யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

கேடிஎம் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஆர்சி200 பைக்கை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த அப்கிரேட்களின்படி மிகவும் கவனிக்கத்தக்க மாற்றங்கள் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் விலையில் பெரியதாக எந்த அதிகரிப்பும் இல்லை.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

விலையில் மாற்றமில்லாதது தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. பைக்கில் சில வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரம் பைக்கின் தோற்றத்திலும் கவனிக்கத்தக்க அளவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

இந்த புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி பைக்கிற்கு விற்பனையில் யமஹாவின் சமீபத்திய அறிமுகமான ஒய்.இசட்.எஃப்-ஆர்15 என்ற ஆர்15 மோட்டார்சைக்கிளின் நான்காம் வெர்சன் முக்கிய போட்டியாக விளங்கவுள்ளது. இவை இரண்டிற்கும் இடையேயான போட்டி தான் கடுமையானதாக இருக்கும். ஏனெனில் சமீபத்தில் தான் இவை இரண்டும் அப்டேட் செய்யப்பட்டு புத்துணர்ச்சியான தோற்றத்தில் உள்ளன.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

தோற்றம்

முந்தைய தலைமுறை உடன் ஒப்பிடுகையில் புதிய நான்காம் தலைமுறை யமஹா ஆர்15 ஆனது கூர்மையான மற்றும் ஸ்போர்டியரான தோற்றத்தை பெற்றுள்ளது. குறிப்பாக எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் நேர்த்தியான எல்இடி டெயில்லைட் மூலமாக புதிய ஆர்15 பைக்கின் முன்பக்கம் வெகுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி200 பைக் முற்றிலுமாக திருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் ஹெட்லேம்ப் ஆனது எல்இடி யூனிட்டாக மாற்றப்பட்டுள்ளது. எல்இடி டிஆர்எல்கள் ஹெட்லேம்ப் கௌலிற்கு இரு பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க ஃபைரிங் புதியதாக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இந்த கேடிஎம் பைக்கின் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 9.5 லிட்டர்களில் இருந்து 13.7 லிட்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த பைக்கில் தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் ஏராளம்.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

வசதிகள் & சவுகரியம்

அப்டேட் செய்யப்பட்டுள்ள ஆர்15 பைக்கில் முன்பக்க சஸ்பென்ஷன் அமைப்பாக யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பின்பக்கத்தில் மோனோஷாக்கே தொடர்கிறது. எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை ஆனது தற்போது ஒய்-கனெக்ட் (Y-Connect) என்ற இணைப்பு தொழிற்நுட்பத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் மொபைல் அழைப்புகள்/ குறுஞ்செய்திகள், பயண குறிப்புகள், கடைசியாக பைக் நிறுத்தப்பட்ட இடம் உள்ளிட்டவற்றை அறியலாம்.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்கிலும் சஸ்பென்ஷன் அமைப்பாக யுஎஸ்டி ஃபோர்க்குகளும், மோனோஷாக்கும் தான் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கிற்கு புதியதாக வழங்கப்பட்டுள்ள எல்சிடி திரையினை 250 அட்வென்ச்சரில் பார்த்திருக்கலாம். இது முந்தைய தலைமுறையை காட்டிலும் அளவில் பெரியது மட்டுமே தவிர, இப்போதும் ரைடிங் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற வசதிகளை கேடிஎம் ஆர்சி200 பைக் பெறவில்லை. உண்மையில், இவ்வாறான அளவில் சிறிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளிலும் இணைப்பு தொழிற்நுட்பங்கள் தற்காலத்தில் அவசியமாகுகின்றன.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

என்ஜின் அமைப்பு

புதிய யமஹா ஆர்15 பைக்கிலும் வழக்கமான 155சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மேம்ப்பட்ட ஆற்றல் வெளியீட்டிற்காக இந்த என்ஜின் அமைப்பில் வெவ்வேறான வால்வு செயல்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அளவு 0.2 பிஎஸ் அதிகரித்து 18.4 பிஎஸ் ஆகவும், 0.1 என்எம் அதிகரித்து 14.2 என்எம் டார்க் திறனாகவும் உள்ளன. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

ஆர்15-ஐ போல் புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி200 பைக்கிலும் அதே 199.5சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 25.8 பிஎஸ் மற்றும் 19.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆனால் ஆர்15 பைக்கில் என்ஜின் உடன் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி கொடுக்கப்படுகிறது. அது கேடிஎம் மாடலில் இல்லை.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

விலை

யமஹா நிறுவனம் புதிய ஒய்.இசட்.எஃப்-ஆர்15 வி4.0 பைக்கின் விலைகளை ரூ.1.67 லட்சத்தில் இருந்து ரூ.1.79 லட்சம் வரையில் (ஆர்15 எம் உள்பட) நிர்ணயித்துள்ளது. இது முந்தைய மூன்றாம் வெர்சனை காட்டிலும் சற்று அதிகமாகும். ஆனால் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள வசதிகளும், புதிய முன்பக்க தோற்றமும் இதை நியாயப்படுத்துகின்றன.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி200 பைக்கின் விலை ரூ.2.08 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுதான், இந்த கேடிஎம் பைக்கின் முந்தைய தலைமுறையின் விலையும் கிட்டத்தட்ட இதே அளவில் தான் இருந்தது. இதனால் இன்னும் சில மாதங்களில் ஆர்சி200 பைக்கின் விலைகளில் சற்று அதிகரிப்பு கொண்டுவரப்படலாம்.

யமஹா ஆர்15 வி4-ஆ அல்லது புதிய கேடிஎம் ஆர்சி200-ஆ? உங்களது தேர்வு எது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!!

விலையை பொறுத்தவரையில் ஆர்15 மாடலை காட்டிலும் கேடிஎம் ஆர்சி மாடல் விலைமிக்கதாக உள்ளது. கூடுதல் என்ஜின் ஆற்றலை எதிர்பார்ப்போர் இந்த கூடுதல் தொகையை செலுத்துவதில் தவறொன்றும் இல்லை. தோற்றத்தில் இரண்டும் சரிக்கு சமமான பலத்துடன் உள்ளன. ஆனால் தொழிற்நுட்ப அம்சங்களில் யமஹா ஆர்15 பைக்கின் கை ஓங்கியுள்ளது.

Most Read Articles
English summary
Yamaha R15 V4.0 Vs New-Gen KTM RC200 - Comparison.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X