ட்ரேசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டுவரும் யமஹா!! ட்ரேசர் 700-ஆ அல்லது ட்ரேசர் 900-ஆ?

இந்தியாவில் யமஹா ட்ரேசர் (Tracer) பெயர் வர்த்தக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த அட்வென்ச்சர் ரக பைக் நம் நாட்டு சந்தையிலும் விற்பனைக்கு வருமா என்பது குறித்த தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ட்ரேசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டுவரும் யமஹா!! ட்ரேசர் 700-ஆ அல்லது ட்ரேசர் 900-ஆ?

யமஹா பிராண்டில் இருந்து புதிய செயல்திறன்மிக்க மோட்டர்சைக்கிளை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை தரலாம். ஸ்போர்ட்-டூரிங் மோட்டார்சைக்கிளான யமஹா ட்ரேசர் சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது.

ட்ரேசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டுவரும் யமஹா!! ட்ரேசர் 700-ஆ அல்லது ட்ரேசர் 900-ஆ?

150சிசி-க்கும் அதிகமான செயல்திறன்மிக்க ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதில் தான் தங்களது நோக்கம் உள்ளதாக யமஹா சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து புதியதாக உருவாக்கப்பட்டு வரும் எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளின் பெயர் பதிவு செய்யப்பட்டது.

ட்ரேசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டுவரும் யமஹா!! ட்ரேசர் 700-ஆ அல்லது ட்ரேசர் 900-ஆ?

இந்த நிலையில் தற்போது ட்ரேசர் பைக்கின் பெயரை இந்திய சந்தைக்காக யமஹா பதிவு செய்து கொண்டுள்ளது. இந்த வர்த்தக முத்திரை 2017லேயே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2021 பிப்ரவரியில் தான் இதற்கான அனுமதி கிடைத்தது.

ட்ரேசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டுவரும் யமஹா!! ட்ரேசர் 700-ஆ அல்லது ட்ரேசர் 900-ஆ?

இப்போதும், யமஹா ட்ரேசர் 700 தான் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளதா அல்லது ட்ரேசர் 900 மாடல் கொண்டுவரப்பட உள்ளதா என்கிற கேள்வி உள்ளது. எப்படியிருந்தாலும் ட்ரேசர் 900 போன்ற பெரிய என்ஜினை கொண்ட பைக்கை இந்தியா போன்ற நாட்டிற்கு கொண்டுவர யமஹா விரும்பாது.

ட்ரேசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டுவரும் யமஹா!! ட்ரேசர் 700-ஆ அல்லது ட்ரேசர் 900-ஆ?

யமஹா தற்சமயம் தயாரித்துவரும் மிக அழகான மோட்டார்சைக்கிளில் ட்ரேசர் 700 ஒன்று. யமஹா எம்டி பைக்குகளுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து எம்டி பைக்குகளின் இரட்டை-கண் போன்ற ஹெட்லைட் அமைப்பு ட்ரேசரிலும் வழங்கப்படுகிறது.

ட்ரேசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டுவரும் யமஹா!! ட்ரேசர் 700-ஆ அல்லது ட்ரேசர் 900-ஆ?

ட்ரேசர் 700 பைக்கில் பெரிய ரேடியேட்டர் கவசங்கள் பொருத்தப்படுகின்றன. இதுவே இந்த யமஹா பைக்கை அட்வென்ச்சர் தோற்றத்தில் காட்டுகிறது. ஆனால் ரைடிங் பொசிஷன் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

ட்ரேசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டுவரும் யமஹா!! ட்ரேசர் 700-ஆ அல்லது ட்ரேசர் 900-ஆ?

இத்தகைய தோற்றத்துடன் அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரைடிங் தொகுப்புகளை யமஹா இந்த 700சிசி பைக்குகளில் வழங்குகிறது. ட்ரேசர் 700-இல் 689சிசி, இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது.

ட்ரேசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டுவரும் யமஹா!! ட்ரேசர் 700-ஆ அல்லது ட்ரேசர் 900-ஆ?

அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 73.77 பிஎச்பி மற்றும் 68 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அதுவே ட்ரேசர் 900 பைக்கில் வழங்கப்படும் 3-சிலிண்டர் என்ஜின் 113.42 பிஎச்பி மற்றும் 87.5 என்எம் டார்க் திறன் வரையில் பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

ட்ரேசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவிற்கு கொண்டுவரும் யமஹா!! ட்ரேசர் 700-ஆ அல்லது ட்ரேசர் 900-ஆ?

யமஹா ட்ரேசர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த கூடுதல் தகவல்கள் இனி வரும் மாதங்களில் வெளியாகலாம். சமீபத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒய்.இசட்.எஃப்-ஆர்7 பைக்கிற்கு அடுத்ததாக கூட அதே ஃப்ளாட்ஃபாரத்தில், அதே 700சிசி என்ஜினை பயன்படுத்தி உருவாக்கப்படும் ட்ரேசர் 700 பைக்கை யமஹா இந்தியாவிற்கு கொண்டுவரலாம், யாருக்கு தெரியும்...

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Tracer Name Trademarked In India: Is The Yamaha Tracer 700 Coming To India?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X