யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

யமஹா பைக்குகளுக்கு என்றே இந்தியாவில் ரசிகர் பட்டாளம் இருப்பதை மறுக்க முடியாது. அது என்னமோ, மற்ற பிராண்ட் பைக்குகளை காட்டிலும் யமஹாவின் பைக்குகளுக்கே அவர்கள் எப்போதும் முன்னுரிமை கொடுப்பர்.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

அத்தகைய ரசிகர்களுக்கு மேலும் தீனி போடும் விதமாக ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய ஆர்15 பைக்குகளாக, ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எம் பைக்குகளை அறிமுகம் செய்தது. இதில் 2021 ஆர்15 வி4 பைக்கிற்கும், முந்தைய தலைமுறை ஆர்15 வி3 பைக்கிற்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

முன்பக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம். இளம் தலைமுறையினரின் ஃபேவரட் பைக்காக விளங்கும் யமஹா ஆர்15 முன்பை காட்டிலும் கூர்மையான முன்பக்கத்தை பெற்றுள்ளது. ‘டூம்' எனப்படும் பைக்கின் முன்பகுதியின் ஸ்டைல் அதிகளவிலான லைன்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

அத்துடன் எல்இடி டிஆர்எல்களுடன் புதிய பிரோஜெக்டர் ஹெட்லேம்ப் வி4-இல் வழங்கப்பட்டுள்ளது. இரட்டை-கண் ஹெட்லைட்கள் அளவில் பெரியதாக கொண்டுவரப்பட்டுள்ளன. முந்தைய தலைமுறை ஆர்15 பைக்குடன் ஒப்பிடுகையில் வி4 சிறப்பம்சமாக தங்க நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட யுஎஸ்டி ஃபோர்க்குகளை சஸ்பென்ஷனாக முன்பக்கத்தில் பெற்றுள்ளது.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

இதனால் ஆர்15 பைக்கை நீங்கள் ஓட்டி இருந்தாலும், வெர்சன் 4ஐ ஓட்டும்போது உங்களுக்கு சிறிய வித்தியாசம் தெரியும். பெட்ரோல் டேங்கின் வடிவமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் இம்முறை பருமனாக இல்லாமல், நேரானதாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மோட்டார்சைக்கிளின் உடலமைப்பு சற்று மெல்லியதாகியுள்ளது.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

ஆர்15 பைக்குகளுக்கே உண்டான ஸ்டைலிலான பிளவுப்பட்ட இருக்கை அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. பின்பக்கத்தில் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கான பைக்கின் இறுதி முனை பகுதியில் மட்டுமே சிறிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

பின்பக்கத்தில் வழங்கப்படும் காற்று துளைகள் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளன. மற்றப்படி டெயில்லைட்களின் வடிவத்திலோ அல்லது பின்பக்க டர்ன் இண்டிகேட்டர்களின் வடிவத்திலோ எந்த வித்தியாசமும் இல்லை. முன்பு இருந்தது போலவே தான் புதிய வெர்சனிலும் உள்ளன.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

ஆனால் எக்ஸாஸ்ட் குழாயின் வடிவம் சற்று வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது. வி4 மாடலில் அதன் தோற்றத்திற்கு ஏற்ப எக்ஸாஸ்ட் குழாய் சற்று குறுகியதாக வழங்கப்பட்டுள்ளது. க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் ஆர்15 வி3-இல் வழங்கப்பட்டதை காட்டிலும் வி4-இல் சற்று பெரியதாகி உள்ளது.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

குறிப்பாக இந்த அப்டேட் ஆர்15 பைக்கை மேலும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாக மாற்றுக்கின்றது. எதிர்பார்க்கப்பட்டது போல் பைக்கின் ஸ்விட்ச் கியரில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்பு பைக்கின் என்ஜினை ஸ்டார்ட் செய்ய ஒரு பொத்தானும், ஆஃப் செய்ய ஒரு பொத்தானும் இருந்தன.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

ஆனால் தற்போது ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச் ஆக, அதாவது ஒரே ஸ்விட்ச் ஆக வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஹசார்ட் விளக்குகளையும் ஆர்15 வி4 பெற்றுள்ளது. புதியதாக மாற்றப்பட்டுள்ள எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் இம்முறை ப்ளூடூத்-இணக்கமான இணைப்பு தொழிற்நுட்பத்தை பெற்றுள்ளது. இதனால் ஒய்-கனெக்ட் செயலியின் மூலம் மொபைல் போனை பைக்குடன் இணைக்க முடியும்.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

இவற்றுடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் விரைவுமாற்றி போன்றவையும் புதிய தலைமுறை ஆர்15 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இரட்டை-சேனல் ஏபிஎஸ், இரட்டை ஹார்ன் மற்றும் கியர் மாற்றத்தை குறிக்கும் விளக்கு உள்ளிட்டவை அப்படியே மூன்றாம் தலைமுறை ஆர்15 பைக்கில் இருந்து தொடரப்பட்டுள்ளன.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

அதேபோல் அதே 155சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் வெவ்வேறான வால்வு செயல்பாடுகளுடன் (VVA) ஆர்15 வி4 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் 18.4 பிஎஸ் என குறைந்துள்ளது. அதேநேரம் அதிகப்பட்ச டார்க் திறன் 14.2 என்எம் ஆக சற்று அதிகரித்துள்ளது.

யமஹா ஆர்15 வி3 பைக்கிற்கும், சமீபத்திய வி4 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? புதியதாக இவ்வளவு அப்டேட்டா!!

இந்த என்ஜின் உடன் ஸ்லிப் & உதவி க்ளட்ச்சை கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்15 வி4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.67 லட்சத்தில் இருந்து ரூ.1.72 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha R15 V3 vs New R15 V4, Check out all the changes.
Story first published: Sunday, September 26, 2021, 3:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X