யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் யமஹா கடந்த 2021 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்ஸ் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

யமஹாவின் உள்நாட்டு விற்பனை கடந்த நவம்பரில் 26.12% குறைந்துள்ளது. ஏனெனில், கடந்த மாதத்தில் மொத்தமாக 39,309 யமஹா இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 நவம்பரில் 53,208 யூனிட்களில் 2-வீலர்ஸை யமஹா விற்பனை செய்திருந்தது.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

இவ்வாறு இந்தியாவில் இந்த ஜப்பானிய 2-வீலர்ஸ் பிராண்டின் வருடம்- வருடம் விற்பனை குறைந்திருப்பது மட்டுமில்லாமல், மாதம் -மாதம் ஒப்பிடுகையிலும் விற்பனை 31.72% குறைந்துள்ளது. ஏனென்றால் 2021 அக்டோபரில் யமஹா இருசக்கர வாகனங்களின் விற்பனை 57,573 யூனிட்களாக இருந்தது. ஆனால் இந்தியாவில் தயாரித்து வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியில் கடந்த மாதத்தில் யமஹா சிறப்பாக செயல்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

கடந்த மாதத்தில் மொத்தமாக 19,361 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் தயாரித்து யமஹா ஏற்றுமதி செய்துள்ளது. 2020 நவம்பர மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 28.78% அதிகமாகும். ஏனென்றால் அந்த மாதத்தில் 15,034 யூனிட் 2-வீலர்ஸையே யமஹா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. இருப்பினும் கடந்த அக்டோபரில், கடந்த மாத ஏற்றுமதி எண்ணிக்கையை காட்டிலும் 20.08% அதிகமாக 24,225 யூனிட்களை இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட யமஹா இருசக்கர வாகனமாக ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் விளங்குகிறது. கடந்த நவம்பரில் மொத்தம் 12,344 யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பினும் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களை கடந்த 2020 நவம்பரில் 15,238 யூனிட்கள் யமஹா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் இந்த ஸ்கூட்டரின் விற்பனை 18.99% குறைந்துள்ளது.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

இந்திய சந்தையில் யமஹாவின் கடந்த மாத மொத்த உள்நாட்டு விற்பனையில் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் மட்டுமே கிட்டத்தட்ட 31.40% பங்கை கொண்டுள்ளது. இதற்கடுத்து இந்த லிஸ்ட்டில் ஆர்15 மோட்டார்சைக்கிள் 8,392 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்15 வி4, ஆர்15எம் மற்றும் ஆர்15 எஸ் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களினால் இந்தியாவில் ஆர்15 பைக்குகளின் விற்பனை கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்து வருகிறது.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

கடந்த நவம்பரிலும், 2020 நவம்பரை (5,848 யூனிட்கள்) காட்டிலும் சுமார் 43.50% அதிகமாக 8,392 ஆர்15 பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் நேர்மறையான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த ஒரே யமஹா 2-வீலர் ஆர்15 மட்டுமே ஆகும். ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் 8,208 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் உள்ளன.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

ஆனால் உண்மையில் கடந்த ஆண்டு நவம்பரில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை ஏறக்குறைய 11 ஆயிரமாக இருந்தது. அதேபோல் இந்த வரிசையில் நான்காவது இடத்தில் உள்ள எஃப்.இசட் பைக்குகளும் 2020 நவம்பரில் சுமார் 16,239 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் 53.05% குறைவாக 7,624 எஃப்.இசட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

இதில் இருந்து, யமஹா எஃப்.இசட் பைக்கை வாங்க நினைத்திருந்தவர்களில் பாதி பேர் அப்படியே புதிய ஆர்15 பைக்குகளுக்கு மாறியுள்ளனர் என்பது தெளிவாக தெரிய வருகிறது. இதேபோல், ஆர்15-இன் நாக்டு வெர்சனாக பார்க்கப்படும் எம்டி15 பைக்கிற்கும் ஒரு சமயத்தில் ஏகோபித்த வரவேற்பு விரைவாக கிடைக்க ஆரம்பித்தது. ஆனால் கடந்த மாதத்தில் எம்டி15 பைக்குகளின் விற்பனை 40.82% குறைந்துள்ளது.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

2020 நவம்பரில் 4,608 எம்டி15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்தில் 2,727 எம்டி15 பைக்குகளே விற்கப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் கடைசி இடத்தில், இந்தியாவில் யமஹாவின் ஒரே 250சிசி பைக்காக விளங்கும் எஃப்.இசட்25 14 யூனிட்களின் விற்பனையுடன் உள்ளது. ஆனால் 2020 நவம்பரில் 283 எஃப்.இசட்25 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியதுபோல் பெரும்பான்மையான யமஹா மாடல்களின் ஏற்றுமதி கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி லிஸ்ட்டில் எஃப்.இசட் பைக்குகள் 9,416 யூனிட்களின் ஏற்றுமதியுடன் முதலிடத்தில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2020 நவம்பரில் ஏற்றுமதி செய்யப்பட்ட 8,101 எஃப்.இசட் பைக்குகளின் எண்ணிக்கையை காட்டிலும் 16.36% அதிகமாகும்.

யமஹா ஆர்15 பைக்குகளை வாங்கி குவிக்கும் இந்திய இளைஞர்கள்!! ஒரே மாதத்தில் 8,392 பைக்குகள் விற்பனை!

அதேபோல், எஃப்.இசட் பைக்குகளின் வெளிநாட்டு சந்தைக்கான ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனை எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதை பார்கலாம். இரண்டாவது இடத்தில் உள்ள ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் கடந்த மாதத்தில் 3,709 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் ஏற்றுமதி 2020 நவம்பரை காட்டிலும் சுமார் 91.28% அதிகரித்துள்ளது. இதில் இருந்து, இந்தியா மட்டுமின்றி உலகளவில் யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களுக்கு மவுசு உள்ளதை அறிய முடிகிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha sales nov 2021 rayzr leads details
Story first published: Friday, December 17, 2021, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X