2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கான 2022 ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிள் புதிய நிறங்கள் மற்றும் கூடுதல் ஆற்றல்களுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய சிபி300ஆர் பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிள் முதன்முதலாக கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்தியா பைக் வார கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு இந்த ஹோண்டா நியோ-ரெட்ரோ ஸ்ட்ரீட் நாக்டு பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

இந்த நிலையில் தற்போது ஐரோப்பிய சந்தைகளுக்கான 2022 ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக ஐரோப்பாவில் விற்பனையில் இல்லாமல் இருந்த சிபி300ஆர் மாடலின் புதிய அவதாரத்தில் பைக்கின் ஸ்டைல் சில பகுதிகளில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பைக் முற்றிலுமாக புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாறியுள்ளது.

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

இவற்றுடன் சில செயல்பாட்டு மேம்பாடுகளையும் இந்த ஜப்பானிய பைக் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளதால், புதிய சிபி300ஆர் பைக்கில் ரைடிங்கின் போது சிறந்த உணர்வு கிடைக்கிறது. இருப்பினும் ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு உண்டான நியோ-ரெட்ரோ வடிவம் அப்படியே தொடரப்பட்டுள்ளது. ஏனெனில் இதுவே ஹோண்டா சிபி பைக்குகளின் அடையாளமாகும்.

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள அதே முற்றிலும் கருப்பு நிறத்தேர்வு தான் ஐரோப்பாவில் களமிறக்கப்பட்டுள்ள சிபி300ஆர் பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்டேட்களாக கொடுக்கப்பட்டுள்ள கருப்பு நிற ஹெட்லேம்ப் பெஸல் மற்றும் ரேடியேட்டர் கௌல்கள் 2022 சிபி300ஆர் பைக்கை புதுமையானதாக காட்டுகின்றன. அதேபோல் எக்ஸாஸ்ட் குழாயும் கூடுதலாக மேல்நோக்கி வளைக்கப்பட்டதாக பொருத்தப்பட்டுள்ளது.

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

சிபி300ஆர் பைக்கிற்கு ஏற்கனவே கன்பவுடர் கருப்பு மெட்டாலிக் மற்றும் கேண்டி க்ரோம்ஸ்பியர் சிவப்பு என்கிற இரு நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றுடன் தற்போது பேர்ல் டஸ்க் மஞ்சள் மற்றும் மேட் பேர்ல் நீலம் என்கிற இரு புதிய பெயிண்ட் தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அப்டேட்களினால், ஹோண்டா சிபி650ஆர் மற்றும் சிபி1000ஆர் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் அளவில் மட்டுமே சிறியதாக உள்ளதே தவிர்த்து, ஸ்டைலில் இணையானதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

2022 சிபி300ஆர் பைக்கில் இரட்டை-பார் அமைப்புடன் எல்இடி ஹெட்லேம்ப், தடிமனான எல்இடி டெயில்லைட், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் நெகட்டிவ் எல்சிடி திரை உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறையும் சிபி300ஆர் பைக்கில் இணைப்பு வசதியை ஹோண்டா வழங்கவில்லை. தற்கால பைக்குகளில் மொபைல் உடன் இணைக்கும் வசதி அடிப்படையானதாக மாறி வருகிறது.

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

இயந்திர பாகங்களை பொறுத்தவரையில், இந்திய வெர்சனுடன் 2022 சிபி300ஆர் பைக்கின் ஐரோப்பிய வெர்சனும் ஒத்து போகிறது. அழுத்தப்பட்ட இரும்பு டைமண்ட்-ஸ்டைல் ஃப்ரேமில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சிபி300ஆர் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 7 நிலைகளாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஷோவாவின் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

இரும்பினால் தயாரிக்கப்படும் ஸ்விங்கார்ம் ஒழுங்கற்ற வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 144 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஹோண்டா நியோ-ரெட்ரோ பைக்கில் பிரேக்கிங் பணியினை முன்பக்கத்தில் நிஸின் 4-பிஸ்டன் காலிபர் உடன் 296மிமீ டிஸ்க்கும், பின்பக்கத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் 220மிமீ டிஸ்க்கும் கவனித்து கொள்கின்றன. இவற்றிற்கு உதவியாக இரட்டை-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

2022 சிபி300ஆர் பைக்கில் 286சிசி, DOHC, 4-வால்வு, லிக்யுடு-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் முந்தைய சிபி300ஆர் பைக்கில் 8,000 ஆர்பிஎம்-இல் 30.4 பிஎச்பி பவரை வெளிப்படுத்திய நிலையில், புதிய சிபி300ஆர் பைக்கில் 9,000 ஆர்பிஎம்-இல் 31.1 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் டார்க் திறனில் மாற்றமில்லை, 27.5 என்எம் தான். இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

2022 ஹோண்டா சிபி300ஆர் பைக் ஐரோப்பாவில் வெளியீடு!! மேம்படுத்தப்பட்ட ஸ்டைல் & கூடுதல் இயக்காற்றல்!

இந்த டிரான்ஸ்மிஷன் அமைப்பில் தற்போது மென்மையான & விரைவாக கியர் மாற்றத்திற்காக உதவி ஸ்லிப்பர் க்ளட்ச் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜன.12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 2022 ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.2.77 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் சிபி300ஆர் பைக்கை ஹோண்டா அதன் பிக் விங் டீலர்ஷிப் மையங்கள் வாயிலாக விற்பனை செய்கிறது.

Most Read Articles
English summary
2022 Honda CB300R debuts in European markets in an updated avatar.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X