தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

Yamaha மோட்டார்சைக்கிள்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதற்காகவே Yamaha நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களை அவ்வப்போது அப்டேட் செய்துவிடுகிறது. இதனால் இந்தியாவில் இந்த பழமையான ஜப்பானிய மோட்டார்சைக்கிள் பிராண்டின் விற்பனையிலும் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.

தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

இதற்கு கடந்த 2021 ஜூலை மாத விற்பனையே ஓர் உதாரணம் ஆகும். கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 48,071 Yamaha இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு ஜீலை மாதத்துடன் ஒப்பிடுகையில் வெறும் 3.84% மட்டுமே குறைவு.

தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

அந்த மாதத்தில் கிட்டத்தட்ட 50,000 யூனிட் Yamaha இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் FZ, R15, MT15, FZ25 என்ற நான்கு மோட்டார்சைக்கிள்கள், Fascino, RayZR என்ற இரு ஸ்கூட்டர்கள் என மொத்தம் 6 விதமான மாடல்களில் இருசக்கர வாகனங்கள் யமஹா பிராண்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

இதில் அதிகப்பட்சமாக விற்பனையாகுபவை என்று பார்த்தால், 150சிசி கொண்ட FZ பைக்குகள் தான். கடந்த மாதத்தில் இவ்வாறான FZ பைக்குகள் மொத்தம் 18,066 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2020 ஜூலையில் இதனை காட்டிலும் 20% குறைவாக 15,048 FZ பைக்குகள் விற்பனையாகி இருந்தன.

தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

150சிசி FZ வரிசையில் FZ Fi, FZ S Fi மற்றும் FZ-X என்ற மூன்று பைக்குகள் உள்ளன. FZ-க்கு அடுத்து Yamaha ஸ்கூட்டரான Fascino 9,525 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான Fasino ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

No Yamaha Domestic July-21 July-20 Growth % YoY
1 FZ 18,066 15,048 20.06
2 Fascino 9,525 11,584 -17.77
3 R15 7,280 6,869 5.98
4 RayZR 7,053 12,032 -41.38
5 MT15 5,316 3,928 35.34
6 FZ25 831 528 57.39
- Total 48,071 49,989 -3.84
தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

மூன்றாம் இடத்தில் பல இளைஞர்களின் கனவு பைக்காக உள்ள R15 உள்ளது. கடந்த ஜூலையில் 7,280 R15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 ஜூலையிலும் கிட்டத்தட்ட (6% அதிகம்) இதே எண்ணிக்கையிலான R15 மோட்டார்சைக்கிள்களே விற்கப்பட்டு இருந்தன.

தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

விற்பனையில் R15-ஐ மிக நெருக்கமாக பின்தொடர்ந்தவாறு இந்த வரிசையில் நான்காவது இடத்தை Yamaha-வின் மற்றொரு ஸ்கூட்டர் மாடலான RayZR பிடித்துள்ளது. 2021 ஜூலையில் 7,053 RayZR ஸ்கூட்டர்கள் Yamaha டீலர்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த எண்ணிக்கை 2020 ஜூலையை காட்டிலும் சுமார் 41.38% குறைவாகும்.

தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

ஏனென்றால் கடந்த ஆண்டு ஜூலையில் RayZR ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்திருந்தது. MT15 2020 ஜீலையை காட்டிலும் 35.34% அதிகமாக 5,316 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இந்த லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தை தனதாக்கியுள்ளது.

தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

150சிசி என்ஜினை கொண்ட FZ பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கையில், 250சிசி என்ஜின் உடனான FZ25 பைக்கின் விற்பனை ஆயிரத்தையே தொடவில்லை (831). 250சிசி என்ஜின் உடன் இந்தியாவில் FZ25 பைக்கை மட்டுமே Yamaha விற்பனை செய்கிறது.

தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

உள்நாட்டு விற்பனையில் மட்டுமின்றி, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதிலும் 150சிசி FZ பைக்குகளே முதலிடத்தில் உள்ளன. ஆனால் 2020 ஜூலையில் வெறும் 5 ஆயிரம் FZ பைக்குகளே வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

No Yamaha Exports July-21 July-20 Growth % YoY
1 FZ 12,455 5,072 145.56
2 RayZR 3,277 924 254.65
3 FZ25 2,471 1,086 127.53
4 SZ 2,338 1,152 102.95
5 YD125 1,950 0 -
6 Crux/td> 1,904 1,052 80.99
7 R15 962 610 57.70
8 Saluto 680 2,172 -68.69
9 Alpha 224 224 0
10 Saluto RX 36 1,516 -97.63
11 MT15 3 40 -92.50
12 Fascino 0 364 -100
- Total 26,300 14,212 85.05
தொடர்ந்து விற்பனையில் ஜொலித்து கொண்டிருக்கும் Yamaha FZ!! R15 விற்பனையிலும் முன்னேற்றம்

FZ மட்டுமின்றி Yamaha-வின் பெரும்பாலான இருசக்கர வாகன மாடல்களின் ஏற்றுமதி கடந்த ஜூலையில் சிறப்பானதாகவே இருந்துள்ளது. இந்திய சந்தையில் இந்த ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்வது என்னவோ 6 மாடல்களை தான், ஆனால் வெளிநாட்டு சந்தைகளுக்கும் சேர்த்து மொத்தம் 14 விதமான இருசக்கர வாகனங்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Sales, Exports July 2021 - 150cc FZ Bikes In Top Position
Story first published: Sunday, August 22, 2021, 4:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X