யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

மிக நுட்பமான சேசிஸை கொண்ட யமஹா மோட்டார்சைக்கிளாக புதிய எம்டி-10 எஸ்பி EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய யமஹா மோட்டார்சைக்கிளை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

ஜப்பானை சேர்ந்த முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்டாக விளங்கும் யமஹா சில வாரங்களுக்கு முன்பு தான் முற்றிலும் புதிய எம்டி-10 பைக்கை சர்வதேச சந்தைகள் சிலவற்றில் அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது புதிய எம்டி-10 எஸ்பி 2021 EICMA கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளது.

யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் 100% கட்டுக்குள் வராத தற்போதைய சூழலில், இத்தாலியில் 2021ஆம் ஆண்டிற்கான இருசக்கர வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. 2021 நவ.25ஆம் தேதியில் இருந்து நவ.28ஆம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு, பார்வையாளர்களுடன் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் தான் புதிய யமஹா எம்டி-10 எஸ்பி மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான எம்டி-10 பைக்கிற்கும், புதிய எம்டி-10 எஸ்பி பைக்கிற்கும் இடையே ஸ்டைலில் சில வேறுப்பாடுகள் இருப்பதை பார்க்க முடிகிறது. அத்துடன் இந்த புதிய எம்டி-10 மாடல் கூடுதல் ஆற்றல், சிறப்பான ப்ரேக்குகள் மற்றும் டிஎஃப்டி திரை போன்ற சில சிறப்பம்சங்களை பிரத்யேகமாக கொண்டுள்ளது.

யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

இந்த வகையில், யமஹா எம்டி-10 பைக்கின் டாப் வேரியண்ட்டாக இந்த எஸ்பி வெர்சன் விளங்குகிறது. மேற்கூறப்பட்ட கூடுதலான மற்றும் மேம்பட்ட அம்சங்களை தவிர்த்து பைக்கின் மற்ற இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் புதிய எம்டி-10 எஸ்பி பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பில் மிக முக்கியமான அப்கிரேட் கொண்டுவரப்பட்டுள்ளது.

யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

ஹோலின்ஸின் செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் உடன் உருவாக்கப்பட்டுள்ள முதல் தயாரிப்பு பைக்காக விளங்கும் புதிய யமஹா எம்டி-10 எஸ்பி, சூப்பர் நாக்டு மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் அதன் போட்டி மாடல்களுக்கு சவாலானதாக தயாரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சூப்பர் நாக்டு மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் அப்ரில்லா டுவோனோ, கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக், டுகாட்டி வி4 ஸ்ட்ரீட்ஃபைட்டர் மற்றும் ட்ரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் ஆர்எஸ் உள்ளிட்டவை இந்த யமஹா எம்டி பைக்கிற்கு போட்டியாக விளங்குகின்றன.

யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

எம்டி-10 மூலம் இந்த சூப்பர் பைக் பிரிவில் உள்ள ஒரே ஜப்பானிய நிறுவனம் யமஹா ஆகும். ஹோலின்ஸின் செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பில் ‘ஸ்பூல் வால்வு டேம்பிங்' என்ற தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிக ரேஞ்சில் டேம்பிங் அட்ஜெஸ்ட்மெண்ட்டையும், அதிக கோணத்தில் ரெஸ்பான்ஸையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

இந்த சஸ்பென்ஷன் அமைப்பு, ஏ-1, ஏ-2 மற்றும் ஏ-3 என்கிற மூன்று தேர்வு செய்யக்கூடிய செமி-ஆக்டிவ் மோட்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இவை ஸ்போர்ட், ஸ்போர்ட்-டூரிங் மற்றும் டூரிங் என்பவைகளுக்கு சமம் ஆகும். இந்த மோட்களின் வாயிலாக, பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்புகளானது தன்னிச்சையாக மற்றும் தொடர்ச்சியாக மறுப்பிணைப்பையும், அழுத்தப்பட்ட டேம்பிங்கையும் சரி செய்து கொள்கிறது.

யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

இவற்றுடன் எம்-1, எம்-2 மற்றும் எம்-3 என்கிற மேனுவல் மோட்களும் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் அமைப்பில் மிகவும் அதிநவீன சேசிஸ் தொழிற்நுட்பத்தை பெற்ற முதல் தயாரிப்பு பைக் எம்டி-10 எஸ்பி என கூறும் யமஹா, இந்த தொழிற்நுட்பத்தை பந்தய கள மோட்டார்சைக்கிளான ஆர்1 எம்-இல் பொருத்தி இருப்பதை காட்டிலும் சிறப்பானதாக இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

‘ஸ்பூல் வால்வு டேம்பிங்' தொழிற்நுட்பத்தை பெற்ற முதல் தயாரிப்பு பைக்கான புதிய எம்டி-10 எஸ்பி-ஐ தொடர்ந்து வரும் ஆண்டுகளில் இந்த ஹோலின்ஸ் தொழிற்நுட்பம் மேலும் சில யமஹா மோட்டார்சைக்கிள்களுக்கும் வழங்கப்படலாம். வழக்கமான எம்டி-10 பைக்கில் இருந்து புதிய எம்டி-10 எஸ்பி பைக்கை வேறுப்படுத்தி காட்டும் மற்ற அம்சங்கள் என்று பார்த்தால், 3-துண்டு பெல்லி பேன் மற்றும் சடை போன்ற வடிவத்தில் ப்ரேக் குழல்களை சொல்லலாம்.

யமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் - எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

புதிய எம்டி-10 எஸ்பி பைக்கின் கிராஃபிக்ஸை பார்க்கும்போது, நமக்கு யமஹா ஆர்1 எம் பந்தய பைக் ஞாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை. இந்த புதிய எஸ்பி மாடல் சில சர்வதேச சந்தைகளில் அடுத்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கிறோம். இந்த 1000சிசி எம்டி பைக்கின் விலை குறித்த விபரங்கள் எதையும் யமஹா நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
2022 Yamaha MT-10 SP Official Revealed At EICMA 2021.
Story first published: Thursday, November 25, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X