யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! தயாராகும் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்...

யமஹா ரெட்ரோ ஸ்டைல் கொண்ட எக்ஸ்.எஸ்.ஆர்125 மோட்டார்சைக்கிளை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! தயாராகும் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்...

நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிள்களை கொண்ட எக்ஸ்.எஸ்.ஆர் வரிசையை விரிவுப்படுத்த யமஹா கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு வருகிறது. யமஹாவின் எக்ஸ்.எஸ்.ஆர்155 மோட்டார்சைக்கிளுக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! தயாராகும் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்...

இதுவும் புதிய 125சிசி-இல் விலை குறைவான எக்ஸ்.எஸ்.ஆர் பைக்கை யமஹா கொண்டுவருவதற்கு முக்கிய காரணமாகும். எக்ஸ்.எஸ்.ஆர்125 ஐரோப்பா உள்பட மற்ற நாட்டு சந்தைகளுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது.

யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! தயாராகும் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்...

இந்த யமஹா பைக் சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள ஹோண்டாவின் சிபி125ஆர் பைக்கிற்கு போட்டியாக விளங்கும். எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கிற்கான அனுமதி வேண்டி ஆவணம் போன்றதான ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! தயாராகும் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்...

இதை வைத்து தான் இத்தகைய யமஹா பைக் உருவாகவுள்ளதாக நாங்கள் கூறுகின்றோம். மேலும் இந்த தகவல்கள் மூலமாக எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கின் செயல்திறன் மற்றும் பரிமாண அளவுகளையும் அறிய முடிகிறது.

யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! தயாராகும் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்...

யமஹா ஆர்125 மற்றும் எம்டி-125 பைக்குகளில் பொருத்தப்படுகின்ற 125சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கிலும் பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! தயாராகும் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்...

அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 14.9 பிஎஸ் மற்றும் 8,000 ஆர்பிஎம்-இல் 11.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் அமைப்பின் வெவ்வேறான வால்வு செயலினால் குறைந்த செயல்திறன் இல்லாமல் நேரடியாகவே சிறந்த செயல்திறன் கிடைக்கும்.

யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! தயாராகும் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்...

என்ஜின் மட்டுமின்றி மேற்கூறப்பட்ட 125சிசி யமஹா பைக்குகளின் டைமண்ட் ஃப்ரேம் மற்றும் அலுமினியம் ஸ்விங்கார்ம்-ஐ கொண்ட சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு தான் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கிலும் பயன்படுத்தப்படவுள்ளது.

யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! தயாராகும் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்...

ப்ரேக்கிங் பணிக்கு எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கில் முன்பக்கத்தில் 292மிமீ-லும், பின்பக்கத்தில் ஏபிஎஸ் உடன் 220மிமீ-லும் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்படவுள்ளன. பிரபலமான எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்குடன் ஒப்பிடுகையில் இந்த புதிய 125சிசி பைக் 2 மிமீ நீளமானது; 1மிமீ அகலமானது; 10மிமீ உயரமானது.

யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! தயாராகும் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்...

எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கில் 17 இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்படவுள்ளன. இந்த பைக்கின் உலகளாவிய அறிமுகம் நடப்பு 2021ஆம் ஆண்டின் மூன்றாம் கால் பகுதியில் இருக்கலாம். இந்திய சந்தையை பொறுத்தவரையில் 150சிசி-இல் எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை அறிமுகப்படுத்த யமஹா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha XSR125 Retro-Styled Motorcycle In The Making.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X