சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல!

சார்ஜ் ஏற்றும்போது திடீரென மின்சார இருசக்கர வாகனங்கள் தீ பற்றி எரிந்திருக்கின்றன. இந்நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல! எங்கு நடந்தது தெரியுமா?

மறுபடியுமா!.. என அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரே நேரத்தில் இரு மின்சார இருசக்கர வாகனங்கள் தீ விபத்தில் சிக்கியிருக்கின்றன. இந்த நிகழ்வு மின் வாகன பிரியர்களையும், மின் வாகன பயன்பாட்டாளர்களையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கின்றது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்திலேயே எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தீ விபத்து நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது.

சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல! எங்கு நடந்தது தெரியுமா?

தீ விபத்தைச் சந்தித்த வாகனங்கள் அந்தநேரத்தில் இயங்கக்கூடவில்லை என அதன் உரிமையாளர் தெரிவித்திருப்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஹைதராபாத் குசைகுடா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபாபு. இவரே தீ விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்களின் உரிமையாளார் ஆவார். இவர் மிக சமீபத்திலேயே இந்த இரு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையும் வாங்கியதாகக் கூறப்படுகின்றது.

சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல! எங்கு நடந்தது தெரியுமா?

பொதுவாக பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபின்னர் இருசக்கர வாகனங்களை அவர் சார்ஜ் போடுவாராம். அந்தவகையில், நேற்று அவர் அவருடைய இல்லத்தில் வைத்து இருசக்கர வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றியிருக்கின்றார். அப்போதே இந்த தீ விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. சுமார் நான்கு மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்வு அரங்கேறியதாகக் கூறப்படுகின்றது. தீ விபத்தின்போது பெருத்த வெடி சத்தம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல! எங்கு நடந்தது தெரியுமா?

அதிக உஷ்ணத்தின் காரணமாக பேட்டரி வெடித்ததன் வாயிலாக அந்த சத்தம் உருவாகியிருக்கின்றது. இதைத்தொடர்ந்தே தீ மளமளவென எரிய தொடங்கியிருக்கின்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஹரிபாபு போராடியிருக்கின்றார். இருப்பினும், கட்டுக்கடங்காமல் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கின்றது. இதன் விளைவாக இருசக்கர வாகனம் இரண்டும் தீயிவிற்கு இரையாகியிருக்கின்றன.

சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல! எங்கு நடந்தது தெரியுமா?

தீ விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் வந்த தீயணைப்பு துறையினரும் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், வெறும் கூடாகவே அந்த வாகனங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்னதாக மிக சமீபத்திலேயே ஹைதராபாத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தீ விபத்து சம்பவம் ஒன்று அரங்கேறியது. மூன்று நாட்களுக்கு முன்னரே அது நடைபெற்றது.

சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல! எங்கு நடந்தது தெரியுமா?

இதன் தாக்கம் மின் வாகன பயன்பாட்டாளர்கள் குறைவதற்குள்ளாகவே இரண்டாவது மின்சார இருசக்கர வாகன தீ விபத்து நிகழ்வாக இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. தற்போது நடைபெற்றிருக்கும் தீ விபத்து சம்பவத்தில் எந்த அசம்பாவிதமும் அரங்கேறவில்லை. அதாவது யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேலையில், கடந்த சனிக்கிழமை அன்று அரங்கேறிய தீ விபத்து சம்பவத்தில் ஒருவருக்கு கடுமையான தீ காயங்கள் ஏற்பட்டிருக்கின்றது.

சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல! எங்கு நடந்தது தெரியுமா?

இந்த தீ விபத்து நிகழ்வு வனஸ்தலிபுரம் என்ஜிஓ காலனிலேயே அரங்கேறியது. இந்த நிகழ்வும் இருசக்கர வாகனத்திற்கு சார்ஜேற்றும்போதே அரங்கேறியதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அவர் சார்ஜ் ஏற்றுவதற்காக ஸ்விட்சை ஆன் செய்த சில நிமிடங்களிலேயே இருசக்கர வாகனத்தில் இருந்து தீ வெளியேற தொடங்கியிருக்கின்றது. இதனால், எலெக்ட்ரிக் இருசக்கரத்தின் பெரும்பாலான முக்கிய பாகங்கள் தீயிற்கு இரையாகி நாசமாகியிருக்கின்றன.

சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல! எங்கு நடந்தது தெரியுமா?

மேலும், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது கடுமையான பாதிப்பைச் சந்தித்த காரணத்தினால் அதன் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றிருக்கின்றார். இதற்கு முன்னதாகவும் இதே தெலங்கானா மற்றும் இந்திய பிற மாநிலங்களான ஆந்திரா மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில் மின்சார இருசக்கர வாகனங்கள் அதிகளவில் தீ விபத்தைச் சந்தித்திருக்கின்றன.

சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல! எங்கு நடந்தது தெரியுமா?

குறிப்பாக, தெலங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் கடந்த ஜூ8 அன்று ஓர் தீ விபத்து சம்பவமும், ஹைதராபாத்தில் மே 11 அன்று ஓர் தீ விபத்து நிகழ்வும், ஆந்திராவின் விஜயவாடா மாநிலத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஓர் தீ விபத்து நிகழ்வும் அரங்கேறியிருக்கின்றது. இதுபோன்று எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக தீ விபத்தில் சிக்கி வருவது அதன் பயன்பாட்டாளர்களை கடுமையான அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

சார்ஜ் போட்டது ஒரு குத்தமா!! குபீரென பற்றி எரிந்த இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... ஒன்னுகூட மிஞ்சல! எங்கு நடந்தது தெரியுமா?

இந்த அச்சமானது புதிதாக மின் வாகனங்களை வாங்க திட்டமிட்டிருப்போரையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலை மின் வாகன விற்பனையை பெருமளவில் பாதிக்கச் செய்யலாம் என வாகன உலகம் அஞ்சுகின்றது. ஆகையால், விரைவில் இந்த அசம்பாவிதங்களுக்கு ஓர் முடிவுக்கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, அரசும், மின் வாகன உற்பத்தியாளர்களும் இந்த பணியில் களமிறங்கிவிட்டனர். அதாவது, அரசு பாதுகாப்பான மின் வாகனங்களை உருவாக்கும் வழிமுறைகளைத் தயாரிக்கும் பணியிலும், மின் உற்பத்தியாளர்கள் தீ விபத்தைத் தவிர்க்கக் கூடிய தொழில்நுட்பம் கொண்ட மின் வாகனங்களை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றன.

குறிப்பு: படங்கள் அனைத்து உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
2 electric bikes catches fire in hydrabad
Story first published: Tuesday, August 16, 2022, 14:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X