இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையை கலக்க ஆயத்தமாகும் யமஹா

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் களமிறங்கும் முயற்சிகளில் யமஹா ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையை கலக்க ஆயத்தமாகும் யமஹா

பேட்டரியில் இயங்கும் மின்சார ஸ்கூட்டர்களுக்கான சந்தை இந்தியாவில் மிக வலுவான நிலையை நோக்கி நகரத் துவங்கி இருக்கிறது. இதனால், பல புதிய நிறுவனங்களும், சந்தையில் முன்னணியில் உள்ள இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் மின்சார ஸ்கூட்டரை ஆர்வமுடன் களமிறக்கி வருகின்றன.

 இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையை கலக்க ஆயத்தமாகும் யமஹா

அந்த வகையில், இந்தியர்களின் மனம் கவர்ந்த இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் யமஹா, விரைவில் மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

 இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையை கலக்க ஆயத்தமாகும் யமஹா

இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யும் வகையில் புதிய மின்சார ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் உருவாக்கி வருவது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டியளித்துள்ள யமஹா இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த அதிகாரி ரவீந்தர் சிங், தங்களிடம் மின்சார இருசக்கர வாகன தொழில்நுட்பம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையை கலக்க ஆயத்தமாகும் யமஹா

மேலும், இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான அரசு கொள்கை திட்டங்கள் மற்றும் மானியத் திட்டங்கள் குறித்து கூர்ந்து கவனித்து வருவதாகவும், சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பு நிலையங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையை கலக்க ஆயத்தமாகும் யமஹா

அண்மையில் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஃபஸினோ 125 ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் எங்களது மின்சார வாகன சந்தையில் இறங்குவதற்கான முதல் படி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கான மின்சார ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளும் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையை கலக்க ஆயத்தமாகும் யமஹா

தைவானில் இரண்டு ஆண்டுகளாக மின்சார வாகனங்களை விற்பனை செய்து வருகிறோம். எனவே எங்களிடம் மின்சார வாகன தொழில்நுட்பம் தயாராக உள்ளது," என்று கூறி இருக்கிறார்.

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையை கலக்க ஆயத்தமாகும் யமஹா

யமஹா நிறுவனம் E01 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டோக்கியோ மோட்டார் ஷோவில் கான்செப்ட் வடிவில் வெளியிட்டது. தைவானை சேர்ந்த கோகோரோ நிறுவனத்துடன் இணைந்து EC-05 என்ற மின்சார ஸ்கூட்டரையும் வெளியிட்டது. இந்த ஸ்கூட்டர் 90 கிமீ வேகம் செல்லும் திறன் கொண்டதுடன், 100 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பையும் வழங்கும்.

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையை கலக்க ஆயத்தமாகும் யமஹா

இந்த ஸ்கூட்டரின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கான மின்சார ஸ்கூட்டரை யமஹா வெளியிடும் வாய்ப்பு உள்ளது. பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் மின்சார ஸ்கூட்டர்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha is planning to launch electric scooter in India. Read in Tamil.
Story first published: Thursday, June 24, 2021, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X