புதிய யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் வெளியீடு!! மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

புதிய ரே இசட்.ஆர் ஸ்கூட்டரை ஹைப்ரீட் பவர் உதவி உடன் யமஹா இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய ரே இசட்.ஆர் ஸ்கூட்டரை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் வெளியீடு!! மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

யமஹா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அதன் புதிய ரே இசட்.ஆர் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் தான் தற்போது ஹைப்ரீட் ஆற்றல் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யமஹா ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் வெளியீடு!! மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

யமஹாவின் இந்த புதிய ஹைப்ரீட் தொழிற்நுட்பம் மட்டுமின்றி ப்ளூடூத் இணைப்பை ஏற்கக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் புதிய ரே இசட்.ஆர் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் வெளியீடு!! மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

தற்சமயம் விற்பனையில் இருக்கும் ரே இசட்.ஆர் ஸ்கூட்டரை போன்று அதன் புதிய தலைமுறையும் இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த இரு விதமான வேரியண்ட்களில் ஸ்டாண்டர்ட் & ஸ்ட்ரீட் ராலி என்பவை அடங்குகின்றன.

புதிய யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் வெளியீடு!! மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

இதில் ஸ்ட்ரீட் ராலி வேரியண்ட் கிராஃபிக்ஸ், நிறங்கள் உள்ளிட்டவற்றை தனி செட்டாக பெற்றுள்ளது. நமக்கு தெரிந்தவரையில் புதிய ரே இசட்.ஆர் ஸ்ட்ரீட் ராலி வேரியண்ட்டிற்கு மேட் க்ரீன் மற்றும் மேட் ஆரஞ்ச் என்ற நிறங்கள் வழங்கப்படலாம்.

புதிய யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் வெளியீடு!! மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

அதுமட்டுமின்றி ஹேண்டில்பாரில் கை விரல் பாதுகாப்பன் உள்பட முன்பக்கம், பக்கவாட்டில் & பின்பகுதியில் வித்தியாசமான கூடுதல் ஸ்டைலிங் பாகங்களும் இந்த வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் வெளியீடு!! மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

ஸ்டாண்டர்ட் யமஹா ரே இசட்.ஆர் வேரியண்ட்டிற்கு ரேசிங் நீலம், ரெட்டிஷ் மஞ்சள் காக்டெயில், மேட் சிவப்பு மெட்டாலிக், சியான் நீலம் மற்றும் மெட்டாலிக் கருப்பு பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே கூறியதுதான், ப்ளூடூத்-இணைப்பு இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பெற்றுவரும் புதிய ரே இசட்.ஆர் ஸ்கூட்டரின் கிராஃபிக்ஸ் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

புதிய யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் வெளியீடு!! மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

எல்இடியில் ஹெட்லைட்டை பெற்றுள்ள புதிய ரே இசட்.ஆர் மாடலிலும் வழக்கமான நீண்ட டிஆர்எல் தொகுப்பு மற்றும் டிண்ட் ஃப்ளை-ஸ்க்ரீன் அப்படியே தொடரப்பட்டுள்ளது. அதேபோல் வழக்கமான சஸ்பென்ஷன் & ப்ரேக்கிங் செட்அப் தான் புதிய ரே இசட்.ஆர் ஸ்கூட்டரிலும் கொடுக்கப்படவுள்ளது.

புதிய யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் வெளியீடு!! மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

ரே இசட்.ஆர் மாடலில் சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் சுருளும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க இந்த யமஹா ஸ்கூட்டரில் முன் சக்கரத்தில் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ட்ரம் யூனிட்டும் பொருத்தப்படுகிறது.

புதிய யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் வெளியீடு!! மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

புதிய ரே இசட்.ஆரில் 125சி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஹைப்ரீட் பவர் உதவி வசதி உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின்-ஹைப்ரீட் அமைப்பு எத்தகைய ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதை தற்போதைக்கு யமஹா நிறுவனம் வெளியிடவில்லை.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
New Yamaha Ray ZR 125 And Ray ZR Street Rally with Hybrid Power Assist tech revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X