துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் யெஸ்டி (Yezdi) நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் வெளியீட்டிற்கு முன்னதாக காட்சி தந்திருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

யெஸ்டி (Yezdi) நிறுவனம் மிக விரைவில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் மீண்டும் கால் தடம் பதிக்க இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. நிறுவனம், அட்வென்சர் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ரக வாகனங்களை இந்தியாவிற்காக தயாராக்கி வருகின்றது.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

இதன் அட்வென்சர் ரக வாகனம் யெஸ்டி ரோட்கிங் (Roadking) என்ற பெயரிலும், ஸ்கிராம்ப்ளர் ரக வாகனம் மிக எளிமையான பெயராக யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் (Scrambler) என்ற பெயரிலும் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த இருசக்கர வாகனங்களே தற்போது முதல் முறையாக அதன் முழு தரிசனத்தை வழங்கி இருக்கின்றன.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

Source: Motorbeam

யெஸ்டி நிறுவனம் அனைத்து மாடல் இருசக்கர வாகனங்களையும் இந்தியாவில் களமிறக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மேலும், இந்தியர்களை தனது இருசக்கர வாகனங்களின் பக்கம் ஈர்ப்பதற்கான பணிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் தற்போது ஓர் விளம்பர வீடியோ எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

இந்த நிலையிலேயே யெஸ்டி இருசக்கர வாகனங்கள் ஸ்பை செய்யப்பட்டிருக்கின்றன. ஆம், இருசக்கர வாகனங்களை விளம்பரத்திற்காக வீடியோ படமாக்கப்பட்டு வரும் தளத்தில் வைத்து ஸ்பை செய்யப்பட்டிருக்கின்றன. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

வெளியீட்டிற்கு முன்னதாகவே இருசக்கர வாகனங்கள் அதன் தரிசனத்தை முதல் முறையாக வழங்கி இருப்பது அதன் ரசிகர்கள் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேநேரத்தில், இந்த தகவல் கசிவு வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

யெஸ்டி ரோட்கிங் வாகனமே முழுமையாக காட்சியளித்திருக்கின்றது. ஸ்கிராம்பளர் டேங்க் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் இருசக்கர வாகனத்தின் இடத்தைக் குறி வைத்து யெஸ்டி ரோட்கிங் உருவாகியிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், இதன் தோற்றம் ஹிமாலயனை ஒத்ததாகக் காட்சியளிக்கின்றது.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

இருசக்கர வாகனம் சாலையில் பயணிக்கும் என்றால் நிச்சயம் இதனை பலர் ஹிமாலயன் என்ற கூறுவர். அந்தளவிற்கு ஹிமாலயனை ஒத்த தோற்றத்தை யெஸ்டி ரோட்கிங் பெற்றிருக்கின்றது. அதேநேரத்தில், அணிகலன் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் இப்பைக் மாறுபட்டு காணப்படுகின்றது.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

ஸ்பை படங்கள் வாயிலாக யெஸ்டி ரோட்கிங் பற்றிய சில முக்கிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. இருசக்கர வாகனத்தில் நீலம் மற்றும் வெள்ளை நிற தேர்வு வழங்கப்பட இருப்பது மற்றும் எரிபொருள் தொட்டியில் இரு செங்குத்தான கோடுகள் இடம் பெற இருப்பதும், அதில் யெஸ்டி என்ற பெயர் இடம் பெற இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

இத்துடன், எரிபொருள் தொட்டியின் பக்கவாட்டு பகுதியில் ஓர் ரப்பர் துண்டு வழங்கப்பட இருப்பதையும் இந்த படங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், முன் மற்றும் பக்கவாட்டு பகுதியைச் சூழ்ந்தவாறு இரும்புக் கூடு பொருத்தப்பட்டுள்ளது. இது விபத்தைத் தடுக்கும் பொருட்டும், ஜெர்ரி கேன்களை தாங்கி நிற்கும் பொருட்டும் வழங்கப்பட்டிருக்கின்றது.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

இதுமட்டுமின்றி, க்னக்கிள் குவார்டு (கைகளை பாதுகாக்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது), டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்போக் வீல்கள், ட்யூப் பொருத்தப்பட்ட டயர்கள் (ஆன்-ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு உகந்தது), ட்யூவல் சேனல் ஆன்டி லாக்கிங் பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவையும் இப்பைக்கில் இடம் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

மேலும், உயரமான வின்ட்ஸ்கிரீன், உயரமான எக்சாஸ்ட், ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கைகள் மற்றும் பேன்னியர்கள் ஆகியவையும் யெஸ்டி ரோட்கிங்கில் இடம் பெற இருக்கின்றன என்பதை தற்போதைய ஸ்பை படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்துடன், இன்னும் பல ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு உகந்த அம்சங்கள் யெஸ்டி ரோட்கிங் பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர்

யெஸ்டி ரோட்கிங் மோட்டார்சைக்கிளைப் போலவே ஸ்பை படங்களின் வாயிலாக ஸ்கிராம்ப்ளர் பைக்கில் இடம் பெற இருக்கும் அம்சங்கள் பற்றிய தகவலும் தெரிய வந்திருக்கின்றன. இருசக்கர வாகனத்தில் ரிப்பட் ஒற்றை துண்டு அமைப்பிலான இருக்கை, இரட்டை எக்சாஸ்ட் , டயர் ஹக்கர் மற்றும் அலாய் வீல்களை இப்பைக் பெற இருப்பது தெரிய வந்துள்ளது.

துளியளவும் மறைப்புகள் இல்ல... முதல் முறையாக முழுமையாக காட்சி தந்த Yezdi Roadking! வெளியீடுகூட ஆகல!

இதுமட்டுமின்றி, ஹேண்டில் பாரின் முனையில் கண்ணாடிகள், கருப்பு நிற எக்சாஸ்ட், உயரமான வின்ட்ஸ்கிரீன், பின்னிருக்கையாளர்களுக்கான ரெஸ்ட் பேட், க்ரூஸர் ரக இருக்கைகள் மற்றும் குரோம் பூச்சுக் கொண்ட எக்சாஸ்ட் உள்ளிட்டவ அம்சங்களுடன் மூன்றாவதாக ஓர் இருசக்கர வாகனம் காட்சியளித்திருக்கின்றது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Yezdi roadking and scrambler spied while tvc shoot
Story first published: Tuesday, November 30, 2021, 18:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X