ஆர்15 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய சிவப்பு நிறம் அறிமுகமாகிறது...

தற்போதைய நிறங்களுடன் புதிய சிவப்பு நிறத்திலும் 2021 யமஹா ஆர்15 பைக் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை வெளிக்காட்டும் விதத்தில் இணையத்தில் கசிந்துள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆர்15 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய சிவப்பு நிறம் அறிமுகமாகிறது...

ஜப்பானை சேர்ந்த முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்டான யமஹா 2021ஆம் ஆண்டிற்காக அப்கிரேட் செய்யப்பட்ட ஆர்15 வி3.0 பைக்கை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

ஆர்15 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய சிவப்பு நிறம் அறிமுகமாகிறது...

இந்த நிலையில் தான் தற்போது இந்த புதிய ஆர்15 பைக்கில் புதியதாக சிவப்பு நிறத்தேர்வு வழங்கப்பட உள்ளதாக ஜிக்வீல்ஸ் செய்திதளம் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன. தற்சமயம யமஹா ஆர்15 பைக் இந்தியாவில் தண்டர் க்ரே, ரேசிங் ப்ளூ மற்றும் டார்க் நைட் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆர்15 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய சிவப்பு நிறம் அறிமுகமாகிறது...

இவற்றின் விலைகள் முறையே ரூ.1.50 லட்சம், ரூ.1.51 லட்சம் மற்றும் ரூ.1.52 லட்சமாக தற்சமயம் உள்ளது. நமக்கு தெரிந்தவரையில், புதிய சிவப்பு நிறத்தேர்வில் ஆர்15 பைக்கின் விலை இவற்றை காட்டிலும் சிறிது அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

ஆர்15 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய சிவப்பு நிறம் அறிமுகமாகிறது...

இந்த படங்களை வைத்து பார்க்கும்போது, சிவப்பு நிறம் பைக்கின் முன்பக்க ஹெட்லேம்ப்பின் கீழ்பகுதியில் இருந்து இரண்டாக பிரிந்து பெட்ரோல் டேங்க் மற்றும் என்ஜின் பகுதி வரையில் வழங்கப்பட உள்ளது. அதேநேரம் பின் இருக்கைக்கு கீழ்பகுதியிலும் சிவப்பு நிறத்தை பார்க்க முடிகிறது.

ஆர்15 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய சிவப்பு நிறம் அறிமுகமாகிறது...

முன்பக்க எல்இடி ஹெட்லேம்பிற்கு மேலே க்ரே வழங்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு நிறத்தேர்வில் புதிய பெயிண்ட்டை தவிர்த்து வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்பட வாய்ப்பில்லை. இதனால் 2021 யமஹா ஆர்15 பைக்கிலும் வழக்கமான 155சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜினே தொடரப்படலாம்.

ஆர்15 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய சிவப்பு நிறம் அறிமுகமாகிறது...

ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 18எச்பி மற்றும் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது.

ஆர்15 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய சிவப்பு நிறம் அறிமுகமாகிறது...

சஸ்பென்ஷன் பணியினை ஆர்15 பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோக்ராஸ் (லிங்க் யூனிட்) கவனிக்கின்றன. ப்ரேக் அமைப்புகளாக முன் மற்றும் பின் சக்கரத்தில் முறையே 282மிமீ மற்றும் 220மிமீ-ல் டிஸ்க் ப்ரேக்குகள் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உடன் பொருத்தப்படுகின்றன.

ஆர்15 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய சிவப்பு நிறம் அறிமுகமாகிறது...

இவற்றுடன் சிறப்பம்சங்களாக பின் சக்கரத்தில் ட்யுப்லெஸ் டயர், என்ஜின் கட்-ஆஃப் ஸ்விட்ச் மற்றும் இரட்டை ஹார்ன் உள்ளிட்டவை நிலையாக ஆர்15 பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகின்றன.

ஆர்15 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய சிவப்பு நிறம் அறிமுகமாகிறது...

பின்பக்கத்தில் ப்ரேக் டெயில்லைட்டையும் எல்இடி தரத்தில் இந்த பைக்கில் வழங்கும் யமஹா, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டச்சோமீட்டர் மற்றும் ஃப்யுல் கேஜ், எந்த கியரில் பைக் இயங்குகிறது மற்றும் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு எவ்வளவு என்பதை காட்டும் வசதி, விவிஏ இண்டிகேட்டர் மற்றும் டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்டவற்றையும் வழங்குகிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
2021 Yamaha R15 Red Colour Variant Images Leaked, Launch Soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X