சொன்னா கேக்க மாட்டீங்க.. ஹெல்மெட்டின் அவசியம் என்ன என்பதை இந்த வீடியோ பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க...

தலைக்கவசத்தின் அருமையை உணர்த்தக் கூடிய ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றது. அதிர்ச்சி சம்பவம்குறித்த வீடியோ தகவலை இப்பதிவில் காணலாம்.

சொன்னா கேக்க மாட்டீங்க.. ஹெல்மெட்டின் அவசியம் என்பதை இந்த வீடியோ பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க... கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய இளைஞர்...

ஹெல்மெட்டின் அவசியம்குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதை புரிந்து கொள்வதே இல்லை. அந்த விதி நமக்கானது அல்ல என்ற நினைப்பில் தலைக்கவசம் அணியாமல் வலம் வருகின்றனர். இதன் விளைவாக கையில் மிஷினுடன் தயாராக நின்றுக் கொண்டிருக்கும் காவலரிடத்தில் சிக்கி, விதிமீறலுக்கான அபராதத்தைப் பெறுகின்றனர்.

சொன்னா கேக்க மாட்டீங்க.. ஹெல்மெட்டின் அவசியம் என்பதை இந்த வீடியோ பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க... கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய இளைஞர்...

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதில் ஹெல்மெட்டின் பங்கு அளப்பறியாதது. எனவேதான் இந்திய மோட்டார் வாகன சட்டம் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் பயணத்தின்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்துகின்றது. இருசக்கர வாகனத்தை இயக்குபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட்டை அணிய வேண்டும் என்பது விதியாகும்.

சொன்னா கேக்க மாட்டீங்க.. ஹெல்மெட்டின் அவசியம் என்பதை இந்த வீடியோ பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க... கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய இளைஞர்...

ஆனால், இதனை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. இந்தநிலையிலேயே ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்தக் கூடிய ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. சம்பவம்குறித்த வீடியோவை ரோட் அடிக்ட் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

சொன்னா கேக்க மாட்டீங்க.. ஹெல்மெட்டின் அவசியம் என்பதை இந்த வீடியோ பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க... கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய இளைஞர்...

சாலையில் சென்றுக் கொண்டிருந்த மாருதி சுசுகி எர்டிகா கார் திடீரென நடுரோட்டில் நின்றதால், அதன் பின்னாடி வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதிகின்றது. இதையே தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ காட்டுகின்றது. சம்பவத்தின்போது, இருசக்கர வாகன ஓட்டி பைக்கில் இருந்து தூக்கி வீசப்படுவதை நம்மால் காண முடிகின்றது.

சொன்னா கேக்க மாட்டீங்க.. ஹெல்மெட்டின் அவசியம் என்பதை இந்த வீடியோ பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க... கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய இளைஞர்...

இதற்கு பைக் அதிக வேகத்தில் வந்தது ஓர் காரணமாக இருந்தாலும், கார் நடுரோட்டில் திடீரென நின்றதே மிக முக்கியமான காரணமாகும். வாகனத்தைச் சற்று கவனத்துடன் சாலையோரத்தில் நிறுத்தியிருந்தால் இந்த விபத்து சம்பவமே அரங்கேறியிருக்கின்றது. அதேநேரத்தில், தூக்கி வீசப்பட்ட இளைஞரின் முகம் நேரடியாக காரின் பின்பக்க கண்ணாடிமீது சென்று மோதுவதை நம்மால் காண முடிகின்றது.

சொன்னா கேக்க மாட்டீங்க.. ஹெல்மெட்டின் அவசியம் என்பதை இந்த வீடியோ பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க... கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய இளைஞர்...

இந்த விபத்தினால் இருசக்கர வாகன ஓட்டியின் மேல் வாய் பகுதியில் லேசான காயங்கள் ஏற்பட்டன. உண்மையில், விபத்து நேரத்தில் இளைஞர் ஹெல்மெட் அணியாமல் இருந்திருந்தால் நிச்சயம் விபரீதம் பெரிதாக மாறியிருக்கும். இதற்கு அவரது பைக்கே முக்கிய சான்று. பைக்கின் முன் பக்கம் இவ்விபத்தால் மிக மோசமாக பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றது.

சொன்னா கேக்க மாட்டீங்க.. ஹெல்மெட்டின் அவசியம் என்பதை இந்த வீடியோ பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க... கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய இளைஞர்...

ஆனால், நல்ல வேலையாக இருசக்கர வாகன ஓட்டி லேசான காயங்களுடன் தப்பினார். இந்த ஒட்டுமொத்த சம்பவம் அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டி அணிந்திருந்த ஹெல்மெட் கேமிராவில் பதிவாகியிருந்தது. இவ்வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வீடியோவை அவர் பதிவிட்டிருக்கின்றார்.

சொன்னா கேக்க மாட்டீங்க.. ஹெல்மெட்டின் அவசியம் என்பதை இந்த வீடியோ பாத்தாவது தெரிஞ்சிக்கோங்க... கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய இளைஞர்...

அந்த இளைஞர் அட்வென்சர் பயண பிரியர் ஆவார். இதற்கான பயிற்சிக்கு கேடிஎம் பைக்கில் அவர் சென்றுக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து சம்பவம்குறித்த அனைத்தும் தற்செயலாக கேமிராவில் பதிவாகியிருக்கின்றன. சாலையில் பயணிக்கும்போது பாதுகாப்பு மிக அவசியம். எனவேதான் அரசு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

Image Courtesy: Road Addict

அண்மையில்கூட காரில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக காரின் முன்பக்க பயணிகளுக்கான ஏர் பேக் கட்டாயம் என அரசு உத்தரவிட்டது. இந்த புதிய சட்டம் மிக விரைவில் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதேபோன்று, முன்னதாக ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பிரேக்கிங் வசதியையும் அரசு கட்டாயமாக்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Young Man Saved By Helmet; Here Is Viral Video & Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X