இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

2022 நின்ஜா 400 பைக்கின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ள நிலையில், மிகவும் குறைவான விலையில் புதிய கவாஸாகி பைக் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

இந்திய சந்தையில் 2022 கவாஸாகி நின்ஜா 400 (2022 Kawasaki Ninja 400) பைக்கின் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. 2022 நின்ஜா 400 பைக்கை கவாஸாகி நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விலை 4.99 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

கவாஸாகி நிறுவனம் நின்ஜா 400 பைக்கை இந்தியாவில் உற்பத்தி செய்வதில்லை. மாறாக முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இதனை ''கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் - சிபியூ'' (Completely Built Unit - CBU) என்கின்றனர். இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாகவே இந்த பைக்கின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

2022 கவாஸாகி நின்ஜா 400 பைக்கில், 399 சிசி, லிக்யூட் கூல்டு பேரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானது ஆகும். அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 44.8 பிஹெச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்மில் 37 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கேடிஎம் ஆர்சி390 (KTM RC 390), டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 (TVS Apache RR 310) மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் (BMW G 310 RR) ஆகிய பைக்குகளுடன் கவாஸாகி நின்ஜா 400 பைக் போட்டியிட்டு வருகிறது.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

டிசைனை பொறுத்தவரையில் 2022 கவாஸாகி நின்ஜா 400 பைக்கானது, கிட்டத்தட்ட பழைய பிஎஸ்-4 மாடலை போலவே உள்ளது. இந்த பைக்கின் முன் பகுதியில் ட்வின் ஹெட்லேம்ப்கள் செட்-அப் (எல்இடி) வழங்கப்பட்டுள்ளது. மேலும் முரட்டுத்தனமான எரிபொருள் டேங்க் மற்றும் ஸ்பிளிட் சீட் ஆகிய அம்சங்களும் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

சஸ்பென்ஸனை பொறுத்தவரையில் 2022 கவாஸாகி நின்ஜா 400 பைக்கின் முன் பகுதியில், டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஸனும், பின் பகுதியில் மோனோ ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், இந்த பைக்கின் 2 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 2022 கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

எனவே 2022 கவாஸாகி நின்ஜா 400 பைக் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும். 2022 கவாஸாகி நின்ஜா 400 பைக் மொத்தம் 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். எபோனி உடன் லைம் க்ரீன் மற்றும் க்ரீன் ஹைலைட்கள் உடன் மெட்டாலிக் கார்பன் க்ரே ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் 2022 கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

கவாஸாகி நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக மிகவும் விலை குறைவான புதிய பைக் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பைக் வரும் செப்டம்பர் 25ம் தேதி (September 25) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

அனேகமாக வரும் செப்டம்பர் 25ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது கவாஸாகி டபிள்யூ175 (Kawasaki W175) பைக்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கவாஸாகி நிறுவனம் டபிள்யூ175 பைக்கை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

எனவே கவாஸாகி நிறுவனத்தால் இந்த பைக்கின் விலையை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். இதன்படி இந்த பைக்கின் விலை வெறும் 1.50 லட்ச (எக்ஸ் ஷோரூம்) ரூபாயாக மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. கவாஸாகி நிறுவனத்திடம் இருந்து இவ்வளவு குறைவான விலையில் புதிய பைக்கா? என நீங்கள் ஆச்சரியம் அடைவது புரிகிறது.

இந்தியாவிலேயே உற்பத்தி... இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி பைக்கா? வரும் 25ம் தேதி லான்ச் ஆகுது!

ஆனால் உறுதியான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு நாம் வரும் செப்டம்பர் 25ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். ஒருவேளை கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், 177 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 13 பிஹெச்பி பவரையும், 13.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2022 kawasaki ninja 400 customer deliveries begin in india
Story first published: Tuesday, September 13, 2022, 19:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X