புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்7 மோட்டார்சைக்கிளின் புதிய டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களின் கவனத்தை பெற்றுள்ள இந்த டீசர் வீடியோவை வெளியிடுவதற்கு முன்பு சமீபத்தில் தான் யமஹா நிறுவனம் ஒய்.இசட்.எஃப்-ஆர்7 என்ற பெயரை அதன் புதிய மோட்டார்சைக்கிளுக்காக பதிவு செய்தது.

புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய டீசர் வீடியோவின் மூலமாக முந்தைய ஒய்.இசட்.எஃப்-ஆர்6 பைக்கிற்கு பதிலாக, அதன் இடத்திற்கு புதிய ஆர்7 பைக் கொண்டுவரப்படவுள்ளது உறுதியாகிறது. யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர் பைக் கடந்த ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்டு வந்தது.

புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

ஆனால் இந்தியாவில் ஆர்6 கடைசி வரையில் விற்பனை செய்யபடவே இல்லை. ஐரோப்பிய சந்தைகளுக்காக மட்டுமே இந்த யமஹா பைக் முக்கியமாக தயாரிக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு முடியும் வரையில் விற்கப்பட்டு வந்தது.

புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

யுரோ 5 உமிழ்வு விதிமுறைகளினால் ஆர்6 பைக்கின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இதற்கான மாற்று மோட்டார்சைக்கிளை பற்றிய செய்திகள் உலாவர துவங்கின. இந்த செய்திகளில் முழுவதும் பேனல்களால் நிரப்பட்டப்பட்ட புதிய மோட்டார்சைக்கிளை யமஹா நிறுவனம் எம்டி-07 இன் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

ஒய்.இசட்.எஃப்-ஆர்7 என்ற பெயரை யமஹா பதிவு செய்து கொண்டதன் மூலம் எம்டி-07 பைக்கின் அடிப்படையில் தான் ஆர்6-க்கு மாற்று மோட்டார்சைக்கிள் தயாரிக்கப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

இந்த நிலையில் தான் தற்போது இந்த டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "ட்ராக். ஸ்ட்ரீட். ஆர்/உலகம்" என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் புதிய ஆர் வரிசை பைக்கின் தோற்றத்தை எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லை.

புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

டீசரில் முதலில் பந்தய ட்ராக் காட்டப்படுகிறது, அதனை தொடர்ந்து வளைவு நெளிவுகளை அதிகம் கொண்ட மலைப்பிரதேச சாலை காட்டப்பட்டுள்ளது. இதில் இருந்து புதிய ஆர்7 மோட்டார்சைக்கிளை பந்தய ட்ராக்கிற்கு பயன்படுத்தும் அதேநேரத்தில் பொது சாலைக்கும் பயன்படுத்தலாம் என்பதை யமஹா கூறுவதுபோல் உள்ளது.

புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

புதிய ஆர் வரிசை மோட்டார்சைக்கிளின் பெயர் ஒய்.இசட்.எஃப்-ஆர்7 தான் என்பதை இதுவரையில் யமஹா நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது. இதனால் ஆர்6 பைக்கிற்கு மாற்றாக கொண்டுவரப்படும் பைக்கின் பெயர் ஆர்7 தானா என்கிற சந்தேகம் நமக்கு உள்ள நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோ இந்த சந்தேகத்தை சற்று குறைத்துள்ளது.

புதிய ஆர்7 பைக்கை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் யமஹா!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

யமஹாவின் ஒய்.இசட்.எஃப் வரிசை பைக்குகளுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வரிசையில் 125சிசி-இல் இருந்து ஆர்15, ஆர்3 என 1000சிசி மோட்டார்சைக்கிளான ஒய்.இசட்.எஃப்-ஆர்1 வரையில் மோட்டார்சைக்கிள்கள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha YZF-R7 Teaser Video Released: Replacement For The Yamaha R6.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X