யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரில் வந்த காவலர்கள் யமஹா ஆர்15 பைக் ரைடருக்கு ஆயிரம் ரூபாவுக்கான அபராத செல்லாணை வழங்கிய சம்பவம் இருசக்கர வாகன ஓட்டிகள் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த (மலிவு) விலை மின்சார காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விளங்குகின்றது. இந்த காரையே கேரள மோட்டார் வாகனத்துறை பயன்படுத்தி வருகின்றது. மேலும், இதைக் கொண்ட மாநிலத்தில் அரங்கேறும் வாகனங்கள் சார்ந்த விதிமீறல்கள் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பணியில் அத்துறை ஈடுபட்டு வருகின்றது.

யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அண்மைக் காலங்களாக நாடு முழுவதும் விதிமீறல்கள் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து மாநில மோட்டார் வாகனத் துறையினரும் மிகக் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!

இருப்பினும், கேரள மோட்டார் வாகனத்துறையினர் சற்று அதிரடியானதாக இருக்கின்றது. இதற்கு உதாரணமாக தற்போதைய சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இருசக்கர வாகனத்தில் மட்குவார்ட் இல்லாத காரணத்திற்கு ரூ. 1000 உச்சபட்ச அபராதத்தை கேரள மோட்டார் வாகனத்துறை காவல்துறை வழங்கியிருக்கின்றது.

யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!

போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாடிஃபிகேஷன் பிரியர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. மட்குவார்ட் இல்லாததற்கு ஆயிரம் ரூபா அபராதமா என்ற பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது.

யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!

டயர்களில் சிக்கி தூக்கி எரியப்படும் மண் மற்றும் கல் துகள்களை தடுப்பதே மட்டுகுவார்டின் முக்கிய பணியாகும். இத்தகைய முக்கிய அம்சத்தை நீக்குவதனால் குறிப்பிட்ட அப்பைக்கின் பின்னால் வரும் பிற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். சில நேரங்களில் மண் மற்றும் சிறிய கற் துகள்களால் பார்வையை இழந்த சம்பவங்கள்கூட அரங்கேறியிருக்கின்றன.

யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!

இதை உணராமல் சில இளைஞர்கள் மட்டுகுவார்டை கழட்டி எறிந்துவிடுகின்றனர். இதுவும், ஓர் வகையான வாகன மாடிஃபிகேஷனே. எனவேதான், யமஹா ஆர்15 பைக்கிற்கு உடனடியாக சம்பவ இடத்திலேயே ரூ. 1,000த்திற்கான அபராத செல்லாணை போலீஸார் வழங்கியிருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவை ஜித்தோஸ் டெமோன் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!

கேரள மோட்டார் வாகனத்துறையினர் பயன்படுத்தி வரும் டாடா நெக்ஸான் இவி இந்தியாவில் ரூ. 13,99,000 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். டாடா நெக்ஸான் இவி மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

யமஹா ஆர்15 பைக்கருக்கு ரூ. 1,000 அபராதம் விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன இருசக்கர வாகன ஓட்டிகள்!

அவை எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகியவை ஆகும். டாடா நெக்ஸான் இவி காரை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்தால் வெறும் 60 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜாகிவடும். அதுவே, வழக்கமான பிளக்குகளில் வைத்து சார்ஜ் செய்தால் 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 8.5 மணி நேரங்கள் ஆகும்.

மின்சார காரில் ஐபி67 சான்று கொண்ட பேட்டரி மற்றும் மின் மோட்டார்களையே டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தியுள்ளது. மேலும், இக்காரை அதிக பாதுகாப்பு திறன் கொண்ட நெக்ஸான் (ஐசிஇ) கார்களை தயாரிக்கும் அதே பிளாட்பாரத்தில் வைத்து தயாரித்து வருகின்றது. ஆகையால், இதில் பாதுகாப்பு வசதிக்கு குறைச்சலின்றி காணப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Yamaha R15 Rider Gets Rs. 1,000 Fine For Removing Mudguard. Read In Tamil.
Story first published: Monday, May 10, 2021, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X