யமஹாவின் என்மேக்ஸ் ஸ்டார் வார்ஸ் எடிசன் ஸ்கூட்டர்கள்!! ஸ்டைல் அள்ளுது, இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

யமஹா என்மேக்ஸ் 125 ஸ்டார் வார்ஸ் எடிசன் ஸ்கூட்டர் பிரேசில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் யமஹா ஸ்கூட்டரை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹாவின் என்மேக்ஸ் ஸ்டார் வார்ஸ் எடிசன் ஸ்கூட்டர்கள்!! ஸ்டைல் அள்ளுது, இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

பெயருக்கு ஏற்றாற்போல், ஹாலிவுட் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் கதாபாத்திரங்களை போன்று புதிய பிரத்யேகமான பெயிண்ட் உடன் என்மேக்ஸ் 125 ஸ்கூட்டரின் இந்த ஸ்பெஷல் எடிசன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யமஹாவின் என்மேக்ஸ் ஸ்டார் வார்ஸ் எடிசன் ஸ்கூட்டர்கள்!! ஸ்டைல் அள்ளுது, இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதன்படி ரீபெல் அலையன்ஸ் (கிளர்ச்சி கூட்டணி) மற்றும் களாக்டிக் எம்பியர் (விண்மீன் பேரரசு) என்ற இரு பெயிண்ட் உடைகள் இந்த யமஹா ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி இந்த யமஹா ஸ்கூட்டரில் வழக்கமாக வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்களிலோ அல்லது என்ஜின் அமைப்பிலோ எந்த மாற்றமும் இல்லை.

யமஹாவின் என்மேக்ஸ் ஸ்டார் வார்ஸ் எடிசன் ஸ்கூட்டர்கள்!! ஸ்டைல் அள்ளுது, இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

புதிய பெயிண்ட்களில் ரீபெல் அலையன்ஸில் வெள்ளை நிறம் பிரதான நிறமாகவும், களாக்டிக் எம்பியரில் கருப்பு/சிவப்பு நிறம் பிரதான நிறமான உள்ளன. இத்துடன் என்மேக்ஸ் 125 ஸ்கூட்டரின் 2021 எடிசனையும் யமஹா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் ஸ்டார் வார்ஸ் எடிசன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

யமஹாவின் என்மேக்ஸ் ஸ்டார் வார்ஸ் எடிசன் ஸ்கூட்டர்கள்!! ஸ்டைல் அள்ளுது, இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

2021 என்மேக்ஸ் 125 ஸ்கூட்டரிலும் வழக்கமான 124சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் தொடரப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் யுரோ 5/ பிஎஸ்6 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக மாற்றப்பட்டுள்ள இந்த என்ஜின் சற்று கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மேம்பட்டுள்ளது.

யமஹாவின் என்மேக்ஸ் ஸ்டார் வார்ஸ் எடிசன் ஸ்கூட்டர்கள்!! ஸ்டைல் அள்ளுது, இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த யுரோ 5 என்ஜின் தற்போது அதிகப்பட்சமாக 11.8 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தும். ஏற்கனவே கூறியதுதான், ஸ்பெஷல் ஸ்டார் வார்ஸ் எடிசன்கள் யமஹா என்மேக்ஸ் 125 ஸ்கூட்டரின் வழக்கமான வசதிகளை அப்படியே தொடர்ந்துள்ளன.

யமஹாவின் என்மேக்ஸ் ஸ்டார் வார்ஸ் எடிசன் ஸ்கூட்டர்கள்!! ஸ்டைல் அள்ளுது, இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஸ்மார்ட்போன் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் எல்சிடி கன்சோலை பெறும் இந்த யமஹா ஸ்கூட்டர் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் பெறுகிறது. தற்போது உலகளவில் விற்பனையில் உள்ள ஸ்கூட்டர்கள் பெரும்பான்மையானவற்றில் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் வழங்கப்படுவதில்லை.

யமஹாவின் என்மேக்ஸ் ஸ்டார் வார்ஸ் எடிசன் ஸ்கூட்டர்கள்!! ஸ்டைல் அள்ளுது, இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஆனால் இந்த பாதுகாப்பு வசதி யமஹா என்மேக்ஸ் என்ற மேக்ஸி ஸ்கூட்டரில் கொடுக்கப்படுகிறது. என்மேக்ஸ் ஸ்டார் வார்ஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

யமஹாவின் என்மேக்ஸ் ஸ்டார் வார்ஸ் எடிசன் ஸ்கூட்டர்கள்!! ஸ்டைல் அள்ளுது, இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஏனெனில் ஹாலிவுட் கதாபாத்திரங்களுடன் தொடர்புப்படுத்தி உருவாக்கப்படும் வாகனங்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைக்கும், ஆனால் இந்தியாவில் கிடைப்பதில்லை. இருப்பினும் சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் அதன் எண்டார்க் ஸ்கூட்டரின் அவெஞ்சர்ஸ் எடிசனை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha NMax 125 Star Wars edition All you need to know.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X