Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 15 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்!!
யமஹா நிறுவனம் அதன் ஆர்15 வி3 பைக்கில் மூன்று புதிய நிறங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

யமஹா நிறுவனம் அதன் பிரபல இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஆர்15 வி3 மாடலை புதிய நிற தேர்வில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 மாடலிலேயே இந்த சிறப்பு வசதியை யமஹா அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய நிற தேர்வைக் கொண்டிருக்கும் இப்பைக் இரு நிற கலவையுடன் காட்சியளிக்கின்றது. மெட்டாலிக் நீல நிறத்தில் இருக்கும் பைக், நீலம் மற்றும் கிரே நிற கலவையுடன் காட்சியளிக்கின்றது. இதேபோன்று, மேட் பிளாக் நிறத்தில் இருக்கும் ஆர்15 வி3 பைக் கிளாஸி கருப்பு நிறத்திலான ப்யூவல் டேங்கையும், வெள்ளை நிற கிராஃபிக்குகளையும் கொண்டிருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, மேட் சில்வர் நிறத்தில் அறிமுகமாகியிருக்கும் ஆர்15 வி3 நியான் மஞ்சல் நிறத்திலான வீல் மற்றும் உடல் நிறத்திற்கேற்ற அக்செண்டுகளைப் பெற்றிருக்கின்றது. இதுவே புதிய நிற தேர்வில் விற்பனைக்கு வந்திருக்கும் ஆர்15 வி3 பைக்கின் சிறப்பு வசதியாகும்.

இந்த புதிய நிறத்தேர்வு இந்தியாவிற்கான மாடல் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தோனேசியா இருசக்கர வாகன சந்தைக்காகவே இந்த புதிய நிற தேர்வு அவதாரத்தை யமஹா ஆர்15 வி3 எடுத்திருக்கின்றது. நிறத் தேர்வைத் தவிர வெறெந்த மாற்றத்தையும் 2021 ஆர்15 வி3 பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பைக்கில் 155 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜினே தற்போதும் காட்சியளிக்கின்றது. இதே திறன் கொண்ட எஞ்ஜினே 2020 மாடலில் இடம்பெற்றிருந்தது. இந்த விவிஏ டெக்னாலஜியைக் கொண்டது ஆகும். இது அதிகபட்சமாக 1.3 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது.

இந்தோனேசிய இளைஞர்களைக் கவரும் நோக்கில் இந்த புதிய நிற தேர்வை அந்நாட்டில் யமஹா அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பைக்கில் புதிய நிற தேர்வை மட்டுமின்றி கவர்ச்சியைக் கூடுதலாக்கும் வகையில் தங்க முலாம் பூசப்பட்ட சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு இளைஞர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை யமஹா நிறுவனம் இப்பைக்கில் மேற்கொண்டிருக்கின்றது. இந்த பைக் இந்தோனேசியாவில் அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான ஹோண்டா சிபிஆர் 150ஆர், மற்றும் கேடிஎம் ஆர்சி 125 மற்றும் ஆர்சி 200 பைக்குகளுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நிறத்தேர்வுள்ள யமஹா ஆர்15 வி3 பைக் இந்தியாவிற்கு வருமா என்பது பற்றிய தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆகையால், இந்த நிறத் தேர்விலான ஆர்15 வி3 பைக்கின் வருகை சற்றே கடினமானது என்பது தெரியவந்துள்ளது.