக்கு போன்று தோற்றமளிக்கிறது.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

அதேபோல் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்ட்டுள்ள சில பேனல்களும் புதியவை. இவை ஸ்கூட்டரை சற்று சுருக்கியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். ஸ்கூட்டரின் இறுதிமுனை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதினால் ஒற்றை-துண்டு இருக்கை அமைப்பின் வடிவமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளதால் இந்த ஸ்கூட்டரினை தாராளமாக தொலைத்தூர பயணங்களுக்கும் கொண்டு செல்லலாம்.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

எடை குறைவான அலுமினியம் சேசிஸில் கட்டமைக்கப்பட்டுள்ள 2022 யமஹா டிமேக்ஸ் வளைவு திருப்பங்களில் கூடுதல் ஸ்மார்டாக திரும்பக்கூடியதாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஓட்டுனர் நன்கு முன்னோக்கி சாய்ந்து ஓட்ட வேண்டும் என்பது இந்த யமஹா டிமேக்ஸ் ஸ்கூட்டர் தொடர்பாக வெளியாகியுள்ள படங்களின் மூலமாக தெரிய வருகிறது.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

இதனால் இயக்கத்தின்போது முக்கோணம் போல் தெரிகிறது. டிமேக்ஸ் மற்றும் டிமேக்ஸ் டெக் மேக்ஸ் என இரு விதமான வேரியண்ட்களில் இந்த 2022 மேக்ஸி-ஸ்கூட்டரை யமஹா வழங்கியுள்ளது. இதில் டிமேக்ஸ் மஞ்சள், ஐகான் நீலம் மற்றும் ஸ்வார்ட் க்ரே என்ற 3 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

மறுப்பக்கம் டார்க் பெட்ரோல் மற்றும் பவர் க்ரே என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் டிமேக்ஸ் டெக் மேக்ஸ் விற்பனை செய்யப்பட உள்ளது. அலாய் சக்கரங்கள் மஞ்சள் நிறத்தில் ஸ்கூட்டரின் தோற்றத்தை அழகாக காட்டக்காட்டுகின்றன. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், புதிய 7-இன்ச் முழு-வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை இந்த யமஹா ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

இது ப்ளூடூத், வைபை மற்றும் யுஎஸ்பி வழியாக கார்மின் வரைப்படங்கள் உடன் தொழிற்சாலையிலேயே வழங்கப்படும் நாவிகேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்கக்கூடியதாக உள்ளது. இவை அனைத்தையும், ஹேண்டில்பாரில் வீடியோ கேம் ஜாய்ஜிஸ்டிக் போன்றதான செட்அப்-ஐ கொண்ட ஹேண்டில்பாரின் மூலம் கண்ட்ரோல் செய்யலாம்.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

ரைடிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு ஹேண்டில்பார் ஸ்விட்ச்கள் உடன் ஹீட்டட் ஹேண்டில்பார் க்ரிப்கள், ஹீட்டட் இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஷீல்டு முதலியவற்றை இந்த யமஹா மேக்ஸி-ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இவற்றுடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்மார்ட் சாவி உடன் சாவியில்லா ஸ்டார்ட், எரிபொருள் நிரப்பும் பகுதி & இருக்கையை திறப்பதற்கு ரிமோட் கண்ட்ரோல் மற்றும் பல ரைட் மோட்கள் உள்ளிட்டவையும் தொழிற்நுட்பங்களாக 2022 டிமேக்ஸில் வழங்கப்பட்டுள்ளன.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

ஆனால் இவற்றில் பெரும்பான்மையானவை டாப் டெக் மேக்ஸ் ட்ரிம்-மில் தான் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய டி-மேக்ஸிலும் அதே 560சிசி இரட்டை-சிலிண்டர் டிஒஎச்சி என்ஜின் தான் முந்தைய வெர்சனில் இருந்து அப்படியே வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 47.6 பிஎச்பி மற்றும் 5,250 ஆர்பிஎம்-இல் 55.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

560சிசி யமஹா ஸ்கூட்டர் ஐரோப்பாவில் வெளியீடு- 2022 டிமேக்ஸ்!! 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்!

பெல்ட் ட்ரைவ் உடன் வழங்கப்படும் இந்த டிரான்ஸ்மிஷன் ஸ்கூட்டரின் பின் சக்கரத்தை இயக்குகிறது. என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், ஸ்கூட்டரின் மற்ற இயந்திர பாகங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வகையில் சஸ்பென்ஷனுக்கு புதிய 41மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பின்பக்கத்தில் வழக்கம்போல் ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஓட்டுனருக்கு நன்கு சவுகரியத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது. பிரேக்கிங் பணியினை கவனிக்க 262மிமீ மற்றும் 282மிமீ-இல் டிஸ்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனுடன் இரட்டை-சேனல் ஏபிஎஸ்-உம் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு உள்ளது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
2022 Yamaha TMax 560cc Scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X