பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர்.. இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க...

ஏப்ரல் மாதம் விற்பனையான டூவீலர் சேல்ஸ் குறித்த ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணலாம்

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

இந்தியாவில் கார்களை விட இரு சக்கர வாகனங்களில் பயன்பாடு அதிகம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 10 டூவீலர்கள் குறித்த ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த செய்தியில் கடந்த மாதம் எந்த பைக் அதிகம் விற்பனையானது . எது விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது? எது ஏற்றம் கண்டுள்ளது என விரிவாகக் காணலாம் வாருங்கள்

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் மொத்தம் 8,54,056 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொத்தம் 6,84,079 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. ஆக இந்தாண்டு கூடுதலாக 1,69,977 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

கடந்தாண்டை விட பெரும்பாலான பைக்கள் விற்பனை அதிகமாகியுள்ளன. பஜாஜ் பல்சர் மற்றும் சுஸூகி ஆக்சஸ் ஆகிய டூவீலர்கள் மட்டுமே விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த பட்டியலைப் பொருத்தவரை பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் இரண்டுமே கணக்கிடப்படும்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

வழக்கம் போல கடந்த மாதமும் ஹீரோ ஸ்பிளெண்ட்ர் பைக்கே விற்பனையில் டாப் இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் மொத்தம் 2,34,084 பைக்குகள் விற்பனையாகியுள்ளனர். இது கடந்த 2021 ஏப்ரலில் விற்பனையின் எண்ணிக்கை 1,93,508 ஆக இருந்தது. ஒரே ஆண்டில் 40,577 பைக்குகள் அதிக விற்பனை இலக்கை அடைந்துள்ளது. ஒட்டு மொத்த பைக் மார்கெட்டில் இந்த பைக் 27.41 மார்கெட் பங்கைப் பிடித்துள்ளது.

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை ஹோண்டா ஆக்டிவா பைக் பிடித்துள்ளது. மொத்தம் 1,63,357 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2021ம் ஆண்டு 1,09,678 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. ஒரே ஆண்டில் விற்பனை 48.94 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் 19.13 சதவீத பங்கை பிடித்துள்ளது.

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

மூன்றாவது இடத்தில் ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் இருக்கிறது. இது மொத்தம் 1,05,413 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு 79,416 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. 32.74 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. அடுத்தாக ஹீரோ நிறுவனத்தின் எச்.எஃப் டீலக்ஸ் இது மொத்தம் 1,00,601 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இந்த பைக் கடந்தாண்டு ஏப்ரல் விற்பனையை விட 41.11 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

இந்த பட்டியலில் 5வது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் உள்ளது. இது கடந்த மாதம் மொத்தம் 60,957 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 35,387 ஸ்கூட்டர்கள்தான் விற்பனையாகியிருந்தது. ஒரே ஆண்டில் விற்பனை 138.39 சதவீதம் வளர்ந்துள்ளது. டாப் 10 பட்டியலிலேயே அதிக வளர்ச்சியைப் பெற்ற ஸ்கூட்டர் இது தான்.

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

அடுத்த இடத்தில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் இருக்கிறது. இது மொத்தம் 46,040 பைக்குகளை கடந்த ஏப்ரல் மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மொத்தம் 66,586 பைக்குகள் விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை 30.86 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

அதே நேரத்தில் அடுத்த இடத்தில் இந்நிறுவனத்தின் பிளாட்டினா பைக் இருக்கிறது. இது மொத்தம் 39,316 பைக்குகள் விற்பனையாகியிருக்கிறது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மொத்தம் 35,467 பைக்குகள் விற்பனையாகியிருந்தன. இது 10.85 சதவீத வளர்ச்சியாகும்.

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

பட்டியலில் 8வது இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல் இருக்கிறது. கடந்த ஏப்ரலில் மொத்தம் 38,780 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது.இது கடந்த 2021 ஏப்ரல் மாதம் 25,977 ஆக இருந்தது. இது விற்பனையில் 49.29 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் அடுத்து வீழ்ச்சியைச் சந்தித்த ஸ்கூட்டர் சுஸூகி ஆஸஸ் ஸ்கூட்டர் தான் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 32,932 ஸ்கூட்டர் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் இது 53,285 ஆக இருந்தது. 38.20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர் . . . இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க . . .

பட்டியலில் கடைசி இடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 32,575 பைக்குகள் விற்பனையாகியுள்ளது. கடந்த 2021 எப்ரல் மாதம் இது 23,298 ஆக இருந்தது. தற்போது இது 39.82 சதவீதம் வளர்ச்சியாகும். மொத்தத்தில் வாகன உற்பத்தியாளர்களுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் ஜாக்பாட்தான்.

Most Read Articles
English summary
2022 April TWo wheeler sales report over all sale hiked know full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X