மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

யமஹா நிறுவனம் ஆர்6 பைக்கிற்கு மாற்றாக கொண்டுவரப்படும் அதன் புதிய மிடில்வெய்ட் சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளான 2022 ஆர்7-ஐ பற்றிய விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

உலகளவில் புதிய ஆர்7 பைக்கிற்கு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் ஜப்பானிய மோட்டார்சைக்கிள் பிராண்டான யமஹாவின் ஆர்7 பைக்கின் படங்கள் கடந்த சில வாரங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

அதனை தொடர்ந்து தற்போது இந்த ஆர்6-இன் மாற்று பைக்கின் விபரங்கள் படங்களுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச சந்தைகளில் தற்சமயம் விற்பனையில் உள்ள ஆர்6 மாடல் யூரோ-5க்கு இணக்கமான தரத்திற்கு மாற்றப்படாததினால் நடப்பு ஆண்டு இறுதியில் நிறுத்தப்படவுள்ளது.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

தோற்றத்தில் ஆர்6 பைக்கிற்கும் ஆர்7 பைக்கிற்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை. இருப்பினும் இரண்டும் தோற்றத்தில் வேறுப்பட வேண்டும் அல்லவா, அதற்காக சிறு சிறு டிசைன் மாற்றங்களை யமஹா கொண்டுவந்துள்ளது.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

இதில் முக்கியமானவை பைக்கின் முன்பக்கத்தில் தான் வழங்கப்பட்டுள்ளன. ஆர்6 பைக்கின் இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பிற்கு மாற்றாக புதிய ஆர்7 பைக்கில் ஒரே விளக்காக ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

இருப்பினும் ஹெட்லைட்டிற்கு இரு பக்கத்திலும் எல்இடி டிஆர்எல்களை பார்க்க முடிகிறது. அதேபோல் இந்த எல்இடி ஹெட்லைட் முன்பக்க காற்று ஏற்பானுக்கு பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதால் ஒளிரும்போது இரட்டை-பீம் டிசைனில் காட்சி தருகிறது.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

முன்பக்க எதிர் காற்று தடுப்பு கண்ணாடி முன்பை காட்டிலும் சற்று பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பைக்கின் பக்கவாட்டு பகுதியும் பெரிய ஸ்கூப்களுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்ஜினில் இருந்து வெளிவரும் சூடான காற்று ஓட்டுனரின் கால்களின் மீது படாது.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

பெட்ரோல் டேங்க் பகுதியில் பைக்கின் காற்று இயக்கவியல் பண்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இறுக்கமான லைன்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி ஆர்7 பைக்கின் பின்பக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல் கூர்மையான வடிவில் டெயில்லைட்டை கொண்டுள்ளது.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

ராவென் கருப்பு மற்றும் டீம் யமஹா நீலம் என்ற இரு விதமான நிறங்களில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த 2022 யமஹா பைக்கில், யமஹா நீல நிறத்தேர்வில் மட்டும் அலாய் சக்கர ரிம்களில் கூடுதல் ஸ்போர்டி தொடுதல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

ஆர்7 பைக்கில் மற்ற குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாக க்ளிப்-ஆன் ஹேண்டில்பார், சற்று பின்னோக்கி வழங்கப்பட்டுள்ள ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி, பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் சிறிய அளவிலான எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...
Yamaha R7 Details
Engine Type 2-cylinder, Liquid-cooled, EURO5, 4-stroke, 4-valves, DOHC
Displacement 689cc
Bore x stroke 80.0 x 68.6 mm
Compression ratio 11,5:1
Maximum power 54,0 kW (73,4 PS) @ 8.750 rpm
Limited power version 35,0 kW (47,6 PS) @ 7.750 rpm
Maximum torque 67,0 Nm (6.8 kg-m) @ 6.500 rpm
Clutch type Wet, Multiple Disc
Transmission system Constant Mesh, 6-speed
Front suspension USD fork
Rear suspension system Swingarm, (link suspension)
Front brake Hydraulic dual disc brake, Ø298 mm
Rear brake Hydraulic single disc brake, Ø245 mm
Front tyre 120/70ZR17M/C (58W) Tubeless
Rear tyre 180/55ZR17M/C (73W) Tubeless
Overall length 2.070 mm
Overall height 1.160 mm
Overall width 705 mm
Seat height 835 mm
Wheel base 1.395 mm
Minimum ground clearance 135 mm
Fuel tank capacity 13,0 l

வழக்கம்போல் புதிய ஆர்7 பெரும்பான்மையான மெக்கானிக்கல் பாகங்களை யமஹா எம்டி-07 பைக்குடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த வகையில் ஆர்7 பைக்கில் வழங்கப்பட்டுள்ள 689சிசி இணையான-இரட்டை என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 72.4 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 67 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மிரட்டலான ஸ்டைலில் வெளிவந்தது 2022 யமஹா ஆர்7!! முதலாவதாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது...

இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு ட்யுல்-சேனல் ஏபிஎஸ்-ஐ பெற்றுள்ள புதிய ஆர்7 பைக் ஐரோப்பாவில் இன்னும் சில வாரங்களில் விற்பனையை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
2022 Yamaha R7 Makes Global Debut – Official Specs Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X