பல லட்ச ரூபா சுசுகி ஹயபுசா சூப்பர் பைக்கை வாங்கிய இளம்பெண்! இந்த பைக்கை வாங்கிய முதல் இந்திய பெண்ணே இவர்தானாம்

சுசுகி ஹயபுசா சூப்பர் பைக்கை இளம் பெண் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பல லட்ச ரூபா சுசுகி ஹயபுசா சூப்பர் பைக்கை வாங்கிய இளம்பெண்... இந்த பைக்கை வாங்கிய முதல் இந்திய பெண்ணே இவர்தானாம்...

சுசுகி நிறுவனம், புதிய தலைமுறை ஹயபுசா பைக்கை மிக சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகத்தை இந்திய சூப்பர் பைக் பிரியர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். தற்போது, நாட்டில் கொரோனா வைரசால் இக்கட்டான சூழ்நிலை நிலவி வருகின்ற காரணத்தினால் கணிசமான அலகு ஹயபுசா பைக்குகளை மட்டுமே சுசுகி விற்பனைக்குக் களமிறக்கியது.

பல லட்ச ரூபா சுசுகி ஹயபுசா சூப்பர் பைக்கை வாங்கிய இளம்பெண்... இந்த பைக்கை வாங்கிய முதல் இந்திய பெண்ணே இவர்தானாம்...

களமிறக்கப்பட்ட அனைத்து அலகுகளுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு சில நாட்களிலேயே விற்று தீர்ந்துவிட்டதாக சுசுகி அண்மையில் தகவல் வெளியிட்டது. அவ்வாறு, பைக்கை அதிக ஆர்வத்துடன் வாங்கியதில் ஓர் இளம் பெண் அடங்குவார் என்கிற தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

பல லட்ச ரூபா சுசுகி ஹயபுசா சூப்பர் பைக்கை வாங்கிய இளம்பெண்... இந்த பைக்கை வாங்கிய முதல் இந்திய பெண்ணே இவர்தானாம்...

இந்தியாவிலேயே சுசுகி ஹயபுசா பைக்கை வாங்கிய முதல் இளம் பெண்ணும் இவரே ஆவார் என்ற கூடுதல் சிறப்பு தகவல்களும் வெளியாகியுள்ளன. சுசுகி ஹயபுசா அதன் பழமை தோற்றம் மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பல லட்ச ரூபா சுசுகி ஹயபுசா சூப்பர் பைக்கை வாங்கிய இளம்பெண்... இந்த பைக்கை வாங்கிய முதல் இந்திய பெண்ணே இவர்தானாம்...

அதாவது, இப்பைக்கில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் மட்டுமே மாற்றப்பட்டிருக்கின்றன. மிக தெளிவாக கூற வேண்டுமானால் நவீன அம்சங்களுடன் பழமையை தோற்றத்துடன் 2021 ஹயபுசா உருவாகியுள்ளது. எனவேதான் இந்திய சூப்பர் பைக் பிரியர்களை 2021 ஹயபுசா அதிகளவில் கவர்ந்திருக்கின்றது.

பல லட்ச ரூபா சுசுகி ஹயபுசா சூப்பர் பைக்கை வாங்கிய இளம்பெண்... இந்த பைக்கை வாங்கிய முதல் இந்திய பெண்ணே இவர்தானாம்...

எல்இடி மின் விளக்கு, வெளியேற்றம் (எக்சாஸ்ட்) செய்யும் குழாய், ஹேண்டில் பார், புதிய பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் 2021 சுசுகி ஹயபுசா பைக் பெற்றிருக்கின்றது. இதுமட்டுமின்றி, க்ரூஸ் கன்ட்ரோல், டிஎஃப்டி டேஷ், எட்டு விதமான ரைடிங் மோட்கள், சுசுகி ஈசி ஸ்டார்ட் சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் என பல்வேறு சிறப்பு வசதிகள் ஹயபுசாவில் இடம்பெற்றிருக்கின்றன.

பல லட்ச ரூபா சுசுகி ஹயபுசா சூப்பர் பைக்கை வாங்கிய இளம்பெண்... இந்த பைக்கை வாங்கிய முதல் இந்திய பெண்ணே இவர்தானாம்...

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட பைக்கையே இளம் பெண் ஒருவர் வாங்கியிருக்கின்றார். அப்பைக்கை அவரும், அவரது கணவரும சேர்ந்து சென்று டெலிவரி எடுத்திருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவை பியர் பைக்கர் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

Image Courtesy: Beard Bikerr

சுசுகி ஹயபுசா பைக்கை வாங்கியிருக்கும் அப்பெண்ணின் பெயர் அன்கிதா கன்னா என தகவல்கள் தெரிவிக்கின்றன. 101 அலகு ஹயபுசா பைக்குகளை மட்டுமே முதல் லாட்டில் சுசுகி நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியது. இப்பைக்கின் ஆரம்ப விலை ரூ. 16.4 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

பல லட்ச ரூபா சுசுகி ஹயபுசா சூப்பர் பைக்கை வாங்கிய இளம்பெண்... இந்த பைக்கை வாங்கிய முதல் இந்திய பெண்ணே இவர்தானாம்...

2021 சுசுகி ஹயபுசா பைக்கில் 1,340 சிசி திறன் கொண்ட இன்லைன்-4 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 190எச்பி மற்றும் 150 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த திறன் பழைய மாடல் ஹயபுசாவைக் காட்டிலும் சற்று குறைவு என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இதில், எலெக்ட்ரானிக் எய்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Young Indian Girl Takes Delivery Of 2021 Suzuki Hayabusa SuperBike. Read In Tamil.
Story first published: Thursday, June 17, 2021, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X